மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமான பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது கிருஷ்ண ஜன்மாஷ்டமி ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் குதூகலத்துடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் திருநாள் இது. பகவான் கிருஷ்ணரைப் பற்றி நினைக்கும் பொழுது, அவருடைய பல விதமான தோற்றங்கள் நம் மனதில் தோன்றும். கிருஷ்ணனின் அழகான நீலத் திருமேனி, குறும்புப் புன்சிரிப்பு, அவன் வெண்ணெய்ப் பானையை உடைத்து வெண்ணையுடன் ஓடுவது, தன் சிறு விரலில் கோவர்த்தனகிரியை உயர்த்திப் பிடித்திருப்பது, அன்பான அழகான கோபிகைகளுடன் கிருஷ்ணன் நடனமாடுவது, அவன் புல்லாங்குழலில் இனிமையான ஆத்மார்த்தமான இசையை வாசிப்பது என பல விதத் தோற்றங்கள். இன்னும் பல கூறிக்கொண்டே போகலாம்.
இந்தப் பகுதியில் பகவான் கிருஷ்ணர் மீது நமது சாய் கிருஷ்ணர் ஆற்றிய தெய்வீக சொற்பொழிவுகள், பகவான் கிருஷ்ணரின் புகழ்பாடப் பாடல்கள், ஸ்லோகங்கள், தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கும் கதைகள், குதூகலத்தோடு செய்து மகிழ அழகிய கைவினை செயற்பாடுகள், கிருஷ்ணனுடன் இணைந்து இருப்பது போன்ற விளையாட்டுக்கள், மற்றும் இந்தப் பண்டிகையை வரவேற்க வண்ணமயமான ரங்கோலிகள் உங்களுக்காக!