ஸ்ரீ கணேஶ – செயற்பாடு

Print Friendly, PDF & Email
அரச இலை உபயோகித்து விநாயகர் செய்தல்

கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
  • கூட்டு முயற்சி
  • சுற்றுப்புறச் சூழலைக் காத்தல்
  • குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவித்தல்
தேவையான பொருட்கள்:
  • அரச இலைகள்
ஆயத்தமாகுதல்:

குருமார்கள், அவரவர் வகுப்பில் இதற்கு முன் கற்பிக்கப்பட்ட ஸ்லோகம், பஜனைகளை நினைவு கூறவும். முதலில், விநாயகரின் திருவுருவச் சிறப்புகளைக் குழந்தைகளை விவரிக்கச் சொல்லவும். உதாரணத்திற்கு, பெரிய உடல், யானை முகம், பெரிய காது, மேலும் பல.

வகுப்பிலுள்ளக் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொருத்துக் குழுக்களாகப் பிரிக்கலாம். அரச இலைகளை அவர்களுக்கு விநியோகிக்கவும். ஒவ்வொரு குழு உருவாக்கும் உருவமும் வேறுபடும். அதனால் அவரவருக்குத் தேவையான அளவு இலைகளை எடுத்துக்கொள்ளலாம்.

செயற்பாடு:

குழந்தைகளை, அந்த இலைகளை வைத்து விநாயகப் பெருமானின் உருவத்தை வடிவமைக்கச் சொல்லவும். குழந்தைகளுக்குக் குழுவாக செயல்படவும், வகுப்பில் நல்லொழுக்கத்தைக் கடைபிடிக்கவும் கற்றுக் கொடுக்கவும். அவர்களை சுயமாக சிந்தித்து வடிவமைக்கவும் ஊக்குவிக்கவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன