தபால் பெட்டி
விளையாட்டின் நோக்கம்:
இது ஒரு தனித்துவமான மற்றும் சுவாரஸ்யமான செயலாகும்.
கற்பிக்கப்படும் குணங்கள்:
வெவ்வேறு மதங்களைப் பற்றிய அறிவு.
தேவையான பொருட்கள்:
வெவ்வேறு மதங்களின் அட்டைகள் மற்றும் 5 அல்லது 6 சோப்புப் பெட்டிகள், ஒரு மரப் பலகை.
தயாரித்துக் கொள்ள வேண்டியவை:
- முக்கிய மதங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட வெவ்வேறு அட்டைகள் தயாரிக்கப்பட வேண்டும் அல்லது சேகரிக்கப்பட வேண்டும். (எடுத்துக்காட்டு: மதத்தின் பெயர், நிறுவனர், புனித நூல், திருவிழாக்கள், போதனைகள், புனித இடங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் போன்றவை.)
- ஒரு மரப்பலகையில் 5 அல்லது 6 பெட்டிகள் (காலி சோப்புப் பெட்டிகள் பயன்படுத்தப்படலாம்) அந்தந்த மதங்களின் வெவ்வேறு சின்னங்களை ஒட்டி அஞ்சல் பெட்டிகளைப் போல் அமைக்கவும்.
விளையாட்டு:
- குரு குழந்தைகளை 2 அல்லது 3 குழுக்களாகப் பிரிக்கலாம்.
- அனைத்து அட்டைகளும் குலுக்கப்பட்டு ஒரு குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
- குழுவிற்கு வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, குழந்தைகள் சிந்திக்க 2-3 நிமிடங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
- அந்தக் குழுவின் குழந்தைகள் சரியான பெட்டிகளில் அட்டைகளை சேர்க்க வேண்டும்.
- கொடுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு அவர்கள் அட்டைகளை சரியாக சேர்த்தார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு சரியான சேர்கைக்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
- எல்லா குழுக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முயற்சி செய்யலாம். பின்னர் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற குழு வெற்றிக்குழுவாக அறிவிக்கபடலாம்.
மாறுபாடுகள்:
- பிரசாந்தியின் சின்னம் (அனைத்து மதங்களின் சாராம்சம்) கொண்ட ஒரு பெட்டியையும் வைக்கலாம்.
- குழந்தைகள் புட்டபர்த்தியில் (ஈஸ்வரம்மா தினம், சிவராத்திரி, ஆஷாட ஏகாதசி போன்றவை) கொண்டாடப்படும் திருவிழாக்களின் பெயர்களைக் கொண்ட அட்டைகளை அப்பெட்டியில் சேர்க்க வேண்டும்.