பிரியமான மான்
பாபாவிடம் பல செல்லப் பிராணிகள் இருந்தன. நாய்கள், முயல்கள், மயில்கள் (ஒருவகை கிளிகள்), மான்கள் இவையனைத்தும் பெருங்கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அவரது செல்ல யானை சாயிகீதா. தன் எஜமானரை நேசிக்கும் அளவுக்கு எல்லையே இல்லை. அதிக நாட்கள் பிரிந்திருந்தால் கண்ணீர் விடும். பாபாவின் எந்த பக்தருக்கும், பாபாவுக்கு சாயி கீதா மாலை அணிவித்த அளவுக்கு, பாபாவுக்கு மாலை இடும் பேறு கிட்டவில்லை.
ஸ்வாமி ஒரு சிறு மானை அன்புடன் பராமாித்து வந்தார். அது அழகிய மானாக வளா்ந்தது. ஒரு நாள் வெயில் கொளுத்தியது. ஸ்வாமி வழக்கம்போல மதிய உணவுக்குப் பின், தன் அறைக்குச் சென்றார். பொதுவாக, மாலையில் தாிசனம் தரும் நேரத்துக்கு தான் இறங்கி வருவார். ஆனால் மதிய உணவு முடிந்ததுமே இறங்கி வந்து, மான்கள் தோட்டத்துக்கு வேகமாக சென்றார். தனக்காக காத்துக்கொண்டிருந்த ஆண் மானை நோக்கி நேராகச் சென்றார். அதை மென்மையாகத் தடவிக் கொடுத்து, தன்கைகளால் பழத்தை அதற்கு ஊட்டினார். ஸ்வாமியின் தெய்வக்கரங்கள் கொடுத்த பழத்தை உண்டபின், அந்த மானின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. ஸ்வாமியின் மலா்பாதங்களில் விழுந்து தன் உயிரை விட்டது.
ஸ்வாமியின் அன்பின் உறவு அத்தகையது, அருளின் உறவும் அத்தகையது. ஸ்வாமியின் அன்பின் அழகும், அருளின் அழகும் அவ்வாறே.
[Source: Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]