உறங்கும் முன் ஓர் தன்னாய்வு
குழந்தைகளே, இந்த நாள் முடிந்தது. படுக்கைக்குச் செல்லுமுன், ஒரு சிறு ஆய்வு செய்யவேண்டிய நேரமிது. எப்படி ஆய்வு செய்வது என்று தோன்றுகிறதா உங்களுக்கு? ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் நம் கவனத்தை உள்நோக்கித் திருப்பவேண்டும். மேலும், நாம் இந்த நாளை எப்படிக் கழித்தோம் என்றும் சிந்திக்கவேண்டும். இதுதான் நம்மை நாம் பரிசோதித்துக்கொள்ள வேண்டிய நேரம். நாம் இப்பொழுது கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை கண்டுபிடிக்கலாம்:
குருக்கள் தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு எப்படி சுயபரிசோதனை செய்வது என்று குழந்தைகளுக்கு விளக்கலாம்.
- நான் இந்நாள் முழுவதும் பிறரிடம் உள்ள நல்லனவற்றையே பார்த்தேனா?
- அனைவரிடமும் அன்பாகவும், இனிமையாகவும் பேசினேனா?
- என்னுடைய பொருட்களை என் தோழர்களுடன் பகிர்ந்துகொண்டேனா?
- உணவை வீணடித்தேனா?
- இந்த நாளில் எவருக்கேனும் உதவி செய்தேனா?
- தண்ணீரை சேமித்தேனா?
- “நல்லதையே பார், நல்லவனாய் இரு, நல்லதையே செய்” என்று பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா கூறிய வழியில் இந்த நாளைக் கழித்தேனா?