புருஷ: ஸபர: பார்த்த – மேலும் படிக்க
புருஷ: ஸ பர: பார்த பக்த்யா லப் யஸ் த்வனன்யயா
யஸ்யாந்த: ஸ்தானி பூதானி யேன ஸர்வம இதம் ததம்
(அத்.08, பதி.22)
பொருள்: அர்ஜூனா! எல்லா உயிரினங்களும் எவருள் இருக்கின்றனவோ, எவரால் இந்த ப்ரபஞ்சம் முழுவதும் வியாபிக்கப்பட்டும் இருக்கிறதோ எல்லயற்ற பரம்பொருளும் பரம புருஷனுமான அந்த பரமாத்மா வேறு எதிலும் நாட்டமில்லாத தூய பக்தியினாலேயே அடையப் படுகிறார்.
“எல்லா உயிரினங்களும் எவருள் உறைந்துள்ளனவோ, எல்லா உயிர்களுள்ளும் எவர் உறைந்துள்ளாரோ அந்த எல்லையற்ற பரம்பொருளான இறைவனை வெறும் சடங்குகளால் அல்ல, எல்லாருடையதுமான அன்பால் மட்டுமே அடைய இயலும்.” என நம் பேரன்புக்குரிய பகவான் உரைக்கிறார்.
““ஜகமாகிய இந்த ப்ரபஞ்சம் முழுவதும் ஜகதீசனாகிய ப்ரபஞ்சத்தின் தலைவனால் நிரம்பப் பெற்றுள்ளது.
“அணுவுக்குள் அணுவாக, எங்கும், எல்லாமாக நிரம்பியிருக்கும் இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையையும் மேன்மையையும் அறிய தனியொரு இடம் தேவையில்லை.”
கோபியரின் பக்தி:
ருக்மினி, ஸத்யபாமா மற்றும் நாரதமுனிவரின் பக்தியை விடவும் கல்வி பயிலாத இடையர் குலப் பெண்டிரான கோபியரின் பக்தி எவ்வளவு ஆழமிக்கது என்பதை நிரூபிக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நாடகம் ஒன்றை நிகழ்த்தினார். பக்தர் ஒருவரின் பாத தூளியை நெற்றியில் அணிந்தால் ஒழிய தீராது எனும்படியான தலைவலியினால் தாம் துன்புறுவதாகக் கூறி நடிக்க ஆரம்பித்தார். ருக்மிணியோ ஸத்யபாமாவோ நாரத நுனிவருங் கூட தமது பாத தூளியை அணிந்தால் கிருஷ்ணரின் தெய்வீகமான நெற்றி அசுத்தமாகி விடும் எனக் கூறித் தமது பாத தூளியைத் தர மறுத்தனர்.
எவ்வாறு இருப்பினும் நாரத முனிவர் கோபியர்களை அணுகியபோது, அவர்கள் தமது பாத தூளியைத் தருவதற்கு எவ்வித தயக்கமும் கொள்ளவில்லை. நாரதர் இதனால் கொடிய விளைவுகள் ஏற்படும் எனக் கூறி எச்சரித்திருந்தும், தமது அன்புக்குரிய பகவான் அவ்ர்கள் தமது தலைவலியாகிய துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் எனும் ஒரே நோக்கம் கொண்டிருந்ததால் அவர்கள் எவ்வித கவலையும் கொள்ளவிலலை.
இறைவன் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு உயிரிலும் ஒவ்வொரு பாதத்திலும், அப் பாதத்தில் உள்ள தூளியிலும் கூட உறைந்திருக்கிறார். கோபியர்கள் ஒவ்வொன்றிலும், தமது பாதங்களிலும், அது போலவே அவற்றின் பாத தூளியிலும் கூட கிருஷ்ணனைக் கண்டனர். ஆகவே, அவர்கள் எவ்வித தயக்கமும் பாவம் செய்கிறோம் எனும் அச்சமும் கொள்ளவில்லை.
கோபியர் விளிப்படுத்திய இத்தகைய எல்லாவிதத்திலும் கொண்டுள்ள பக்தியே பக்தியில் எல்லாம் உயர்ந்த நிலையாகும் என நாரதர் உணர்ந்தார்.