கீதாஞ்சலி
குறிக்கோள்:
குழந்தைகளின் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தவும், கற்றுக்கொண்ட கீதை வசனங்களை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நினைவுப்படுத்துவதே இந்த செயல்பாட்டின் குறிக்கோளாகும்.
கற்பிக்கப்படும் பண்புகள்:
- ஆர்வம்
- கவனம்
- ஒருமுக தன்மை
- நினைவாற்றல்
- பொறுமை
- துல்லியம்
- சுய திருப்தி
தயாரித்துக் கொள்ள வேண்டியவை:
- குரு 10 கீதை வசனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- குரு 20 அட்டைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.நீல நிறத்தில் 10 அட்டைகளும் மற்றும் பிங்க் நிறத்தில் 10 அட்டைகளும் உருவாக்க வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வசனங்களின் முதல் வரி 10 நீல அட்டைகளில் எழுத வேண்டும்; அதே வசனங்களின் இரண்டாவது வரி, 10 பிங்க் அட்டைகளில் எழுத வேண்டும்.
- அட்டையின் பின்புறத்தில் சுவாமியின் படத்தை ஒட்டிக்கொள்ளாம்.
- அட்டைகள் வண்ணமயமாக இருக்க வேண்டும். (மாறாக, ஸ்வாமியின் பாக்கெட் காலண்டர்கள் 10+10 வசனங்களை மறுபக்கத்தில் எழுதலாம்)
- இவை அனைத்தும் முடிந்தவுடன், அட்டைகள் தயாராக உள்ளன.
விளையாடும் முறை:
- குரு 20 அட்டைகளை கலந்து வைக்க வேண்டும்.
- குரு இரு நிற அட்டைகளை கொண்டு நான்கு வரிசைகள் அமைக்க வேண்டும் அதில் ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து அட்டைகளை வைக்க வேண்டும்.(நிறத்தை பொருட்படுத்தாமல் அட்டைகளை கலந்து வரிசையில் வைக்க வேண்டும்)
- அட்டைகளில் எழுதப்பட்ட பகுதி கீழே பார்த்த படி வைக்கப்பட வேண்டும்.
- ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் விளையாடலாம்.
- முதல் குழந்தை ஒரே நேரத்தில் ஒரு நீலம் மற்றும் ஒரு பிங்க் ஆக இரண்டு அட்டைகளை எடுக்க வேண்டும், அதில் உள்ள வசனத்தின் இரண்டு வரிகளும் பொருந்துமா இல்லையா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
- அவை பொருந்தினால், அவர் வசனத்தைப் படித்து, அட்டைகளை தன்னுடன் வைத்து கொள்ள வேண்டும். மேலும், அவருக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படும்.
- இல்லை என்றால், மற்ற குழந்தைகளிடம் காட்டிவிட்டு, மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும்.
- இப்போது இரண்டாவது குழந்தை விளையாட வேண்டும்.அனைத்து 10 கீதை வசனங்களையும் முழுமையாகப் பொருத்தும் வரை இதே முறையைப் பின்பற்றி விளையாட வேண்டும்.
மாறுப்பட்ட விளையாட்டு முறை:
- கீதை வசனங்களையும் அவற்றின் அர்த்தங்களையும் தரலாம்.
- கீதை வசனங்களின் முதல் வார்த்தை மற்றும் கடைசி வார்த்தை இந்த விளையாட்டை விளையாட பயன்படுத்தலாம்.
குருக்களுக்கு குறிப்பு:
நேரம் மற்றும் குழந்தைகளின் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு குரு எத்தனை கீதை வசனங்களை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.