குரூப் I ல் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம்

Print Friendly, PDF & Email
குரூப் I ல் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் அவசியம்:
  • உடல்நலம் என்பது மருத்துவரீதியான செயல்பாடு மட்டுமின்றி, ஆன்மீக, கலாச்சார, சமூக, கல்வி மற்றும் மனோதத்துவ நிலையில் அமைந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வளர்ச்சி – மேலும் திட்டமிட்ட உணவு , சுற்றுப்புறம் மற்றும் உடல் வளக் கல்வியின் ஆதாரத்தின் அமைந்த நலனாகும்.
  • உடல் வளம் மற்றும் சுகாதாரத்தின் சரியான கோட்பாடுகளை ஆரம்ப வயதிலேயே கற்பித்தல் வேண்டும்.
  • அது தொற்று நோய் மற்றும் செரிமான தடம் , சுவாச தடம் மற்றும் தேகத்தின் வெளிப்புற அம்சங்களை தாக்கக் கூடிய நோய்களையும் பரவாமல் தடுக்க உதவும்.
  • நம் புனித நூல்கள் கூறுவதாவது, “இந்த உடல் சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் ஒரு படகு – நல்ல காரியங்களை செய்து மோட்சத்தை எய்த உதவும் ஒரு கருவியாகும்.
  • ஆதலால் ஆன்மீக முயற்சிகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், அவசியமானதொன்று.
    • சீரான உணவுடன்
    • முறையான உண்ணும் பாங்கு
    • நல்ல உறக்கம்
    • உடற்பயிற்சி
    • மனிதஉடலிற்கு மரியாதை
    • பொருட்களைத் துப்புரவாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுதல்
    • ஆரோக்கியமான மனப்பாங்கு மற்றும் நற்பண்புகளை வளர்த்தல்
    • மற்றும் நற்பண்புகளை வளர்த்தல்

    இவை அனைத்தும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் சுகாதாரத்திற்கும் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

  • உடல் மற்றும் சுகாதார வழிமுறைகள் குறித்து மனதை உயர்த்தும் மற்றும் ஆத்மாவை உயர்த்துகின்ற நீதிக் கதைகளை பஜனைக்குப் பின்னர் கூறுவதால் குழந்தையின் மனதில் ஆழமான கருத்துப்பதிப்பை ஏற்படுத்துகிறது.
  • இத்தகைய பாட வகுப்புகள் மாதத்தில் ஒரு முறையேனும் நடத்துதல் சிறந்தது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: