ஹரிர் தாதா
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ஹரிர் தாதா ஹரிர் போக்தா
- ஹரிரன்னம் ப்ரஜாபதி:
- ஹரிர் விப்ர:
- ஶரீரஸ்து புங்தே போஜயதே ஹரி:
விளக்கவுரை
ஹரியே கொடுப்பவர். ஹரியே அனுபவிப்பவர். ஹரியே நாம் உண்ணும் உணவும் ஆவார். ஹரியே படைப்புத்தலைவர். ஹரியே உண்மையை உணர்ந்த அந்தணர். உடல்களிலோ எனில் ஹரியே சாப்பிடுகிறார். சாப்பிடச்செய்கிறார். (இங்கு “ஹரி” என்ற சொல், பொருள் கொள்ளும் போது (பதவுரையில்) ஏழு முறை பயின்று வருவதைக் காணலாம். ஹரியின் நாமத்தை ஏழு முறை சொல்லுதல் பயனுடையது என்பது சாஸ்திரங்களில் கூறப்படும் மரபு. பகவத் அர்ப்பணம் செய்வதால் உணவு அசுத்தம் நீங்கிப் புனிதமாகிறது.
காணொளி
பதவுரை
ஹரி: | விஷ்ணு பகவான். |
---|---|
ஹர் | எடுத்துக் கொள்ளுதல். |
ஹரி: | பக்தர்களுடைய கஷ்டங்களையும், மாயையையும் எடுத்துக் கொள்பவர். |
தாதா: | கொடுப்பவர். |
போக்தா | அனுபவிப்பவர். |
அன்னம் | உணவு. |
ப்ரஜா | அனைத்துப் படைப்புகள். |
பதி | கொடுத்துக் காக்கும் தலைவர். |
விப்ர ஶரீரஸ்து: | வி + ப்ர + ஶரீர + அஸ்து : அனைத்து படைப்புகளும், இறைவனுடைய சக்தி மிக்க உடலின் ஒரு பகுதியே. |
புங்க்தே | சாப்பிடுகிறார். |
போஜயதே | உணவு அளிப்பவர். |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 3
-
செயற்பாடு
-
மேலும் படிக்க