பொதுக் கருத்து / கோட்பாடு
கற்பித்தல் முறையில், ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையே ‘அனுபவம் மூலம் கற்றல்’ ஆகும்.செயற்கையான தடைகள் மறைந்து,வகுப்பில் உள்முக ஒருங்கிணைப்பு ஏற்பட வழிவகுக்கிறது.இதன் நுட்பத்தை புரிந்து கொண்டு, வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்பு படுத்தி,முழுமையான புரிதலை அடையும் திறனை மாணவர்கள் பெறுகிறார்கள். அனுபவம் மூலம் கற்றலின் மதிப்பீட்டு அளவீடுகளாக சத்யம்,சிவம்,சுந்தரம் (உண்மை,நற்குணம்,அழகு) திகழ்கிறது. மனதில் ஆழப் பதியவைக்கும் பரிமாணத்தில், இத்தகைய நுண்ணறிவுக்கு, முக்கிய பங்குண்டு.
இந்த அணுகுமுறையின் நோக்கம்:
- வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஈடுபடுகின்ற செயற்பாடு ஆகும்.வகுப்பு ஆசிரியர், தலைப்பை தேர்ந்தெடுத்தவுடன், அது தொடர்பான கருத்துக்கள் முதல் இறுதி நிகழ்ச்சி வழங்குதல் வரையிலான அனைத்தையும் குழந்தைகளே செயல்படுத்துகின்றனர்.தங்களின் பங்கு/பணி என்ன என்பதை அறிந்த உடனே, குழந்தைகள், தேவையான விபரங்களை சேகரிக்கத் தொடங்குகின்றனர். அவர்கள் அளிக்கும் விபரங்களே,இறுதியாக நிகழ்ச்சிகளாக அவர்களால் வழங்கப்படுவதை நாம் பார்க்கிறோம். குழந்தைகள் காதால் கேட்கும் போது உட்கிரகிக்கும் திறன் 20% மட்டுமே ஆகும். ஆனால் இது போன்ற செயல்பாடுகளில் பங்கேற்று,தாங்கள் புரிந்து கொண்டதை பேசி வெளிப்படுத்தும்போது அவர்களின் உட்கிரகிக்கும் திறன் 70% ற்கும் மேலாக இருக்கும்.அவர்கள் நேரடியாக என்ன அனுபவிக்கிறார்களோ அதை எளிதில் உட்கிரகித்துக் கொள்கின்றனர். அவ்வாறு பெறுகின்ற அறிவு, சுயமானது, தங்களுடையது என அவர்கள் பெருமைப் படலாம். உள்வாங்கப் படாத எந்த அறிவும் வாந்தி போன்று வெளியே தள்ளப்படுகிறது.(தற்போதுள்ள தேர்வு நடைமுறையில் செய்யப்படுவது போல) ஸ்ரீசத்யசாய்பாபா அவர்கள் கூறுகிற புத்தக
- குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஒரு மையக்கருத்தின் மீது வேலை செய்கின்றனர்.இதனால் கூட்டுறவு,ஒருங்கிணைப்பு ஆகிய நல்ல குணங்களை தாங்களாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். தங்களின் கருத்துக்கள், திறமைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும்போது ‘பகிர்ந்து கொள்ளும் குணம்’ வலுப் பெறுகிறது.ஒத்த கருத்து,சுதந்திரமான சூழலை வளர்க்கிறது. இத்தகைய குழுச்செயல்பாடு,தன்னை ஒத்த குழுவின் ஆதரவை அதிக அளவில் பெறவும் வாய்ப்பளிக்கிறது.