நினைவாற்றல் ரயில்
நினைவாற்றல் ரயில்
விளையாட்டின் நோக்கம்:
‘யாத்திரை’ என்பது குழந்தைகள் பல்வேறு புனித ஸ்தலங்களின் பெயர்களையும் அவற்றுடன் தொடர்புடைய தெய்வங்களையும் பக்தியுடனும் மரியாதையுடனும் நினைவுகூரும் ஒரு குழுச் செயலாகும். இது நமது மாறுபட்ட மற்றும் வளமான பாரம்பரியத்தின் தனித்துவத்தையும் வலியுறுத்துகிறது.
கற்பிக்கப்படும் குணங்கள்:
- கற்பனை
- கவனம்
- நினைவாற்றல்
- பக்தி
- ஆர்வம்
விளையாட்டு:
- குரு குழந்தைகளை ஒரு வட்டவடிவில் அமரச் சொல்கிறார்.
- அவர் ஒரு உதாரணத்தின் உதவியுடன் செயல்பாட்டை விளக்குகிறார்.
- முதல் குழந்தை “நான் பூரிக்கு யாத்திரை சென்றேன், ஜகன்நாதரை தரிசனம் செய்தேன்” எனச் சொல்கிறது.
- ஒவ்வொரு குழந்தையும் ஒரு புனித ஸ்தலத்தின் பெயரையும் அதனுடன் தொடர்புடைய தெய்வத்தையும் உச்சரிப்பதன் மூலம் செயல்பாடு இந்த முறையில் தொடர்கிறது.
- ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு புனித ஸ்தலத்தின் பெயரை திரும்பச் சொல்லும் அல்லது தான் சென்ற புனித தலத்தின் பெயரை நினைவுபடுத்த முடியாத குழந்தை விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.
குருக்களுக்கு குறிப்புகள்:
- இந்த புனித ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு வகுப்பு விவாதத்தை விளையாட்டுக்குப் பின் நடத்தலாம்.
- குழந்தைகள் வெவ்வேறு கோவில்களுக்குச் சென்ற போது ஏற்பட்ட நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கலாம்!!
- ஆன்லைனுக்கும் பொருந்தும் !!