ஸ்வாமிக்கு அருகிலா, தொலைவிலா

Print Friendly, PDF & Email
ஸ்வாமிக்கு அருகிலா, தொலைவிலா
  1. குழந்தைகளிடம், நாம் கைகளால் செய்யக்கூடிய பலவித செயல்களைப் பட்டியலிடச் சொல்லவும்.
  2. அந்தச் செயல்களை நல்ல செயல்கள், தீய செயல்கள் என்று வகைப்படுத்தச் சொல்லவும்.
  3. அந்தச் செயல்களைத் தனித்தனியாக ஒவ்வொரு துண்டுக் காகிதத்தில் எழுதச்சொல்லி, தனித்தனி சீட்டுகளாக மடிக்கவும்.
  4. அத்தனை சீட்டுகளையும் ஒரு பெட்டியில் இட்டு மூடி, நன்கு குலுக்கி விடவும்.
  5. ஒவ்வொரு குழந்தையையும் பெட்டியிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச்சொல்லவும்.
  6. நல்ல செயல்கள் எழுதப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்த குழந்தைகளை கடவுள் படத்தின் அருகாமையில் நிற்கச்சொல்லவும்.
  7. தீய செயல்கள் எழுதப்பட்ட சீட்டை எடுத்த குழந்தைகளை கடவுள் படத்தின் அருகிலிருந்து விலகி எதிரே அறையின் மறுமுனையில் நிற்கச் செய்யவும்.
  8. கடவுள் படத்திலிருந்து விலகியுள்ள குழந்தைகளுக்கு அதிக சந்தர்ப்பம் கொடுத்து, அவர்கள் கடவுள் படத்திற்கு அருகில் வரும் வரை, ஒரு சுற்றுக்கு ஒரு முறை என்று மீண்டும் மீண்டும் சீட்டு எடுக்கச் சொல்லவும்.
நல்ல செயல்கள் தீயசெயல்கள்
கடவுள் நாமம் எழுதுதல் சுவற்றில் தேவை இல்லாதவைகளைக் கிறுக்குதல்
பொருட்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுதல் அனுமதியின்றி பிறர் பொருட்களை அபகரித்தல்
பிறரை ஊக்கப்படுத்த, கை தட்டுதல் பிறர் கீழே விழும்போது கை தட்டி சிரித்தல்
பிறருக்கு உதவி புரிதல் பிறரை அடித்து, கிள்ளி துன்பம் கொடுத்தல்
பள்ளியிலும்,பாலவிகாஸ் வகுப்புகளிலும் குறிப்பு எடுத்தல் பரிட்சையில் பார்த்து எழுதுதல்(copy அடித்தல்)
வீட்டு வேலைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுதல். உணவை வீணாக்குதல், எறிதல்
தாவரங்களுக்கு நீர் ஊற்றுதல் மலர்களையும் இலைகளையும் தேவை இன்றி பறித்தல்

நீதி

எப்பொழுதும் நல்லதையே செய்.

நல்ல செயல் செய்வதன் மூலம் நாம் கடவுளை நெருங்க முடியும்.

கைகளை எப்போதும் உருப்படியான செயல்களைச் செய்யப் பயன்படுத்து. பிறருக்கு உதவி செய்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன