ஸுப்ரபாதம் முன்னுரை(Story of Vinashpuram-ta)
ஸுப்ரபாதம் முன்னுரை
உருவகக்கதை:
வினாசபுரி என்ற நகரத்தை ‘தீரஜா’ என்ற அரசன் ஆண்டான். அவனுக்கு மாநஸராணி என்ற அழகான அரசி இருந்தாள். அவள் அழகும், திறமையும் உடையவள். ஆனால் அவளிடம் ஒரு குறை இருந்தது. அவள் குழம்பிய மனம் கொண்டவளாக இருந்ததால் அவளாகவே ஒரு சரியான தீர்மானத்திற்கு வரமுடியாது. ஆகவே எதற்கும் அவள் மந்திரிகளை எதிர்ப்பார்த்தாள். அவர்கள் பெயர்: ரஜோதத்தா, தமோதத்தா. அவர்களோ அரசியை தவறான வழியில் செலுத்தும் கொடுமைக்காரர்கள். அரசன் அரசியை மிகவும் நேசித்தான். அவள் எது கேட்டாலும் நிறைவேற்றினான். அரசியின் தீர்மானமே அரசனின் ஆணையாக இருந்தது.அத்தேசத்து மக்கள் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் அரசன், அரசி, விருப்பப்படி நடந்தனர். அரச குடும்பமோ, மக்களைப் பாபமான, தீய காரியங்களைச் செய்வதற்குத் தூண்டியபோது, மக்கள் அப்படியே செய்து முடித்தனர். ஆகவே தேசம் பாழாகிக்கொண்டிருந்தது. அந்நாட்டு மக்கள் வருத்தத்தோடு இருந்தனர். சுற்றுப் புறத் தாரையும் வருத்தத்தில் ஆழ்த்தினர். ஆகவே இதனால் அத்தேசம் முழுதும் அழிகிற நிலையை எய்தியது.
ஒரு நாள் நல்ல காலம் பிறந்தது. அத்தேசத்திற்கு ‘குருசன்’ என்ற புத்திசாலி வந்தார். அங்குள்ள அழிவிற்குரிய காரணத்தை அவர் தெரிந்து கொண்டார். அரசன் பெருஞ்செல்வம் பெற்றிருந்தும், திவாலான நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டான். ஏனென்றால், அவனுடைய மந்திரிகள் அரசனைத் தவறான வழியில் இழுத்துச் சென்றார்க்ள். ஆகவே, அரசன் பற்பல வரிகளை மக்களிடம் வாங்கி துன்புறுத்தினான். மக்களும் வரியைச் செலுத்துவதற்காகப் பல தவறான வழிகளில் சென்றார்கள். இப்பொழுது ‘குருசன்’ என்ன செய்ய முடியும்? அரசனின் பொக்கிஷம் மறைக்கப்பட்டிருப்பதை அவனுக்கு ‘குருசன்’ உணர்த்தினார். மந்திரிகள் செய்யும் கெட்டகாரியங்களைக் ‘குருசன்’உணர்த்தினார். அரசன் புரிந்து கொண்டான். குருசனின் அறிவுரைப்படி, ரஜோதத்தன், தமோதத்தன் ஆகிய இருவரையும் சிறையிலிட்டான். தீய செயல்கள் நின்றன. அரசியையும், அரசன் தன் வழிக்குக் கொண்டு வந்தான். இப்பொழுது அரசியிடம் அரசன் பணிவதில்லை. தன் ஆணைக்கு அவளை உட்படச் செய்தான். மக்களையும் சரி செய்து வைத்தான். அவர்கள் ஏற்கனவே திறமையும், செயல் வன்மையும் உடையவர்கள். நல்லவழி தெரிந்தபோது மக்களும் நற்காரியங்கள் செய்தார்கள். இப்போது, விநாசபுரம், அவிநாசபுரமாயிற்று. அவர்களுக்கு, இப்பொழுது வெளிப்பகையுமில்லை. ஆகவே மக்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தார்கள். அத்தோடு சுற்றுப்புறத்தாரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.
இப்போது இந்தக் கதையின் சரியான உட்பொருளை புரிந்துகொண்டு, அவை காட்டும் குறியீட்டுப் பொருளை அறிந்து கொள்ளுங்கள்.விநாசபுரமென்பது நமது உடல்தான். அரசன் என்பது நமது புத்தி. அதாவது அறிவு. அரசி என்பது மனம். கொடுமையான மந்திரிகள் என்போர், நம்மிடமுள்ள ரஜோ-தமோ குணம். நாட்டு மக்கள் என்போர்-ஐம்பொறியும், அது செய்யும் காரியங்களும். அவையாவன, ஞானேந்த்ரியம், கர்மேந்த்ரியம். புத்திசாலி மனிதனென்பது-சத்குரு. அதாவது,ஒருவரிடமுள்ள சொந்த அறிவு. மறைத்து வைத்திருக்கும் செல்வமென்பது உண்மை.அதாவது நம் இதயகமலத்தில் இருக்கும், இறைவன்
எப்பொழுது நம் வாழ்வில் ஸத்குரு வருகிறாரோ அப்போது இரவு என்ற அறியாமை நீங்கி மங்களம் என்ற காலைப்பொழுது தொடங்கும். ஸத்குரு நம்முள் தெய்வீக உள்ளுணர்வை எழுப்ப வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு சாதனைகளால் அழைத்துச் செல்கிறார்.
நம் நாட்கடமையை ஒவ்வொரு நாளும் தொடங்குவதற்கு முன் சுப்ரபாதம் பாடுவது என்பது அத்தகைய ஒரு சாதனையே,ஒவ்வொரு பத்தியிலுமுள்ள உட்பொருளைத் தியானித்து சுப்ரபாதம் பாடினால் மிகச்சிறந்த பலனை நாம் பெற முடியும். இந்த உடல் என்பது இறைவன் உறையும் கோவில் .உடலில் இருக்கும் ஆத்மா தான் இறைவன். “அன்னமய” கோஸத்தாலான இந்த ஸ்தூல சரீரத்தை செங்கல்லால் கட்டிய கட்டிடத்திற்கு ஒப்பிடலாம். இந்த சரீரம், அதாவது சூட்சும சரீரம், ”ப்ராணமய கோசம்” “மனோமய கோஸம்” “விஞ்ஞான மய” கோசம் இவற்றால் ஆனது. இதை த்யான மண்டபத்தோடு ஒப்பிடலாம், மற்றும் நமது காரண சரீரம்-இருதயம், ஆனந்த மய கோசம் இவற்றை ஒரு கோயிலின் புனிதமான கருவரைக்கு ஒப்பிடலாம்.20 ஓம்காரம் சொல்வது என்பது உடலிலுள்ள 20 வகை திறன்களை சுத்தம் செய்வது. 21வது ஓம்காரம் நம் ஆத்மாவை அழைப்பது.இதன்பின் நாம் சுப்ரபாதம் பாடுகிறோம் இப்போது தியானம் தொடங்குகிறது.ஒருவன் தன்னுள் இருக்கிற இறைவனை எப்பொழுது உணருகிறானோ அப்போது அவன் முழு திருப்தி அடைந்து மேலானவனாக ஆகிறான். அதன் பின் நாம் உண்மை நன்மை,அழகு இவற்றை சரிவர உணருகிறோம். பின் நமக்கு எதுவும் தேவைப்படாது புத்திசாலித்தனத்தை கட்டுப்படுத்துகிறபோது பத்து இந்திரியங்களின் செயலும் அவை தரும் அறிவும் தாமே அடங்கிவிடும்நம்முடைய எண்ணங்கள் வார்த்தைகள் காரியங்கள் இவை மேலானவையாகவும் சக்தியுடையனவாகவும் ஆகும்.ஆனால் எப்போது புத்திசாலியை மனம் ஆளுகிறதோ அப்போது மகிழ்ச்சியின்மை ஏற்பட்டு பழைய குணங்களும் பழைய இயல்புகளும் வந்து ஒருவனை நிலைகுலையச் செய்கின்றன. மிக உயர்ந்த அமைதியினையும்,தெய்வீகத்தன்மையினையும் ஒரு திரை மறைப்பது போல் உள்ளது
ஆகவே நாம் சுப்ரபாதம் பாடும்போது நம்முள் இறைவன் இருக்கிறார் என்று கருத வேண்டும். இறைவன் தான் அருளையும் ஆனந்தத்தையும் தருகிற சக்தியின் பிறப்பிடம். ஆகவே, இறைவனை நாம் எழுப்ப வேண்டும். அதாவது நம்மிடம் மறைந்து கிடக்கிற தெய்வீகத்தை உணர்ந்து சாதனையால் அதை எழுப்ப வேண்டும். நாம் செய்வதெல்லாம் இறை காரியமாக உணர வேண்டும். நாம் உண்பது,உறங்குவது,அனுபவிப்பது எல்லாம் இறை காரியம் தான்,மற்றும் நம்மை நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் இதை இப்படிச்செய்தால், சொன்னால், நினைத்தால் ஸாயி அதை விரும்புவாரா? ஸாயி எனது உடம்பை இப்படிஇயக்குவாரா? இப்படித்தான் அவர் எண்ணுவாரா? அல்லது செய்வாரா? என்றெல்லாம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் இப்படி செய்தால் குழந்தைக்கு வழிகாட்டி நல்ல நடத்தைக்கு கொண்டு வர இயலும்.
ஆகவே ஓவ்வொரு நாளின் போதும் ஒரு புது உறுதிப்பாட்டோடு இறைவனை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.இவ்வாறு நம்முள் இருக்கும் தெய்வீகத்தை எழுப்பினால் நாம் அந்த தெய்வீகத்தை மற்றவர்களிடமும் காண முடியும். இவ்வாறு நாம் படிப்படியாக நம்முள் இதயம் என்ற கருவறையில் இறைவன் ஒளிர்வதை இடையறாது உணர்ந்து நம் உண்முக புனிதப்பயணத்தை தொடருவோம்.
வகுப்பில் சுப்ரபாதம் ஒலி நாடாவைப்போட்டுக் காட்டலாம். அதன் மூலம் சுப்ரபாதத்தின் ஒலி இனிமை,உச்சரிப்பு இவற்றின் அருமையைக் குழந்தைகள் தெரிந்து கொள்வர்.