உள்ளங்கை விளையாட்டு
குறிக்கோள்:
இது ஒரு சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான விளையாட்டு.
தொடர்புடைய விழுமியங்கள்:
- சுய மரியாதை
- மற்றவர்களிடம் நல்லதையே காணுதல்
தேவையான பொருட்கள்:
ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுக்கப்பட ஒரு தூண்டுத் தாள் மற்றும் ஒரு பென்சில்
குழந்தைகளை தயார் படுத்தும் குருவின் பணி:
ஏதும் இல்லை
எப்படி விளையாடுவது:
- குழந்தைகள் அனைவரையும் வட்டவடிவத்தில் தரையில் அமரும் படி குருவானவர் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
- ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய பெயரை தன்னிடம்கொடுக்கப்பட்டத் துண்டுத்தாளில் எழுதி அதில் தன்னுடைய உள்ளங்கையையும் வரையவேண்டும். பின் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கின்ற துண்டுத் தாளை தனக்கு அருகாமையில் அமர்ந்திருக்கின்ற மற்றவரிடம் கொடுத்து விடவேண்டும்.
- ஒவ்வொரு குழந்தையும் தன்னிடம் வந்து சேர்ந்த உள்ளங்கை வரையப் பட்ட துண்டுத் தாளில் உள்ளங்கை பகுதியில் அத்தாள் யாரிடம் இருந்து வந்து சேர்ந்ததோ அக்குழந்தையைப் பற்றி ஒரு நேர்மறையான கருத்தினை பதிவிடவேண்டும். பிறகு, அத்துண்டுத் தாளை தனக்கு அருகாமையில் அமர்ந்து இருக்கின்ற மற்ற குழந்தையிடம் கொடுத்து விட வேண்டும்.
- இவ்வாறு ஒவ்வொரு குழந்தையும் வகுப்பில் உள்ள மற்ற குழந்தையைப் பற்றி நேர் மறையான கருத்தினை எழுத வேண்டும்.
- இறுதியில் ஒவ்வொரு துண்டுத் தாளிலும் எழுதப் பட்ட நேர்மறை கருத்துக்கள் படித்துக் காட்டப் பட வேண்டும்.