அணுகுமுறை:
- பாடத்திட்டத்தில் ‘அனுபவம் மூலம் கற்றல்’ ஒரு அணுகுமுறையே தவிர, சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடம் அல்ல.
- எனவே இதற்கென்று தனியே பாடத்திட்டம் வகுக்க இயலாது.
- குழந்தைகள் மையக்கருத்திற்கான விபரங்களை,தாங்கள் பெற்ற அனுபவம்,அதனால் கிடைத்த அறிவுஞானத்தின் அடிப்படையில் அளிக்கிறார்கள். எனவே ‘இந்த விபரங்களை குழந்தைகள் அளிக்கலாம்’ எனவும் முன் கூட்டியே அறுதியிட்டும் கூற இயலாது.
- ஆயினும், குழுச்செயல்பாட்டில் தங்களை ஆழ்ந்து ஈடுபடுத்திக் கொள்ளும் போது, மையக் கருத்து வலுப்பெறுகிறது.
- ஆகவே, ‘அனுபவம் மூலம் கற்றல்’ சக்தி வாய்ந்த,படிப்படியாக ஆற்ற வேண்டிய செயல் முறை.
- முக்கியமாக,குழந்தைகளின் சமூகத்திறமைகள்,உள்ளுணர்வு அனுபவங்கள், மற்றும் படைப்பாற்றல் திறன் ஆகியவைகளை தூண்டச்செய்யும்,ஒரு ஆராய்வு நடைமுறையாகும்.
- இந்த நடைமுறையில், பலவிதமான தரவுகளை சேகரித்தல்,அதன் பொருளைப் புரிந்து கொள்ளல்,பலதரப்பட்ட கருத்துப்பரிமாற்றம்,தன்னைத் தானே புரிந்து கொள்ளுதல் ஆகிய பல விரிவான திறமைகளை கண்டுபிடித்து ஆய்வு செய்கிறார்கள்.
- இதைத் தவிர்த்து,குழுவில் இருந்து வேலை செய்யும் திறமை,ஆலோசனைகளை அளித்தல்,ஏற்றுக்கொள்ளுதல்,மற்றவர்களையும்,சூழ்நிலைகளையும் மதித்தல், பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய திறமைகளும் ஊக்குவிக்கப்பட்டு, உறுதியான மதிப்புகள் உள்ளத்தில் வேரூன்றச் செய்கிறது.