உடல்வளமும் சுகாதாரமும்
உடல்நலம் என்பது நோய் நொடி (அல்லது) காயங்கள் இன்றி இருக்கும் ஒரு நிலையாகும்
சில கட்டுப்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறிப்பாக சுத்தமாக இருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை (அல்லது) உடல் நலத்தைப் பேணிக் காப்பதும், நோய் வராமல் தடுப்பதுமே சுகாதாரம்.
தேகத்தைக் கவனமாகவும் மென்மையாகவும் பேணுதல் வேண்டும். அது ஒரு விலைமதிப்பற்ற அன்பளிப்பு. அது ஒரு சிக்கலான ஆனால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இயந்திரம். பாராட்டத்தக்கப் பணியைச் செய்து முடிப்பதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறமும் சுத்தமாக, நற்குணத்தின் வசீகரம் நிறைந்து இருக்கவேண்டும். – பகவான்பாபா