வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உன்னதமாயிருந்த உயரிய பல மனிதர்களைக் கொண்ட
நாடாக இந்தியா ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மனித இனத்தின் மனச்சான்றின் முன்னேற்றத்
திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். யுகங்களையும் காலத்தையும் கடந்து இந்த சித்தாந்தம் இந்
நாட்டில் இடையறாது இருந்து வந்திருக்கிறது. ஒருவர் தன்னுடைய சொந்த குறிக்கோளை எய்தினால்
மட்டும் போதாது. சமுதாயத்திற்கு நாம் திருப்பி செலுத்த வேண்டியது குறித்தும் எண்ண வேண்டும்.
நமது வாழ்வு ஒர் ஐஸ் கட்டியைபோன்றது என்று ஸ்வாமி கூறுகிறார். அது கரைந்து போகுமுன் பிறரது
சேவையில் ஈடுபடுத்தப் பட வேண்டும் என்று கூறுகிறார். ஸ்வாமி பல்வேறு தருணங்களில்,ராமக்ருஷ்ண
பரமஹம்ஸர், விவேகானந்தர், மஹாத்மா காந்தி ஆகியோரின் உன்னதத்தைப் பற்றியும் அவர்களிடமிரு
ந்து மக்கள் கற்க வேண்டியது பற்றியும் கூறியுள்ளார். நமது மாணவச்செல்வங்கள் இத்தகைய உயர்ந்த
பெரியோர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்கை பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும், அவர்கள் போதித்த நற்
குணங்களை தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
உயரிய மனிதரின் உன்னத தருணங்கள்
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3