அனுத்வேககரம்
கேட்பொலி
வரிகள்
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் சயத்
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே
பொழிப்புரை
மற்றவர்களைத் துன்புறுத்தாது, வாய்மை, இனிமை கொண்ட நலம் விளைவிக்கும் வாக்கியங்கள், வேதம் ஓதுதல் ஆகியவை வாக்கிற்கான தபஸ் எனப் படுகின்றன.
பதவுரை
அனுத்வேககரம் | துன்புறுத்தாத, உணர்ச்சி வசப்படாத |
---|---|
ஸத்யம் | உண்மையான |
ப்ரியஹிதம் | இனியதும் நலம் தருவதுமான |
யத் வாக்யம் ச | வாக்கியம் எதுவோ அதுவும் |
ஸ்வாத்யாய அப்யஸனம் ஏவ ச | வேதம் ஓதுதலும் |
வாங்மயம் தப: | வாக்கிற்கான தபஸ் |
உச்யதே | என அழைக்கப்படுகிறது |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
FURTHER READING