பிரேமை (அன்பு)
ஆத்ம தத்துவத்திலிருந்து உருவாகும் உன்னத மேம்பாடு பிரேமையாகும் (அன்பாகும்) அது தூய்மையானது, நிலையானது, பிரகாசமானது, குணங்களற்றது, நித்தியமானது மற்றும் அமிர்தமானதாகும். அன்பு எவரையும் வெறுக்காது. ஏகாத்ம தரிசனம் ப்ரேமையாகும் இருமையற்ற (அத்வைத) அனுபவம் பிரேமையாகும்.
எண்ணங்கள் பிரேமையில் மூழ்கியிருந்தால் சத்தியம் நம் இதயங்களில் வெளிப்படும். நம் செயல்கள் பிரேமையால் நிறைந்திருந்தால் நம் அனைத்து செயல்களுமே தர்மமாகும். நம் உணர்வுகள் பிரேமையில் (அன்பில்) தோய்ந்திருந்தால் நாம் அமைதியை அனுபவிக்கலாம். இயற்கையின் பிரேமை தத்துவத்தை நம்மால் புரிந்து கொண்டு அனுபவிக்க முடிந்தால் அஹிம்சை இயல்பாக விளையக்கூடிய ஒன்று என்பதாகிவிடும்.
அதனால் பிரேமையே அனைத்து மேம்பாடுகளின் உள்ளுணர்வாகும். இப்பகுதியில் முதல் கதை, “பிரார்த்தனை” என்ற தலைப்பில் கடவுளிடம் உள்ளார்ந்த பக்தி கொண்ட குழந்தையின் பிரார்த்தனை கடவுளால் எப்படி பதில் அளிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அன்பின் மற்றொரு துணைமேம்பாடு கருணையாகும். பிராணிகளிடம் கருணையுடன் இருப்பதை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கதைகள் இருமையற்ற (அத்வைத) அனுபவத்தை வெளிப்படுத்தும்.