பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். அவருக்கு சத்யநாராயண ராஜு என்று பெயர் சூட்டப்பட்டது. அவரது பெற்றோர் தாய் ஈஸ்வரம்மா மற்றும் பெத்த வெங்கம ராஜு ஆவர். வீட்டில் உள்ள வாத்தியங்கள் தானாக இசைத்ததை தொடர்ந்து சுவாமி இவ்வுலகில் அவதரித்தார், சுவாமி படுத்திருந்த தொட்டிலுக்கு கீழே சுருண்டு கிடக்கும் நாகப்பாம்பு போன்ற நிகழ்வுகள் நேர்ந்து. 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியில் தனது 14 வது வயதில், அவர் தன்னை சாய்பாபா என்று அறிவித்தார், தனக்கு ஒரு பணி இருப்பதாகவும், அவருடைய பக்தர்கள் தனக்காக காத்திருப்பதாகவும் கூறினார். அன்று முதல் அவர் சத்ய சாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.
நவம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய உடல் தோன்றிய நாள் என்றும், உண்மையான ஆனந்தத்தை நம் இதயங்களில் அனுபவிக்கும் நாளே அவரது உண்மையான பிறந்தநாள் என்றும் சுவாமி கூறுகிறார். நாம் அவருடைய குழந்தைகளாகவும், பக்தர்களாகவும் இருக்க முயல வேண்டும், நாம் ஸ்வாமி மீதுள்ள அன்பினால் அனைத்தையும் செய்ய வேண்டும்
இந்தப் பகுதியில் நற்பண்புகள் மற்றும் சுவாமியின் போதனைகள் சார்ந்த சில கதைகள், நாடக வசனங்கள் மற்றும் விளையாட்டுகள் உள்ளன. குருமார்கள் நல்ல செயல்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு சுவாரஸ்யமான வகுப்பை அமைக்கலாம்.