மனப்பாங்கு தேர்வு (கடமை)
வினா 1 – வீட்டுப் பாடம் செய்யும்போது
- அ. நீங்களாகவே செய்வீர்களா?
- ஆ. பெற்றோரின் அறிவுறுத்தலின் பேரில் செய்வீர்களா?
- இ. வீட்டுப்பாடம் செய்து முடிக்க வேண்டும் என்பது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பீர்களா?
- ஈ. அம்மா அல்லது சகோதரி செய்ய எதிர்பார்ப்பீர்களா?
வினா 2– உன் வீட்டில் பூச்செடிகள், தொட்டியில் அல்லது தோட்டத்தில் உள்ளது. உன் அம்மா அவசரமாக சில நாட்களுக்கு வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அம்மா இல்லாத அந்த நேரத்தில்,
- அ. நீ செடிகளுக்கு தண்ணிர் ஊற்றுவாய்
- ஆ. அப்பாவைக் கூப்பிட்டு தண்ணீர் ஊற்றச் சொல்வாய்
- இ. செடிக்கு தண்ணீர் ஊற்றாதது பற்றி அக்கறை கொள்ளமாட்டாய்
- ஈ. வீட்டில் பூச்செடிகள் உள்ளது பற்றியே தெரியாது
வினா 3 – உன்அண்ணா மின்விசிறியை மறதியாக ஓடவிட்டுவிட்டு சென்றுவிட்டார். இதைக்கண்டு
- அ. உடனடியாக ஸ்விட்சை அணைப்பாய்.
- ஆ. புகார் சொல்வதற்காக அம்மாவைத் தேடுவாய்.
- இ. விசிறியை நிறுத்திவிட்டு பிறகு புகார் சொல்லுவாய்.
- ஈ. விசிறி ஓடுவதைப்பற்றி கவலையே படாமல் நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவாய்.