லோகா சமஸ்தா(நடனம்)
லோகா சமஸ்தா(நடனம்)
“லோகா சமஸ்தா சுகினோ பவந்து…” என்ற பாடல், இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சி மற்றும் அமைதியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது.
இந்த தனித்துவமான தன்னலமற்ற மந்திரம் உலகளாவிய அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், மரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், ஆறுகள், மலைகள், பாறைகள், அனைத்து கிரகங்கள் மற்றும் அனைத்து லோகங்களின் நலனே சுவாமியின் முதன்மை விருப்பம் ஆகும்.
அமைதி,சகோதரத்துவம், தோழமை மற்றும் உறவினர் இடையே உள்ள ஒற்றுமை ஆகிய உணர்வுகளுக்கு இது புத்துயிர் அளிக்கிறது. இந்த ஸ்லோகத்தின் பயன் என்பது பெரிய அளவைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது பூமி தாய் மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்கியது மற்றும் பஞ்ச பூதங்களான விண்வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் பூமி ஆகியவற்றின் இடையே சமநிலையைக் கொண்டுவருகிறது.
இந்த அற்புதமான பாடலுக்கு நடனம் ஆட வருகிறார்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாலவிகாஸ் மாணவர்கள்.