உடல்வளமும் சுகாதாரமும் – வகுப்பறை செயற்பாடு
பரிந்துரைக்கப்படும் வகுப்பறை செயற்பாடுகள்: பிரிவு -1
செயற்பாடு 1
- உணவின் பல்வேறு பகுதிகளான – கார்போஹைட்ரேட்ஸ், புரோடீன், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுப்புக்கள் ஆகியன குறித்து விளக்கலாம்.
- குழந்தைகளை குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கச் செய்யலாம். பழைய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களில் இருந்து பல்வகை உணவு வகைகளை சித்தரிக்கும் படங்களை சேகரிக்கச் சொல்லலாம். பழைய புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களில் இருந்து பல்வகை உணவு வகைகளை சித்தரிக்கும் படங்களை சேகரிக்கச் சொல்லலாம். இவ்வாறு சேகரித்த படங்களை ஒட்டச் செய்து உணவு பிரமிட் செய்யச் சொல்லலாம். ஒவ்வொரு குழவையும் ஒவ்வொரு வகை உணவு குறித்த பிரமிட் செய்யச் சொல்லலாம்.
- ஆரோக்கியமான சைவ உணவு, உண்பதில் சரியான பழக்க வழக்கங்கள் ஆகியன குறித்த மாதிரி பிரமிட் படம்: