கோபால ராதே கிருஷ்ணா – மேலும் படிக்க
கோபாலா
கோபாலா – கோ என்றால் பசு. பால என்றால் பாதுகாத்தல். பகவான் கிருஷ்ணர், மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்தார் எனினும் பிருந்தாவனத்தில் இடையர் குலத்தை சேர்ந்த நந்தகோபர், யசோதா என்னும் வளர்ப்புத் தந்தை தாயால் வளர்க்கபட்டார். கிருஷ்ணர் வளர்ந்தவுடன் தன் வயதொத்த பிள்ளைகளுடன் பசுக்களை அன்போடு பராமரித்து, புல்வெளிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வார்.இவ்வாறு கோபாலா என்றால் பசுக்களை மேய்க்கும் பாத்திரத்தை ஏற்றவன் என்று அர்த்தம். இது ஒரு நேரடி அர்த்தமே. ஏனெனில் பாபா நமக்கு, கோ என்றால் உயிர்கள்,ஆத்மா அல்லது நபர்கள் என்று விவரிக்கிறார்.
ஆகவே, கோபாலா என்றால் ஆத்மாவை பாதுகாப்பவன், தனி மனிதர்களை பராமரித்து, அவர்களை தீயவைகளிடமிருந்து விலக்கி அவர்கள் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருக்க பாடுபடுபவன். அவரே காப்பாற்றி அருளுபவர். அவரே துவாபர யுகத்தில் மாடு மேய்ப்பவனாக வந்தவரும், இடையறாது மக்களின் நன்மையை கோருபவரும் ஆவார்
ராதேகிருஷ்ணா
ராதேகிருஷ்ணா – ராதா என்பவள் பகவான் கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தையாவாள். பகவான் எப்போதும் ராதவைப்பற்றி மிகவும் உயர்வாக பேசிவந்துள்ளார்.மேலும் அவர் ஒருதடவை, எவ்வாறு பெருமளவிலான மக்கள் ஞானம் அடையும்பொருட்டு பகவத்கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார் என்பது பற்றி கூறினார் ஆனால் ராதாவுக்கு வேறு ஒரு சிறந்த காரணம் இருந்த்து. பகவானிடம் கொள்ளும் பக்தியின் ரகசியத்தை மக்களுக்கு கற்பிக்க வந்த ஒரு கருவியே ராதா. அவளது பக்தி முழுமையானது. இவ்வுலக நுகர்வுகளை புறந்தள்ளி,இறைவனிடம் தூய அன்பு கொள்வதற்கான உதாரணமாக நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுபவள் ராதா நமக்கு பல பாடங்களை புகட்டுகிறாள் என்று ஸ்வாமி கூறுகிறார் 1978 ஆம் ஆண்டு வழங்கிய அதே அருளுரையில், பாபா கூறினார், உன்னுடைய செயலை, சிந்தனையை உன்னால் கிருஷ்ணனிடம் சரணாகதி செய்ய முடியும் என்றால் நீ ராதாவின் நிலையை அடைய முடியும் என்றார். எனவே, ராதா என்பவள் ஒரு பெண்ணை மட்டும் குறிப்பவளல்ல.
யாரொருவர் க்ருஷ்ணனிடம் தன்னை ஒப்புக்கொடுக்கிறாரோ அவரே ராதாவாக ஆகி விடுகிறார் ராதா நமக்கு என்ன போதிக்கிறாள் என்றால் நாம் நமது மூளையை அறிவாலும் ஞானத்தாலும் நிரப்புவது மட்டுமின்றி நமது இதயத்தை அடர்ந்த பக்தியால் நிரப்ப வேண்டும் என்பதே. மேலும் அவள் நாம் நமது மூளையை அறிவால் நிரப்புவதைவிட இதயத்தை அன்பால் நிரப்புவதே சாலச்சிறந்தது என்றும் போதிக்கிறாள். நமது புலன்களை நாம் கிருஷ்ணனிடம்சமர்பிக்க வேண்டும், இல்லையெனில் அவை நம்மை தவறான பாதைக்கு அழைத்துச்சென்றுவிடும் என்றும் கற்பிக்கிறாள் ராதா, நாம் இந்த நிலையற்ற மாறக்கூடிய உலகை நம்பக்கூடாது என்றும் கற்பிக்கிறாள். அதைவிடுத்து, நமது கவனத்தை நிரந்தரமான இறைவனிடம் நிலை நிறுத்துவது நல்லது. இந்த உலகத்தை நம்பக்கூடாது, மரணத்தைக்கண்டு அஞ்சக்கூடாது,இறைவனை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கற்பிக்கிறாள் எதற்காக இந்த மூன்று விஷயங்களையும் கூறுகிறாள் என்றால் சதா சர்வகாலமும்,எந்த குணத்திலும்,இறைவனின் திவ்யானுபவத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே நம்மை பொறாமையிலிருந்து விடுபட சொல்கிறாள் அதிலும் குறிப்பாக பிறர் வளமாக இருப்பதைக் கண்டு பொறாமைபடக்கூடாது என்கிறாள் ராதாதான் கோபிகைகளின் சந்தேகங்களை களைந்து அவர்களின் எதிமறை எண்ணங்களை நீக்கியவள். இவையே ராதா நமக்கு கற்பிக்கும் சில பாடங்கள். நாமும் நமது உலகப்பற்றுகளையும் எண்ணங்களையும் துறந்தோமானல் ராதாவைப்போல் மாறலாம் என்பதை நினைவு கூர்வோமாக
கோவிந்தா
கோவிந்தா – கோ என்பது பசுக்களை குறிக்கிறது.கோவிந்தா என்பவர், மனிதனிடமுள்ள மிருக குணங்களை அடக்குபவர் என்று ஸ்வாமி கூறுகிறார் மிருக இயல்புல்களை கைவிட்டு மனிதனை உன்னதமான உயர் நிலைக்கு மாற்றும் இறைவன் கோவிந்தன் ஆவான்.
சாயி கிருஷ்ணா
சாயி கிருஷ்ணா – சாயி – என்றால் தெய்வீகம். சாயி என்றால் தெய்வீகமே உருவானவர். அனைத்து செல்வங்களையும் அடையப்பெற்றவர். அதாவது அனைத்து விதமான செல்வங்கள், வளங்கள், அழகு மற்றும் அறிவு கிருஷ்ணா-கிருஷ்ணா என்ற் சொல்லின் வேர்ச்சொல் கர்ஷ் என்பதாகும் அதாவது மனதை கவர்பவன் அல்லது ஆகர்ஷணம் செய்பவன். பகவான் தன் தெய்வீக அருளாலும், அற்புதங்களாலும், வியக்கத்தக்க சக்தி மற்றும் தன் அன்பினால் அனைவரையும் கவர்ந்து ஒவ்வொருவரின் மனதையும் சிறை பிடித்து புலன்களின் பின்னே மனம் சென்று விடாமல் இழுக்கிறார். பாபா கூறுகிறார், இத்தகைய கவர்ந்திழுக்கும் குணம், தெய்வீகப்பண்பு ஆகும். மேலும் அவர் கூறுகிறார். இத்தகைய கவர்ந்திழுக்கும் குணம் இருப்பதற்கான முழு காரணம், நம்மை மனமாற்றம் செய்யவும், மறுசீரமைப்பு செய்யவும், சரிசெய்யவுமேயாகும். கிருஷ்ணா என்ற் சொல்,கிரிஷ் என்பதிலிருந்தும் வந்த்தாக கொள்ளலாம், ஏனெனில் க்ருஷி என்றால் வயலில் பயிர் செய்வதாகும். எனவே கிருஷ்ணன் என்றால் நமது மனதிலிருக்கும் எதிர்மறை எண்ணங்களாகிய களைகளை களைந்து நேர்மறை குணங்கள் என்னும் விதைகளை, விதைப்பவன். கிருஷ்ணா ஆனந்தம் என்னும் அறுவடையை பக்தர்களின் இதயத்தில் பயிர் செய்கிறார்.