குட்டன்
நீலகிரி மலைகளில் பிக்கட்டி (Bikkatti) என்ற கிராமத்தில் குட்டன் என்ற ஒரு நொண்டி நாய் வாழ்ந்தது. குட்டன் என்றால் நொண்டி என்று பொருள். புதியவா்களிடம் எச்சாிக்கை கூடிய, அன்பு மிகுந்த மிகவும் வயதான நாய் அது.
பாபா அந்த கிராமத்துக்கு விஜயம் செய்து, அவருக்கென விரிக்கப்பட்ட கம்பளங்களின் வழியாக நடந்து சென்றார். பாபாவின் மேல் பாய்ந்து விடக் கூடாது என்பதற்காக, குட்டனை வழியில் கட்டிப் போட்டிருந்தார்கள். நாய், கயிற்றை இழுத்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தது. பாபா நின்று, அதனை தட்டிக் கொடுத்து, கட்டவிழ்த்து விடும்படி சொல்லி மேலும் இவ்வாறு கூறினார். “பங்காரு (தங்கமே), அவனைப் பேசாமல் விடுங்க. அவன் பாிசுத்த ஆத்மா.” ஆகவே குட்டன் மேடை வரையில் பாபாவைப் பின் தொடா்ந்து, கிழே உட்கார்ந்து, பஜனைகளைக் கேட்டது. பிறகு சமையலறைக்கு பாபாவைக் பின் தொடா்ந்து சென்றது. பாபா, அங்கு உணவை முடித்துக் கொண்டதும், குட்டன் அலங்காிக்கப்பட்ட மேடைக்கு நடந்து சென்று, பாபாவின் நாற்காலிக்கு அருகில் நின்று கொண்டு, உணவு அருந்திக் கொண்டிருந்த கிராமத்தினாின் நீண்ட வாிசையைக் கவனித்துக் கொண்டே இருந்தது. சிறிது நேரங்கழித்து, பாபாவுக்கான கால் மணைமேல் (Foot stool) தலையை வைத்துக் கொண்டது. சில நிமிடங்களில் அதன் உயிர் பிரிந்தது.
இது பாிசுத்த ஆத்மா என்று அனைவரும் அறிந்தனா். மலா்கள் அலங்காித்த போர்வையினால் மூடப்பட்டு, மேடைக்கருகில் புதைக்கப்பட்டது.
[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]