எல்லாப்பெருமதங்களினுடையபொதுஅம்சங்கள்
மதம் என்பது, மனிதன் ஆற்றலை விஞ்சிய ஒப்பற்றஆற்றலும், பிரபஞ்சத்தைக்காக்கின்றதெய்வீகசக்தியும்ஆனகடவுளை நம்புகின்ற பற்றுறுதியினைக்(Faith) கொண்டஅமைப்பாகும். அத்தகைய பற்றுறுதியே நமக்கும் இறைவனுக்கும்உள்ள தொடர்பாகும்.
Religionஎன்ற சொல், “கட்டப்படுதல்” “மூலத்துடன்அதாவது இறைவனுடன் கட்டப்படுதல்” என்ற பொருள் கொண்ட“Re-ligare” என்ற சொல்லினின்று பிறந்ததாகும். குழந்தைஅன்னைக்காக ஏங்குவது போல, மனிதன் இறைவனுக்காகஏங்குகின்றான். அதுவே மனிதனின் இயல்பான உட்கிடக்கைஅதுவே மதமாகும். வாழ்வில் என்றாவது ஒருநாள், மனிதன்இறைவனது கருணையினையும், பாதுகாப்பையும் நாடுவான்.இறைவன்உண்டா இல்லையா என்ற சந்தேகத்தில் வெகுகாலம்மனிதன் இருக்க இயலாது. விளையாட்டில் தன்னை மறந்துகுழந்தை சிறிது நேரம் தாயினை மறந்திருக்கலாம். ஆனால்எப்போதாவது, தாகத்தினாலோ, பயத்தினாலோ, பசியினாலோதூண்டப்பட்டு அழுதுகொண்டு தாயின் அரவணைப்பினை நாடிஓடுவது நிச்சயம். தாயின் அன்புதான், குழந்தையின் பாதுகாப்பு, சுகம், உறுதிப்பாடு இவற்றிற்கு உத்திரவாதம்.அதுபோலவே,மனிதனின்வாழ்க்கையின் அடிகளுக்கும், கொந்தளிப்புகளுக்குமிடையில்மனிதன் அநாதரவாகத் துன்பமுறும்போது, கடவுள் தன் உதவிக்குவரவேண்டுமென்றுமிகவும்விரும்பி,வேண்டுகிறான்.சங்கராசாரியர் பாடுகிறார். “ஓ அறிவற்றவனே! காலதேவன்கதவினைத் தட்டும் போது கோவிந்தனைத் தவிர நீ உலகில் சேமித்துவைத்தது ஒன்றும் உன் உதவிக்கு வாராது. ஆகவே உனதுபோஷகராகவும், பாதுகாவலராகவும் உள்ளஇறைவனையே நாடு.”
எவ்வளவு காலந்தான் மனிதன் இறைவனிடமிருந்துவிலகியிருக்க முடியும்? இயேசு பிரான் கூறிய ஊதாரி மகனின் உருவகக்கதையைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா? என்றாவது ஒரு நாள்நமது தந்தையின் போஷணையைத் தேடி நாம் திரும்பிச்சென்றேயாக வேண்டும். இறைவனுடன் நமக்குள்ள பிணைப்புதான்பிரிக்க இயலாத தளையாகும். மற்றைய எல்லா உறவுகளும்,மற்றவையெல்லாம், நாமே கற்பித்துக் கொண்டவை,நிலையற்றவை, உண்மையெனத் தோன்றும்பொய்த்தோற்றங்களாகும்.
ஸ்ரீ யோகாநந்தப் பரமஹம்ஸர் எழுதிய யோகியின் சுயசரிதைஎன்ற நூலில் உண்மையினை விளக்கும் சம்பவத்தினைக்காண்கிறோம். அவர் சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.அன்னையின் இறுதிக் காலத்தில் அருகில் இருந்திருந்தால்கொஞ்சமாவது மன அமைதி அவருக்குக் கிட்டியிருக்கும்.அத்தகைய பேறும் அவருக்குக் கிட்டவில்லை. தந்தையுடன் கூடபரேல்லியிலிருந்து கல்கத்தாவுக்கு தாய் காலமான பிறகே வந்துசேரமுடிந்தது. சிறுவனைச் சமாதானம் செய்ய முடியவில்லை; மனத்துன்பத்தினால் மிகவும் வருந்தினான். தெய்வீக அன்னையாகிய காளிஅவனது அகக் காட்சியில் தோன்றி,ஆறுதல்கூறி,சமாதானப்படுத்தினார். “பிறவி தோறும் பற்பல அன்னையரின்உருவங்களில் தோன்றி உன்னிடம் அன்பினைப் பொழிந்து உன்னைக்கவனித்து வந்தவள் நானே; என்னுள் உன் தாயினைக் காண்பாயாக. (த்வமேவமாதாச…)
மனிதன்,இறைவனின்திருவுருவத்தில்.அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர். இழந்த சுவர்க்கத்தில்(Paradise Lost by Milton)கூறியவாறு, இறைவனுடன் கொண்டுள்ளநெருங்கிய தொடர்பினிலிருந்து நம்மை நாம் விலக்கிக் கொண்டுவிட்டோம். நாம் இறைவனின் திருவுருவத்தை உள்ளுறையச்செய்துள்ளோம்; ஆனால் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.நமக்கே நாம் புத்துணர்வு அளித்துக் கொள்ளாவிடிலோ,ஆன்மீகத்தில் வளராவிடிலோ, நாம் இழந்த சுவர்க்கத்தை மீண்டும்பெற நம்மால் இயலாது. நமது உண்மையானஇயல்பு, இறைவனிடந்தான் உள்ளது என்ற விழிப்புணர்வினை (awareness)நமக்கு அளிப்பதே எல்லா மதங்களின் பண்பும் பயனும் ஆகும்.உடல், மனம் என்ற அளவிலும், உடல் வாகு, மனோ பாவம் என்றஅளவிலும், திறமைகள், ரஸனைகள் என்ற அளவிலும் நாம்ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபட்டவராவோம். ஆனால் மிகஆழ்ந்த நிலையில் ஆன்மீக நிலையில், தமது அடிப்படையானஆதார நிலையில் நாம் எல்லோரும் ஒரே விதமானவராவோம். எந்தபெயரில் வழங்கினாலும், தெய்வீகத் தத்துவம் ஒன்றேயாகும். அதுநம்முள் செயல்படாதுள்ளது.நமது உணர்விலிருந்துமறைக்கப்பட்டுள்ளது. மனிதன் புத்துணர்வு பெற்று, இறைவன்தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையே மதங்கள்அனைத்தும் வலியுறுத்துகின்றன.”இறைவனே தந்தைமனிதர்அனைவரும்சகோதரர்”படைப்புமுழுவதும், சீவராசிகளனைத்தும் தொடர்பு கொண்டவை என்ற உண்மையைஅறியச் செய்கின்றன. ஆன்மீக அனுபவத்தை உள்ளேபெறவேண்டும் என்பதையே எல்லா மதங்களும் விரும்புகின்றன.அப்போதுதான் உலகில் உண்மையான இசைவும் அமைதியும்நிலவும். அப்போதுதான், “இருப்பது ஒரே சாதி, அது மனிதர் சாதி”இருப்பது ஒரே மதம், அதுவே அன்பு மதம் என்பதை உணரஇயலும்.
உலகிலுள்ள மதங்களனைத்தும் வெவ்வேறு வழி நடைகள்,இறைவனையடையும் பற்பல வழிகள். நமக்கும் இறைவனுக்கும்தொடர்பை ஏற்படுத்தி, முன்பிருந்த இசைவினையும்இணக்கத்தையும் மறுபடியும்ஏற்படுத்துதலே மதங்கள்எல்லாவற்றின் இலட்சியமும் ஆகும். இந்த இலட்சியத்துக்காக, நமதுமனோ வேகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், நமதுஉணர்ச்சிகளையும் உட்கிடக்கைகளையும் (Instinct)தூய்மைப்படுத்தி சீர்படுத்துவதற்கும், நமது பகுத்தறிவை (Reason)இறை வழியிலும், நமக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வழியிலும்கொண்டு செலுத்துவதற்கும் உதவி செய்யும் நியமங்களையும், அனுஷ்டானங்களையும் எல்லா சமயங்களும் விதித்துள்ளன.சுயநலத்துக்கும், ஆசைகளுக்கும், பாசங்களுக்கும், முன்னேற்றஆசைகளுக்கும் (Ambition)விளைநிலமாக உள்ள மனமானது,சுத்தமாகக் கழுவப்பட்டு நேர்வழியில் திசை திருப்பப்படுதல்வேண்டும். பாபா கூறியவாறு “சமயத்துக்கு இந்திய மொழி ஒன்றில்மதம் என்ற பெயருமுண்டு. அதே போல மனதுக்கு மதி என்றுபெயருமுண்டு இவ்விரண்டையும் ஒன்று சேர்த்து, மதமானது,மதியை வலுப்படுத்துவதற்கும், நேர்படுத்துவதற்கும் அறிவினுக்குஒளியூட்டுவதற்குமாக ஏற்பட்டது எனக் கூறலாம்.”
எல்லா மதங்களின் இலட்சியமும் உள்நோக்கமும்ஒன்றாயினும்மனிதகுலத்தின்வரலாற்றில்தனிப்பெயர்கொண்டபற்பல மதங்கள் உருவெடுத்தன. எல்லா மதங்களும் ஒப்பற்றஆன்மீகஅனுபவத்தைப்பெற்றமிகஉயர்ந்தசான்றோர்களால்உபதேசிக்கப்பட்டவை. ஆனாலும், பூகோளச் சூழ்நிலைக்குத்தகுந்தவாறும், வரலாற்றுஅவசியங்களுக்குத்தகுந்தவாறும்குறிப்பிட்ட காலத்துக்குத் தகுந்தவாறும், மக்களின் பண்பாட்டுமனோ தத்துவ எண்ணத்துக்குத் தகுந்தவாறும், ஒவ்வொருமதத்தைக் தோற்றுவித்தவரும் தமது உபதேசங்களையும்,நற்செய்திகளையும் தமக்கே உரிய பாணியில் அளித்தனர்.குறிப்பாக அவர்கள் அக்கால மக்களின் புரிந்து கொள்ளும்திறனுக்குத் தகுந்தவாறு உபதேசித்தனர், ஒரு மதஸ்தாபகர் ஒருகுறிப்பிட்ட அம்சத்தை வலியுறுத்தலாம். வேறொரு மதஸ்தாபகர்வேறு சில அம்சங்களை வலியுறுத்தலாம், இவ்வாறு வெவ்வேறுமதங்கள்மேலெழுந்தவாறு காண்கையில்,மிகவித்தியாசமானவையாகவும்,ஒன்றுக்கொன்றுஎதிரானவையாகவும் தோன்றலாம். குறிப்பாகவெளிப்புறச்சடங்குகளையும், மரபுப் பழக்கங்களையும் நோக்குகையில் அவைமிகவும் வேறுபட்டிருக்கும்ஆனால், எல்லா மதங்களின்படுகையூற்றுப் போன்றதான, உபதேசங்களின் மையக்கூறு,ஒன்றேயாகும் என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியினால் வெளியாகும்,எல்லா மதங்களின் உள் நோக்கமும், சீவன் பௌதிகத்துக்குமேம்பட்டதாக வேண்டும் என்பதும் ஆன்மீக உண்மைகளுக்கும்,இருப்புக்கும் இசைந்தவாறு அவனது நடத்தை உயர் மாற்றம்அடைவதற்கான பயிற்சியை அளிப்பதேயாகும் என்பதும் ஆழ்ந்த ஆராய்ச்சியினால் புலனாகும். பற்பலச் சமய மரபுகள் இந்த ஒரேஇருப்பினுக்கு பல்வேறு உருவங்களையும், பல்வேறுகோட்பாடுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதும், எல்லாவற்றின்உள்ளுறை உண்மையும் ஒன்றேயென்பதும் புலனாகும்.வெவ்வேறு மதங்களும் ஒன்றையொன்று வளம் பெறச்செய்து,உயிரூட்டங் கொடுத்து, ஆன்மீக நேயத்துக்கு வழிகோலி, பன்முகப்புக் கொண்டு பூரணத் தன்மையினை அளிக்கின்றன. இந்துமதத்தின் ஆன்மீகப் பேரொளி, இறைவனுக்குக் கீழ்ப்படியும் யூதமதத் தத்துவம். புத்த மதத்தின் உயரிய கருணை, கிறிஸ்துவமதத்தின் தெய்வீக அன்பின் அகக் காட்சி. இஸ்லாத்தில்இறைவனைச் சரணடைதல், இவையனைத்தும் ஆன்மீகஅகவாழ்வின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன; சீவனின்அழியாத அனுபவங்கள் அறிவுப் புலனில் புதிய அதன் பல்வேறுவிமரிசனங்களைக் குறிக்கின்றன.
இந்து மதம், பழங்கால வேத ஞானத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். அது ஆன்மீக மேம்பாடுகளையே முக்கியமாகவலியுறுத்துகிறது.தெய்வீகத்தினைத் தனக்குள்ளும்,எல்லாவற்றினுள்ளும் அறிந்துணர்ந்து அனுபவித்தலே வாழ்வின்ஒப்பற்ற இலட்சியம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது.
ஜாரதுஷ்டிரமதம் (1000 கி.மு) இந்துக்களின் வைதிக மதம் போன்றுபழைமையான மதமாகும். மற்றெல்லா மதங்களைவிட அதுஆன்மீக ஞானத்தின் ஒளியினையும், பற்றுறுதியையும் மிகவும்வலியுறுத்துகிறது. இந்து மதத்தில் வெறும் மரபுச் சடங்குகள்மலிந்து, கடவுளரை திருப்தி செய்விக்க வாயில்லா விலங்குகள்பலியிடப் பெற்றபோது அவற்றின் எதிர் விளைவாக சமண மதமும்(கி.மு.8000), புத்த மதமும் (கி.மு 5000) தோன்றின. அவ்வமயம்இந்து மதத்தில் அகத்தூய்மை மறைந்து உட்போராட்டங்கள்அதிகரித்தன. புத்தரும் மகாவீரரும் கடுமையான நீதிநெறிவாழ்கையினை வலியுறுத்தினர். சத்தியம், பிரேமை, அகிம்சைஅவற்றை ஒப்பற்ற குண நலன்கள் என்றும், மத வாழ்க்கையின்ஒப்பற்ற கட்டுப்பாடுகள் என்றும் வலியுறுத்தினர். இருவரும் எல்லாசீவராசிகளிடமும் உள்ள கருணையினால் உந்தப்பட்டு, அகிம்ஸையே மிகச்சிறந்த மேம்பாடும் குணநலனும் ஆகும்என்பதை நிலைநாட்டினர்.
மக்களுக்குச் சுயநலம் அதிகமாகி, மற்றவர்கள் நிலையைப்பற்றிக் கவலைப்படாத சமயத்தில் இயேசு பிரான் பிறந்தார். அவர்,உயர்ந்த நீதிநெறிக் கோட்பாடு, அன்பு, எல்லாவற்றிற்கும் மேலாகத்தேவைப்பட்டவர்களுக்குச் சேவை, மற்றவர்கள் துன்பத்தைத்துடைத்தல் ஆகியவை மத சம்பந்தமான குணநலன்கள் என்றுஉபதேசித்தார்.
அதேபோல, முகமது நபியவர்கள், நீதிநெறிக் கோட்பாடுஉலக ஆசையினாலும் மிகவும் சீர்கேடடைந்த சமூகத்தில் பிறந்தார்.அக்காலத்து மக்களிடம் உண்மையான மதவுணர்வு சிறிதும்இல்லை. ஆகவே இஸ்லாம், கடுமையான நீதி நெறி விதியினையும்,சர்வ வல்லமையுள்ள இறைவனின் திருவுள்ளத்துக்கு முழுமையாகச் சரணாகதியடைதல் ஆகியவற்றையும் நிலைநாட்டியது.
மதங்களெல்லாவற்றிலும் இளையதான சீக்கிய மதம்,(கி.பி. 1600) குருநானக்கினால் தோற்றுவிக்கப்பட்டது. அப்போதுஇந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் போராட்டங்கள்நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்விருமதங்களிலும் உள்ள சிறந்த அம்சங்களை ஒன்று சேர்த்து, அவற்றை ஒன்றிணையச் செய்துமதச் சமூகங்கள் இரண்டும் புரிந்து கொண்டு, இசைவுடன்செயல்படுவதற்கான வழியை வகுத்ததே சீக்கிய மதமாகும். அதுஇந்துக்களின் உருவவழிபாட்டினையும், மூட நம்பிக்கைகளையும்விலக்கியது. அவர்களது சகிப்புத் தன்மையை ஏற்றுக்கொண்டது.அதே சமயம், முஸ்லீம்களின் வளையாத் தன்மையினை விலக்கிசகோதரத்துவ உணர்வினை ஏற்றுக்கொண்டது.
உலகில் இப்போது பதினோரு பெரு மதங்கள் உள்ளன.அவை ஆரிய மதங்கள், செமிடிக் மதங்கள், மங்கோலிய மதங்கள்என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரிய மதங்கள்
(i) இந்து மதம்; (ii) சமண மதம்; (iii) புத்த மதம்; (iv) ஜாரதுஷ்டிரமதம்; (v) சீக்கிய மதம்
செமிடிக் மதங்கள்
(i) எபிரேய மதம் (யூத மதம்); (ii) கிறிஸ்தவ மதம்; (iii) இஸ்லாம்
மங்கோலிய மதங்கள்
(i) தாவோ; (ii) கன்ஃபூஷிய மதம்; (iii) ஷின்டோ மதம்
மதங்கள் எல்லாவற்றிலுமுள்ள பொது அம்சங்கள்
உற்று ஆராயும்போது, மதங்களுக்கிடையே உள்ளவேறுபாடுகளில் பெரும்பாலனாவை, மற்ற மதங்களைப் பற்றியும்,சொந்த மதத்தைப் பற்றியும் கொண்டுள்ள மனக்கோணல்களுடனும்அறியாமையுடனும் தொடர்பு கொண்டவை என்பது தெரிய வரும். எல்லா மதங்களும் அடிப்படையில் இறைவனின் ஒப்பற்றதன்மையினையும், மனிதன் அவருக்கும், மக்களுக்கும். ஆற்றவேண்டிய கடமைகள் பற்றியுமே போதிக்கின்றன. வெளிப்புறநோக்கிலும் மதங்களுக்கிடையில் பொதுவான அம்சங்களும்,ஒருமையும் உள்ளன.