முன்னுரை
ஸ்லோகம் 1 மற்றும் 2 நமக்கு ஞானத்தைப்பற்றியும், நம்பிக்கையைப்பற்றியும் கூறுகின்றன
ஞானம் என்பது என்ன? வாழ்க்கையின் சரியான புரிதலே ஞானம். வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகள், குறிக்கோள், மற்றும் நோக்கம் இவற்றையறிதலே. எனவே, அறிவின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்தல் மட்டுமன்றி, அந்த அறிவினை திட பக்தியுடன் எவ்வாறு அடைவது என்பதையும் கற்க வேண்டும். எனவே, சொந்த பயிற்சியே அவன் முதலில் செல்ல வேண்டிய பாதையாகும்.
ஸ்லோகம் 3 மற்றும் 5 நமக்கு கர்மாவைப் பற்றி அறிவுறுத்துகின்றன:
சொந்த பயிற்சியை மேற்கொள்ளும்போது, அவர், சேவை என்னும் இலக்கை அடைய வேண்டும். அறிவு மற்றும் ஆன்மீக பயிற்சியின் மேலான தேவையை உணர்ந்தபின் அவற்றை அடைய முயற்சி எடுக்க வேண்டும், ஸ்வாத்யாயத்தின் மூலம் அசஞ்சலமான மனதை அடைந்த ஒருவன் தன் வாழ்வியல் கர்மாக்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கர்மாக்களும், உள் நோக்கமும், பலனில் பற்று வைக்காமலும் செய்யப்பட வேண்டும். அனைத்து பணிகளும் இறைவனின் அர்ப்பணிப்பாகவே கருதப்பட வேண்டும். இதுவே நிஷ்காம கர்மா எனப்படுவது, நிஷ்காம கர்மா, ஒருவனை, மேல் நோக்கி உயர்த்திச்சென்று, ஞானத்தை அடைய வைக்கிறது. ஞானத்தின் மூலமாகவே, ஒருவர், வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்கான வழிகளை தெரிந்துக் கொள்கிறான்.இதன் பொருள் என்னவெனில், எந்தப்பணியும் சுய நல நோக்கமின்றி செய்யப்பட வேண்டும். இது தானாகவே, யோகமாக மாறிவிடுகிறது, இதனைச் செய்பவன் யோகி எனப்படுகிறான்.
ஸ்லோகம் 6 இறைவனின் உன்னத உறுதி மொழி
ஏகாக்ர சிந்தையுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பகவான அளிக்கும் உறுதிமொழி முழுமையாக தன்னிடம் சரணாகதி அடைந்த .பக்தரின் அனைத்து பொறுப்புகளையும் தானே வகிப்பதாகக் கூறுகிறார்.
ஸ்லோகம் 7 மற்றும் 13 சாதனாவைப்பற்றியது.
ஸ்வாத்யாயம் (சொந்தப் பயிற்சி) ஆன்மீக சாதனை. சாதனை என்பது என்ன? சாதனை என்பது சில ஆன்மீக ஒழுக்கங்களை அதாவது புலனடக்கம், எண்ணம் சொல் செயல் ஆகியவற்றை தூய்மை படுத்தல். நல்லறம் நடத்துதல் முதலியன. ஞானம் என்னும் சாதனையை அடைய, அறிவும் அவசியம், அதுவே, மனசாட்சி, மற்றும் மனிதனின்,தன்னைத்தானே மேம்படுத்தலுக்கான, உண்மையான முயற்சியாகும்