குரூப்-ஒன்று பாலவிகாஸ் குழந்தைகளுக்கு உடல் வளம் மற்றும் சுகாதாரம் பாடத் திட்டத்தின் கீழ் கற்பிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:
- உறக்கம் – சீக்கிரமாக உறங்கி சீக்கிரமாக எழுந்திருத்தல் ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும் செல்வந்தனாகவும் விவேகமுடையவனாகவும் ஆக்குகிறது.
- சரியான அளவு தூக்கம் நம்மைச் சீராக கவனிக்க உதவுகிறது.
- நல்ல தூக்கத்திற்காக இரவு பிரார்த்தனையைக் கூறுதல் வேண்டும்.
- நீண்டநேரம் கணினியில் விளையாடுதல் மற்றும் டிவி பார்த்தல் கூடாது.
- எளிய யோகப் பயிற்சிகளை ஒரு சிறந்த யோகபயிற்சியாளரிடம் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- சரியாகச் சாப்பிடுதல் – ஆரோக்கியமான சீரான உணவு உண்ணுதல் வேண்டும்.
- அதிகமாக இனிப்புகள் சாக்லேட்டுகள் மற்றும் குளிர்பானங்கள் சாப்பிடகூடாது.
- பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடவும். பால் மற்றும் பழரசங்கள் அருந்தவும் வேண்டும்.
- காலை உணவு தவிர்த்தல் கூடாது: உணவை வீணடிக்கக் கூடாது.
- உணவை நன்றாக மென்று சுவைத்து உண்ண வேண்டும்.
- உணவை அங்கும் இங்கும் இறைக்காமலும் உண்ண வேண்டும்-சாப்பிடும் போது கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும்.
- உண்ணும் போது பேசாமல் அமைதியாக உண்ணுதல் வேண்டும்.
- வாய்க்குள் உணவை வைத்துக் கொண்டு பேசக் கூடாது.
- உண்ணும் போது சத்தம் போடக் கூடாது.
- வாயை மூடி உண்ண வேண்டும்.
- உண்பதற்கு முன் அந்த உணவை இறைவனுக்கு பிரசாதமாக அளித்தல் வேண்டும்.
- போதுமான அளவு கொதிக்க வைத்த சுத்தமான தண்ணீர் அருந்த வேண்டும்.
- உடலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் உடல் இறைவனின் ஆலயம் ஆகும்.
- உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் குளிக்க வேண்டும். தினமும் முறையாகக் குளிக்காவிட்டால் காற்றிலுள்ள வெளிப்புறத்தூசி தோலில் படிந்து வியர்வையுடன் தோல் சம்பந்தமான வியாதிகள் உண்டாகும். மேலும் உடலில் கெட்ட நாற்றம் ஏற்படுத்தி ஒருவரையும் நம் அருகில் நெருங்கவிடாமல் செய்யும்.
- அதற்காகவே சோப்பையும் நீரையும் கொண்டு நன்றாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
- குளித்த பின்பு சுத்தமான துண்டால் துடைத்துக் கொள்ள வேண்டும். குருமார்கள் குழந்தைகளுக்கு முறையாகக் குளிக்க வேண்டியதின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும்.
- பிரார்த்தனை உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள குளித்தல் எவ்வாறு அவசியமோ அவ்வாறே நாமஸ்மரணம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது.
- தலைமுடியை முறையாகச் சுத்தம் செய்தல் வேண்டும்.
- அதனை தினமும் எண்ணெய் தடவி சீவி நேர்த்தியாக வைத்திருக்க வேண்டும்.
- தலையில் பேன்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பற்கள் சுகாதாரம் – பற்களை ப்ரஷ் கொண்டு தினமும் நன்றாகத் துலக்க வேண்டும்.
- நாம் சாப்பிடுகின்ற உணவு , பற்களில் ஒட்டிக்கொண்டு சிலநாட்களில் அழுகிச் சிதைந்து நாற்றம் உள்ள மூச்சைத் தருவதோடு, பாக்டிரியாக்களை உண்டாக்கும். ஆகவே ஈறுகளிலும் பற்களிலும் நோய் உருவாகிப் பற்கள் விழும். பற்கள் இல்லாமல் சாப்பிட முடியாது. ஆதலால் பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் பளிச்சிட ப்ரஷ் கொண்டு பற்களை தினமும் இரு வேளை துலக்க வேண்டும்.
- பல் மருத்துவரைத் தவறாமல் அணுக வேண்டும்.
- நகங்களை அழகாக வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- நகங்களைக் கடித்தல் கூடாது.
- கை அலம்புதல்– கைகளை உணவு உண்பதற்கு முன்னும் பின்னும்,டாய்லெட்சென்ற பிறகும்,விலங்குகளை தொட்ட பிறகும் சுத்தமாக கழுவுதல் வேண்டும்.
- சரியான காலணி அணியாமல் வெளியே செல்லக் கூடாது. கால்களையும் பாதங்களையும் விளையாடி விட்டு வந்த பிறகு சுத்தமாக கழுவ வேண்டும்.
- நீர் மற்றும் சோப்பினால் சுத்தமாகத் துவைக்கப்பட்ட துணிமணிகளை அணியவும்.
- அழுக்கு மற்றும் அழுக்கடைந்த துணிகளை உடனே அகற்றித் துவைக்கப் போட வேண்டும்.
- கண்களின்பாதுகாப்பு : கண்களை சுத்தமான தண்ணீரால் அலம்ப வேண்டும்.
- இரவு படுக்கச் செல்லுமுன் தண்ணீரால் சுத்தம் செய்தால், நாள் முழுவதும் கண்களில் சேர்ந்துள்ள தூசியையும் அழுக்கையும் போக்க முடியும்.
- கண்களை கழுவிய பிறகு, சுத்தமான மெல்லிய துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும்.
- புடவைகளையோ, வேட்டிகளையோ உடைகளின் பாகங்களையோ கொண்டு துடைத்துக் கொண்டால் கண்நோய் வரும். அவை பரவவும் ஏதுவாகும்.
- ஒவ்வொருவரும் தனித்தனியாகத் துணியோ துண்டுகளோ கைக்குட்டைகளோ கொண்டு கண்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கண்ணில் எதாவது தொற்று நோய் இருந்தால் , ஒவ்வொரு கண்ணையும் வெவ்வேறு துணிகளால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .
- எதாவது நோய் இருந்தால் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். கடைகளில்விற்கும் மருந்துகளை நாமாகவே வாங்கி உபயோகப்படுத்தகூடாது. இவ்வாறு செய்தால் கண்பார்வையைக் கூட இழக்க நேரிடும்.
- வைட்டமின்-A சத்தைத்தரக் கூடிய அகத்திக்கீரை, வாடாத பசலைக்கீரை, முருங்கைக் கீரை முதலிய கீரைவகைகளையும், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றையும் உண்பது கண்களுக்கு மிகவும் நல்லது. இவை இரவு நேரப்பார்வைக் குறைவு ஆகிய நோய்களைத் தவிர்க்கும் .
- தலைவலியோ, கண்வலியோ குழந்தைகளுக்கு இருந்தால் கண்களைப் பரிசோதித்துக் கண்ணாடி அணிய வேண்டும்.
- வெல்டிங் செய்யும் இடங்களிலோ அரத்தைக் கொண்டு வேலைசெய்யும் இடங்களிலோ உளியால் வெட்டும் இடங்களிலோ மரம் அறுக்கும் இடங்களிலோ நாம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்
- பளீரென்ற ஒளீக் கீற்றுகளையோ (கிரகணங்கள், வெல்டிங் செய்யும் போது ஏற்படுகின்ற ஒளியையோ)தகுந்த கண்ணாடிகள் அணிந்து தான் பார்க்க வேண்டும். இல்லையேல் பார்வையை இழக்க நேரிடலாம்.
- கண்கள்சிவப்பாக இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
- குழந்தைகள் கூரான பொருட்களை வைத்துக் கொண்டு விளையாட விடக் கூடாது. ஏனெனில் கண்களில் காயங்கள் ஏற்பட ஏதுவாகும் .
- கண்கள் நமக்கு இறைவன் அளித்த பரிசு. ஆகவே நமக்குக் கிடைத்த இணை இல்லாத பரிசை நல்லவைகளைப் பார்க்க மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- காதுகளின் பராமரிப்பு : பெற்றோரைக் கொண்டு ஒரு சுத்தமான துணியினால் குளித்த பிறகு காதுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
- காதுகளில் உள்ள மெழுகினால் வலி ஏற்படலாம் . அளவுக்கு அதிகமாக இருந்தால் பயிற்சி பெற்றவரைக் கொண்டு அதை எடுத்து விட வேண்டும்.
- காதுகள், கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. அதைக் கொண்டு நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும்.
- தொண்டை மற்றும் மூக்கு சம்பந்தமான தொண்டை ரணம் , ஜலதோஷம் , இருமல், மூக்கடைப்பு, ஏற்பட்டால் வெந்நீரைப் பருகவேண்டும். மற்றும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கலந்து வாய்க் கொப்பளித்தல் வேண்டும்.
- நீராவிமூச்சு பிடித்தல்கூடபயனளிக்கும்.
- இருமல் மற்றும் தும்மல் வரும் போது வாயையைத் துணியால் மூடிக் கொள்ள வேண்டும்.
- தொடர்ந்து தொண்டை சம்பந்தமான கோளாறுகள் இருந்தால் பெற்றோருடன் ENT மருத்துவரைஅணுகவும்.