ஒவ்வொரு வருடமும், ஆடி மாதம், பௌர்ணமி அன்று, குரு வந்தனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இருப்பினும், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா குருவந்தன பாரம்பரியத்தை 1956ஆம் ஆண்டு எல்லா ஆர்வலர்களும் கொண்டாடும் வகையில் ஒரு முக்கியமான ஆன்மீகத் திருவிழாவாகத் தொடங்கி வைத்தார். இந்நாள் அ) குருவிற்கு நன்றி செலுத்த ஆ) அவர்தம் போதனைகளை நினைவு கூற மற்றும் இ) அவருடைய போதனைகளை, தினசரி வாழ்க்கையில் செயல்படுத்துவதற்கு உறுதி கொள்ளவும் அர்ப்பணிக்கப்படுகிறது.
வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படும் இந்நாள் மேன்மையான அவருக்கு, நமது நன்றியை அர்ப்பணிக்கும் நாளாகும். வியாசோ நாராயணோ ஹரி: வியாசரே ஸ்ரீமந் நாராயணனும் ஹரியும் ஆவார். ஸ்ரீமன் நாராயணரே மனித வடிவில் வியாசராக, வேதங்களை அடுக்கி ஒழுங்குபடுத்துவதற்கும் மனிதனுக்கு கடவுளை அடையும் வழியை போதிக்கவும் வந்தார்.
இந்தப் பகுதியில் வேத வியாசரின் கதையும், இந்த பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது என்ற தெய்வீக சொற்பொழிவும், குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கதைகளும், மனம் கவரும் செயல்பாட்டு தாள்களும், மற்றும் இணைய வழி விளையாட்டுகளும் உள்ளன.