ஞாபக சக்தி விளையாட்டு
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
- நினைவுத் திறன்
- கவனம்
- கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களை அறிதல்
- அந்நாமங்களின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளுதல். பக்தி
ஆயத்தமாகுதல்:
- குரு பலகையில் (போர்ட்டில்), கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களை எழுதவேண்டும்
- பின்னர், கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களையும் அவற்றின் பொருளையும் குழந்தைகளுடன் கலந்துரையாடவேண்டும்.
விளையாட்டு:
- குழந்தைகளை ஒரு நிமிடத்திற்குள், அனைத்து பெயர்களையும் படிக்கச் சொல்லவேண்டும்.
- பின்னர், பலகையிலிருந்து(போர்டிலிருந்து) அனைத்து பெயர்களையும் அழித்துவிடவேண்டும்.
- இப்பொழுது, அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் படித்த பெயர்களை எல்லாம் நினைவு படுத்தி எழுதச் சொல்லவேண்டும்.
- அதிக பெயர்களை எழுதும் குழந்தையே வெற்றி பெற்றவராவார்.