“உடல்நலம், சுகாதாரம்” – இச்சொற்களின் பொருள்என்ன?
“உடல் நலமே உண்மையான செல்வம்”. தூய்மையே(சுத்தமே) – தெய்வீகத்துக்கு அடுத்தபடியானதாகும்” – இவைஉலகமுழுவதும் கூறப்படும் நல்லுரைகள். இந்தல்லுரைகள், மனிதனின் மகிழ்ச்சிக்கு உடல்நலமும் சுகாதாரமும் எவ்வளவுமுக்கியமான அங்கம் வகிக்கின்றன என்பதை ரத்தினச் சுருக்கமாகக்கூறுகின்றன.
‘வந்து குணப்படுத்துவதைவிட வருமுன் காப்பதே சிறந்தாகும்’ என்பது அடிக்கடிக் கூறப்படும் நல்லுரை. தனிப்பட்ட சுகாதாரமும்,சுற்றுப்புறச் சுகாதாரமும், நோயினைத் தடுப்பதற்கும், உயர்ந்த உடல் நலத்தை முன்னேற்றவும் எடுக்கப்படும் பெரும்முயற்சிகளாகும்.
மிகப் பழங்காலத்திலிருந்து, நமதுநாட்டில் ஆரோக்கியம்என்பது பௌதிக உடலைப் பற்றிச் சார்ந்தது மட்டும் அல்ல. அது மனநலத்தையும் ஆன்மீக நலத்தையும்கூடக் குறிப்பது. மேனாடுகளில், சமீபகாலம் வரையில், உடல்நலம் என்பது பௌதிகஉடலைமட்டும் குறிப்பதாக இருந்தது. தற்கால நரம்பு – மனத்தத்துவஇயலின்படி மனநிலையில் ஏற்படும் மாறுதல்கள் பௌதிக உடலில்நரம்பு, உடல் கூறில் மாறுதல்களை ஏற்படுத்தும் என்பதுதெரியவந்தது. W.H.O. (உலக உடல்நல நிறுவனம்) – உலகமக்களின் உடல்நலத்தைக் கவனிப்பதற்காக நிறுவப்பட்டது.உடல்நலத்தை “முழுமையான பௌதிக, மன, சமூக உணர்வின்நிலைகளின் நலம்” என்று வரையறுக்கிறது.
இது முன்னேற்றமடைந்தால்,நோய்வாய்ப்படுதல்தானாகவேகுறைந்துவிடும் என்றும் கூறுகின்றது. ஆன்மீகஉடல்நலம் குறிப்பிடப்படாவிட்டாலும், பௌதிக உடல்நலத்துடன்,மன நலத்தின் முக்கியத்துவம் இப்போது உலக நிறுவனத்தால்குறிப்பிடப்பட்டுள்ளது.”ஆரோக்கியமான உடலில்தான், ஆரோக்கியமான மனம் குடிகொள்ளும் ஆரோக்கியமானமனமேஆரோக்கியமான உடலுக்கு ஆதாரம்’.
உடல்நலம் என்பது, பரந்த அளவில் சுகாதாரத்தின் எல்லாஅம்சங்களையும் கொண்டுள்ளதாகும். சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவைத்துக்கொள்ளுதல் (Sanitation)அடிக்கடி வரும் நோய்களுக்குமருத்துவமும், தடுக்கும் முறையும் ஆகியவை அவற்றில் சில.மக்களின் நல்வாழ்வுக்கு உடல்நலம் மிகவும் முக்கியமானதாகும்.
நுண்ணிய உயிர்களே பல வியாதிகளுக்குக்பெரும்காரணமாகும்:
தடுப்பு முறைகளுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்என்பதுபொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இந்தச்சூழ்நிலையில் சுகாதாரம் முதலிடம் வகிக்கிறது. சுகாதாரமென்பது,உடல்நலத்தைக் காப்பாற்றுகின்ற முயற்சிகளைக் குறிப்பது. அதுசுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளைக் குறிப்பது.தனி மனிதனுடைய, சமூகத்தினுடைய சுகாதாரத்தையும்உள்ளடக்கியது/ சுற்றுப்புற சுத்தமே முக்கியமானது. ஏனெனில், பலவியாதிகள் அசுத்தமான சூழ்நிலைகளில் வளர்ந்து, பரவுகின்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன. இவை அளவில்மிகவும்நுண்ணியமானவை. அவற்றில் சில மலேரியா கிருமிகள்போன்றுவிலங்கினத்தைச் சேர்ந்தவை.இன்னும் சிலநுண்பெருக்காடி (Microscope) யினால் பார்க்க இயலாதவை.இவை தாவரவர்க்கத்தின் தாழ்ந்த இனத்தைச் சார்ந்தவையாகும்.இவை டைபாய்டு, பிளேக் போன்ற நோய்களை உருவாக்குபவை, இவை, Germs, Bacteria, Microbes, என்றழைக்கப்படுகின்றன. டைபாயிடு நுண்ணுயிர்கள் மற்ற எல்லா வகைகளை விடப்பெரியவை. அவற்றில் 8000 நுண்ணுயிர்களைத் தொடராக வைத்தாலும் ஒரு அங்குலங் கூட இராது என்றால் அதன் அளவைநாம் ஊகித்துக் கொள்ளலாம். உயிரற்ற நிலைக்கும், தாவரநிலைக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள வைரஸ் “Virus” கிருமிகளாலும் சில நோய்கள் உருவாகின்றன. எல்லாக் கிருமிகளும் நோயை விளைவிப்பன அல்ல என்பதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும். சில நுண்ணுயிர்கள் பயனுள்ளளவையாகச் செயல்படுகின்றன. அவை மனித ஆரோக்கியமும் நல உணர்வும் பெருக மிகவும் அவசியமாகவும்உள்ளன.
உடல்நல சமூக நடவடிக்கைகள் (Public Health Mearures):
நோய்கள், நோய்வாய்ப்பட்டவரைத் தொடுவதாலோ,நோய்களை சுமந்திருப்பவர் மூலமாகவோ, காலரா போன்றநோய்க்கிருமிகள் உள்ள தண்ணீர் போன்ற மற்றவற்றின்மூலமாகவோ, ஏற்படக்கூடும்.பஞ்சாயத்துகள், நகர் மன்றம் போன்ற Public bodies அத்தண்ணீரிலிருந்து கிருமிகளை அப்புறப்படுத்துதல், அல்லது செயலறச்செய்தல், வீட்டில்தண்ணீரைக் கொதிக்க வைத்தல் போன்ற முறைகள் மூலமாக அந்நுண்ணுயிர்களை அழித்து நோய்கள் உருவாகாமலும், பரவாமலும் தடுக்கப்படுகின்றன. குடிக்கும் தண்ணீரைப் பராமரிப்பது Conservency, Scavenging ஆகியவை ஒன்றியம், நகர்மன்றம் ஆகியவற்றின் முக்கியப்பணிகளில் சில.Conservency என்பது மலம், குப்பை போன்ற கழிவுப்பொருட்களை அகற்றிச் சுத்தம் செய்வதையும் குறிக்கும். Scavenging என்பது குப்பையினை சுத்தம் செய்வதையும்குறிக்கும். இந்தப் பணியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பங்கேற்க வேண்டும்.கழிவு நீர் அகற்றுவதற்குப் பொருத்தமான சாக்கடைக் குழாய்களமைப்பும், சுண்ணாம்பு, பிளீச்சிங்பவுடர், பினைல் போன்றகிருமிக்கொல்லிகளைப்பயன்படுத்துதலும், நோய்கள் உருவாகாமலும், பரவாமலும் தடுக்க உதவி செய்கின்றன.
vaccination போன்ற முறைகள் சுகாதாரத்தின் தலைப்பின் கீழ்வருவனஅல்ல. அவை உடலில் எதிர்ப்புச் சக்திகளை (antibodies) உருவாக்கி, நோயினை உண்டாக்கும் கிருமிகளை அல்லது Virus(வைரஸ்) போன்றவற்றை எதிர்க்குமாறுசெய்கின்றன. பெரியம்மை வாக்ஸின், இளம்பிள்ளைவாதத்திற்கான வாக்ஸின். இவை உடல்நல நடவடிக்கைகளாகும்.
தனிப்பட்ட சுகாதார உடல்நல நடவடிக்கைகள்
ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் மக்களின்உடல் ஆரோக்கியமானது தனிப்பட்ட மனிதரின் சுகாதாரத்தைப்பொருத்ததாகும்; சட்டத்தின் மூலமாகவும் விதிமுறைகளின் மூலமாகவும் சுகாதாரச் சூழ்நிலைகளை முன்னேற்றலாம், அதிகரிக்கச் செய்யலாம். ஆயினும், இவற்றின் வெற்றி, தமது சுற்றுப் புறங்களைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும்வைத்துக்கொள்ள தனிப்பட்ட மக்கள் தரும் ஒத்துழைப்பைப் பொருத்ததாகும். தனியார் சுகாதாரம் மிகுந்த முக்கியத்துவத்தைமுதலிலிருந்தேபெறுகின்றது.
நல்ல ஆரோக்கியத்துடனிருக்க, ஒருவர் நற்பழக்கங்களைவளர்த்துக் கொண்டு, முறையான ஒழுங்குக்கட்டுப்பாடுகளைக்(Disciplines)கடைப்பிடிக்க வேண்டும். உடல்ஆரோக்கியத்துக்குபொதுவாக அவசியமானவை என்று கருதப்படுபவை கீழ்வருமாறு.
- உடலுக்கும், வாய்க்கும் உரிய சுகாதார முறை.
- தகுந்த சத்துணவு.
- காற்றோட்டமும், தகுந்த உடற்பயிற்சிகளும்.
- தகுந்த உடலோய்வு (ஓய்வெடுத்தலும், தூக்கமும்.
- மற்ற அம்சங்கள்.
உடலுக்கும் வாய்க்கும் உள்ள சுகாதாரமுறை தோல்:
தோலானது உடலினை முழுவதாகப் போர்த்தி மூடியிருக்கிறது. தோலின் மேற்புற அமைப்பில் இடைவிடாது புதியஉயிரணுக்கள் (Cells)உருவாகிக்கொண்டும், பழைய உயிரணுக்கள் அழிந்துகொண்டும், இருக்கின்றன. பழைய உயிரணுக்கள் வெளியே தூக்கியெறியப்பட்டுத் தோலால்புறக் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு வெளியேற்றுதலானது, இடைவிடாத, தொடர்ந்த செயல்முறையாகும். மேலும் அழுக்கும், வியர்வையும் தோலின் துவாரங்களை அடைக்கின்றன. இவை, தோலின் மிக முக்கிய வெப்பச்சீர்படுத்தும் தொழிலைப்பாதிக்ககின்றன, ஆகவே நல்ல தண்ணீரும் சோப்பும் பயன்படுத்திநீராடுதல் தவிர்க்க இயலாத அவசியமாகின்றது. இந்தியாவின் வெப்பநிலையில் இது மிகவும் அவசியம். நீராடலானது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. நீராடும்போது இறைவன் திருநாமத்தை உச்சரித்தால்அது உடலை மட்டுமல்ல சீவனையும் புனிதப்படுத்துகிறது. தெய்வீக உணர்வினைத் தட்டியெழுப்புகிறது. நீராடாதிருக்கையில் மனம்சோம்பி , அறிவுக் கூர்மை மழுங்குகிறது. பாபா கூறுவார்: “சுத்தமில்லாத தோல் மட்டுமல்ல, சீவிச் சீர்படுத்தப்பட்டாமலிருக்கும் அழுக்கானதலைமுடிகளும், பொருத்தமில்லாத முடியலங்காரங்களும் ஒழுங்கில்லாத மனத்தையும், அறிவையும்குறிக்கின்றன”.
வாய்:
பற்கள், ஈறுகள், நாக்கு இவை சுத்தமாக இருக்க வேண்டும். இது சீரண சக்தியையும், பொதுவான உடலாரோக்கியத்தையும் வளர்க்கிறது. குழந்தைகள் பல் விளக்கித் தூய்மையுடன்வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் பல்சொத்தையாகி, பலபிரச்சினைகள் உருவாகும்.
நாக்கு தூய்மையாக இருக்க வேண்டும் என்று பாபாவற்புறுத்திக் கூறுவார். நமது உடலையும் உயிரையும் போஷிக்கின்ற உணவை விழுங்குவதற்கு நாக்கு மிகவும் உதவி செய்கிறது. அது பேச்சுக்கும், வெளி உலகத்துடன் சம்பாஷனை நடத்துவதற்குமான கருவி. ஆகவே இதற்கு இரண்டுமுக்கியமான தொழில்கள் உண்டு. மற்ற பொறிகளுக்கு ஒவ்வொரு தொழில் தான் உண்டு. நாவின் இவ்விரு தொழில்களும் சம அளவில் முக்கியமானவையாகும். மேலும் நாக்கு, சமூகத்தில் நாம் எவ்வாறுநம்மை நடத்திக்கொள்ள வேண்டும். மற்றவருடன் பழகவேண்டும் என்பதையும் கற்பிக்கிறது. கூரிய பற்களின் நடுவே தேவைக்குத் தகுந்தவாறு சுழன்று, ஆனால் அவற்றினால் காயமுறாமல் தன்பணியைச் செய்கின்றது. இவ்வாறு உலகிலும் சமூகத்திலும் உள்ள எல்லாவிதச் சக்திகளுக்குமிடையில் நம்மை எவ்வாறு நாம் நடத்திச்செல்ல வேண்டும் என்று கற்பிக்கிறது. உண்மையும் அன்பும்கலந்த இனிமையான இதமான பேச்சு, தூய்மையான உணவும் நாவைத் தூய்மையாக்குகின்றன. நமது நாக்கின் தோற்றமும்,நிலைமையும் எவ்வாறு மருத்துவருக்கு நமது உடல் நிலையை உணர்த்துகின்றனவோ, அதுபோல நமது பேச்சும் உலகிற்கு நமது உள்தன்மையை அதாவது நமது மனப்பாங்கினையும், இதயப்பாங்கினையும் தெரிவிக்கின்றது. நம் நாட்டு நல்லோர் (சாதுக்கள்) இறைவனை இடைவிடாது மனத்தில் கொண்டுஅவரது திருநாமத்தை உச்சரிப்பதற்கும் அவரது மகிமைகளைப் பாடுவதற்குமாகவே இறைவனால் நாவு நமக்குப் பரிசாகஅளிக்கப்பட்டுள்ளது என்று நமக்குப் இடைவிடாது நினைவுபடுத்தி, நம்மை இறைஞ்சி வருவதை நமதுநாட்டு வரலாறு முழுவதிலும் கண்டறியலாம். இது மட்டுமே நம்மை துன்பத்தளையினின்றும் விடுவிக்க வல்லது என்று அவர்கள் வற்புறுத்திக் கூறுகின்றனர். காது, தொண்டை, மூக்கு இவற்றையும் சுத்தமாகப் பராமரித்தல்வேண்டும். உடையானது சுத்தமாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும். ஆடம்பர உடை அகங்காரத்தை உப்ப வைக்கிறது.
பொருத்தமான சத்துணவு:
நமது உணவின் அளவினையும் தன்மையினையும்(ஆகாரம்) ஓய்வெடுக்கும் பழக்கங்களையும் (விகாரம்) பொருத்தே, உடலானதுவலுவுள்ளதாகவோ, வலுவற்றதாகவோ, திறமையுள்ளதாகவோ, திறமையற்றதாகவோ, இருக்கிறது. ஆகாரமானது வாய்மூலமாக நாம் உட்கொள்ளும் உணவை மட்டும்பொருத்ததல்ல என்றும், ஐம்பொறிகளால் நாம் ஏற்றுக்கொள்ளும்அனைத்தையும் குறிப்பதாகும் என்றும் பாபா கூறுவார். ஆகவே, காண்பதில் தூய்மையும், கேட்பதில் தூய்மையும்கூட நாம் உண்ணும் உணவின் தூய்மைபோல முக்கியமானதாகும்.
நாம் உண்ணும் உணவானது சுவைமிக்கதாகவும் சத்துள்ளதாகவும், இனிமை தருவதாகவும் இருக்க வேண்டும். அதுசாத்வீக குணமுள்ளதாக இருக்க வேண்டும். உணவுப்பழக்கங்கள்அளவுடன் இருத்தல் மிகவும் அவசியமானதாகும். சத்துள்ள, உயிருட்டமளிக்கும் உணவுகூட, ஒழுங்கான அளவில் உட்கொள்ளாவிடில் உடலை ஆரோக்கியமற்றதாக்கி விடும். வயிறுபுடைக்க உண்ணாமல் அளவுடன் உண்டால் மட்டுமே மக்கள்நீண்டகாலம் ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இயலும்.நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு முக்கியமான காரணம் மக்கள்பலருடைய வீணாக்கும் தவறான பழக்கங்களேயாகும் என்று பாபாகூறுகிறார். “இருவேளை உண்பவன் போகி, ஒருவேளை உண்பவன் யோகி, மூன்று வேளை உண்பவன் ரோகி (நோயாளி) என்றுபாபா கூறுகிறார்”.
உணவானது உடலை மட்டுமல்ல, மனத்தையும் வளப்படுத்துகின்றது. உணவில் சில சூக்குமத்தன்மைகளால்மனம் வளப்படுத்தப்படுகிறது. கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுப் பிறகு உட்கொள்ளும் உணவு கடவுட்பிரசாதமாக மாறுகிறது. அது உடலையும் மனத்தையும், ஆன்மாவையும் வளமாக்குகிறது. “பிரஹ்மார்ப்பணம்…”அஹம்வைஸ்வானரோ…’ என்ற கீதை சுலோகங்களுடனும் காயத்ரி மந்திரத்துடனும், கடவுளின் திருநாமத்துடனும், அல்லது தமது மதத்துக்குரிய பிரார்த்தனைகளுடனும் இவ்வாறு உணவை அர்ப்பணிப்பதைத் தவறாத பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
சத்தளிக்கும் உணவானது, உணவின் முக்கியமான எல்லாகூறுகளையும் கொண்டிருக்க வேண்டும். உடலை வளர்க்கும்புரதங்கள் 10 அல்லது 15 சதவீதம்; எரிபொருளாகச்சக்தியூட்டுகின்ற கார்போஹைட்ரேட்டுகள் 10 அல்லது 15%; கொழுப்புச்சத்துக்கள் 25%: கொழுப்புச் சத்தும் சக்தியைஅளிக்கின்றது. இவை தவிர, வைட்டமின் ஏ, பி – காம்பிளெக்ஸ்,சி, டி போன்ற வைட்டமின்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மாங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்களும் (minerals) உடலுக்குத்தேவையானவையாகும்.பால் எல்லா அம்சங்களையும்கொண்டதாகும். அது இலட்சிய உணவு என்று கூறப்படுகிறது. வைட்டமின்களிலும் தாதுப் பொருட்களிலும் பெரும்பான்மையானவை கறிகாய்களில் உள்ளன. புரோட்டீன்கள்(புரதச்சத்து) உளுந்து வகைகளிலும், பருப்பு வகைகளிலும்உள்ளன. கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரைச் சத்து) அரிசி, கோதுமை போன்ற தானியவகைகளில் உள்ளன. மாமிசம் (meat) புரதச்சத்து மிகுந்ததாகும். விலங்கினப் புரதச்சத்தாதலின் நல்ல உணவெனக் கருதப்படுகிறது. ஆயினும் மனிதன்தாவர உணவினை உண்ணும் வகையினைச் சேர்ந்தவனாகக் கருதிக்கொள்வதே சாலச் சிறந்தது. அதுவே அவனது உயர்ந்தபாவனைகளை வளர்த்துக் கொள்ள உதவியாக இருப்பதாகும்.ஆகவே புலால் உணவு மனிதனுக்கு உகந்ததன்று. ஆன்மீகசாதகர்கள், தாவர உணவையே (சாத்வீக ஆகாரம்) கூடிய வரையில் உட்கொள்ள வேண்டும்.
கலோரியின் அளவுகளைக் குறிப்பிட்டு, அளவானஉணவினையும், சத்துத் தன்மையும் பற்றிக் பல பட்டியல்கள் உள்ளன. இவற்றைப்பற்றி ஓரளவு அறிவும், கருத்தும் கொண்டால், அன்றாட உணவுத்திட்டத்தைச் சீர்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும்.
காற்றோட்டமும் பொருத்தமான உடற்பயிற்சியும்:
காற்றோட்டமும், உடற்பயிற்சியும் நல்ல ஆரோக்கியம் பெறஉதவியாகஉள்ளன. அவை அவசியமும் கூட. வெளிக்காற்றில், காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சிகளும், விளையாட்டுகளும். குறிப்பாக யோகாசனங்களும் உடலின் இயக்கத்தையும் பலஉறுப்புகளின் இயக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. பிராணவாயு வாழ்க்கைக்கு இன்றியமையாதது. பயிற்சிகளின் போதும், யோகப்பயிற்சிகளின் போதும், புதிய காற்று நுரையீரல்களில் நிரம்பி, இரத்தத்தை வளப்படுத்தி, கரியமில வாயுவையும் கழிவுகள்நிறைந்த காற்றையும் வெளியேற்றிவிடுகின்றது. புதிய காற்றிலுள்ள பிராணவாயு உடலைத்தூய்மைப் படுத்துகிறது; அதிலும் யோகாசனத்தின் போது ஆழ்ந்து மூச்சு விடுவதால் அதிகக் காற்று உட்செல்லுகிறது. இந்த உடற்பயிற்சிகள் சீரணசக்தியை அதிகப்படுத்தி, பசியைத் தூண்டி, மலசலங்கழித்தலைச் சீர்படுத்தி, மலச்சிக்கலைத்தடுத்து, வலுவான உடலை உருவாக்க உதவி செய்கின்றன.
பொருத்தமாக ஓய்வெடுத்தல்
ஓய்வென்பது ஒருவரது தொழிற்பணியிலிருந்து அல்லதுவேலையிலிருந்து விலகிச் சும்மாயிருப்பதன்று. அன்றாடவேலையிலிருந்து மாறுதலாக வேறு ஏதாவது ஒன்றினைமேற்கொள்வதே ஓய்வெனப்படுகிறது. தசைகள் வேலையின் களைப்பிலிருந்து மீள்வதற்கு ஓய்வு அவசியம். அதேபோல, மூளை, சீரணக்கருவிகள், மற்ற உறுப்புகள் அனைத்திற்கும் ஓய்வுஅவசியம். வேலையை நிறுத்தி, வேறு தொழிலில் ஈடுபடுவது ஓரளவு குறிப்பிட்ட உறுப்புக்கு ஒய்வைக் கொடுக்கும். ஆனால் முழுமையாக உடலும் மனமும் ஓய்வெடுப்பதற்குத் தூக்கம் தேவைப்படுகிறது. ஆழ்ந்த தூக்கமானது நரம்புகளுக்குப் புத்துயிரளிக்கிறது. சாதாரண மக்களுக்கு தேவையான தூக்கமானது, வயது, தொழில், பழக்கங்கள் இவற்றிற்குத்தக்கவாறு மாறுபடுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு 18 அல்லது 20 மணிநேரத்தூக்கம் தேவை; ஒரு வருடக்குழந்தைகளுக்கு 14 அல்லது 16 மணி நேரத்தூக்கம் அவசியமாகும்.வளரும் பருவத்தினருக்கு 12 மணி நேரத்தூக்கம் தேவை. நடுத்தர வயதினருக்கு, 6, 7 மணி நேரத்தூக்கமும், வயது முதிர்ந்தவர்களுக்கு 8 மணி நேரத்தூக்கமும் தேவையாகும், உணவு உட்கொண்டவுடனேயே தூங்கச் செல்லலாகாது. நல்ல ஆரோகியத்துக்கு தூங்கும் வேளை ஒரே விதமாக அமையவேண்டும். தூக்கத்தின்போது தலையினையும் முகத்தையும் மூடிக்கொள்ளலாகாது. படுக்கைக்குச் செல்லவதற்குமுன், பிரார்த்தனைசெய்வதும், கடவுளின் திருநாமத்தை உச்சரிப்பதும் கெட்டகனவுகளை நீக்கி, ஆழ்ந்த தூக்கம் பெற உதவிசெய்யும், அதேபோல, காலையில் கண் விழித்ததும் கடவுளை நினைத்துப் பிரார்த்தனை செய்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். காலைப்பொழுது மிகவும் மங்களமான முறையில் தொடங்கும். நகரசங்கீர்த்தனமானது தன்னைத்தவிர, மற்றவரையுங்கூட மனங்குளிரச்செய்து, அங்குள்ள சுற்றுப்புறச் சூழ்நிலையையும்புனிதமாக்கும்.
மற்ற அம்சங்கள்:
புகைபிடிக்கும் வழக்கங்கள், மதுவருந்துதல் போன்றவை உடலை நஞ்சாக்கி, நுரையீரலையும் கல்லீரலையும் (Liver) கெடுத்து, ஆரோக்கியத்தைப் பாழாக்கி, சாவின் அருகில் இழுத்துச் செல்கின்றன. பயமானது நோய்க்கு மிகப் பெரும்காரணமாகும். கடவுட்பக்தியும், பக்தியூட்டும் பயிற்சிகளும் ஒருவன்மனதிலிருந்து பயமனைத்தையும் வேர்மூலத்துடன்அகற்றிவிடுகின்றன.
பயத்தைப்போல, கோபமும், வெறுப்பும், பொறாமையும்இன்னபிறவும், உடலைச் சீர்குலைத்து, அமைதியையும், மகிழ்ச்சியையும் இழக்கச் செய்கின்றன. சினமே, உடற் கேட்டுக்கு மிகப்பெரும் காரணமாகும். தவிர பல விதமான முறைகளில் அதுமிகவும் அபாயகரமானது. வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலை நிலவவேண்டும். வீட்டில், நல்லுறவு திருப்தி, அமைதி, புனித உணர்வுஆகியவற்றின் நறுமணம் நிறைந்து இருந்தால், வீட்டிலுள்ளஅனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
முடிவுரை:
இவ்வாறு, ஒரு தனிமனிதனின் உடல்நலவுணர்வு அவனதுஉடல், எண்ணங்கள், உணர்ச்சிகள் இவற்றைப் பற்றி எடுத்துக்கொள்ளும் கவனத்தையும், பொதுவான சுகாதாரம், சமூகநடத்தை இவற்றைக் கவனிப்பதில் உள்ள முன்னேற்பாடுகளையும் பொருத்து அமைகிறது. யோகப் பயிற்சிகள் நல்லா ரோக்கியத்தை அளிப்பதற்கும், ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்வதற்கும், மனதின்வலுவையும் சுறுசுறுப்பையும் அதிகப்படுத்தவும் உதவிசெய்கின்றன சமுதாயத்தின் ஆரோக்கிய நிலையும், சமூகப் சூழலில்உள்ள அமைதியும் இசைவுங்கூட தனிமனிதன் ஆரோக்கியத்துக்குமிக அவசியமானவை.
புனிதப்பயணங்கள், ரதயாத்திரைகள், பெருங்கூட்டங்கள்போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு முறைகள்கைக்கொள்ளப்பட வேண்டும். அச்சமயங்களில் பாதுகாப்புமுறைகள் மிக முக்கியமானவை.
கழிவுப் பொருட்களை நீக்கும்பணியை சமூகத்தில் ஏற்றுக்கொண்டு மக்கள் குறையைத் தீர்க்கமுன்வர வேண்டும். முதலில் நாம் ஸானிடேஷன் வேலை சுகாதாரநடவடிக்கைகள், முதலுதவி செய்தல் ஆகியவற்றில் அடிப்படைஅறிவும் அனுபவமும் பெற்றபின் நம் சக மக்களுக்கு பயனுள்ளசேவையினை அளிக்க முன் வரவேண்டும்.
உடல்நலமே உண்மையான செல்வம் தூய்மையே தெய்வீகத்துக்கு அடுத்த நிலையாகும். |
---|