பிறரைப் புரிந்துகொண்டு மகிழுங்கள்

Print Friendly, PDF & Email
பிறரைப் புரிந்துகொண்டு மகிழுங்கள்

குரு, மெதுவாக, நிறுத்தி, நிதானமாகப் பயிற்சியைப் பற்றி வாசித்தல் பின்னணியில் மென்மையான இசையை இசைக்கவும்.

இட வசதி இருந்தால் குழந்தைகளை வட்டமாகப் படுத்துக்கொண்டு கால்களை மையத்திற்கு நீட்டச் சொல்லலாம். இல்லையெனில், நாற்காலிகளில் வசதியாக உட்காரச் சொல்லலாம்.

முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து தலையை நிமிர்த்தச் சொல்லவும்.

நன்றாகக் காற்றை உள்ளிழுத்து, உடலைத் தளர்த்தி மூச்சை வெளிவிடவும். கண்களை மூடிக்கொள்ளவும், அல்லது தரையைப் பார்க்கவும்.

இப்போது செய்தது போலவே மேலும் இரண்டு முறை ஆழ்ந்து சுவாசிக்கவும்.

உங்கள் அறைக்குள் கேட்கும் சப்தங்களைக் கவனித்துக் கேட்கவும்.

அறைக்கு வெளியே உள்ள சப்தங்களையும் கவனித்துக் கேட்கவும்

நான் எவ்வாரெல்லாம் மகிழ்ச்சியாக இருந்து, என்னையும் நேசித்துப் பிறரையும் நேசிப்பது என்பதைச் சற்று சிந்தியுங்கள்.

மெல்லிய மணி ஓசை கேட்டதும், மெதுவாகக் கண்களைத் திறந்து, உங்கள் அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துப் புன்னகை செய்யவும்.

[புத்தகக் குறிப்புகள்:
1) மனித விழுமியங்களில் சத்ய சாயிக் கல்வி,
2) கரோல் ஆல்டர்மேன் எழுதிய ‘நற்பண்புகளையும் உணர்ச்சிகளைக் கையாளும் அறிவையும் வளர்ப்பதற்கான பாடத்திட்டம்’]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன