இறைவன் மனிதராய் அவதரித்து, இப்புவியில் நடமாடும்போது, தாவரங்களும், விலங்குகளும், மனிதர்களும் உலகளாவிய தெய்வீக அன்பில் மூழ்கி மகிழ்கிறார்கள். நல்லிணக்கமும், மகிழ்ச்சியும் எங்கும் பொங்குகின்றன. அற்புத, அதிசய உயர்மாற்றங்கள் எட்டுத்திக்கிலும் பரவுகின்றன. 1926ம் ஆண்டு நவம்பர் திங்கள் 23ம் தேதி நன்நாளில் இவ்வுலகில் நம்மிடையே அவதரித்து, 80 வருடங்களுக்கும் மேலாக பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா நம்முடன் வாழ்ந்து வந்த பொற்காலத்திலும் இதுதான் நடந்தது.
“இளம் சாயி’ என்பது நம் அன்புக்குரிய இறைவனின் பிறப்பு மற்றும் இனிய குழந்தைப் பருவ நாட்களை விவரிக்கும் கதைகளின் தொகுப்பாகும். இளம் சத்யா தனது மகத்தான பணிக்கான விதைகளை எவ்வாறு விதைத்தார் என்பதை அவை காட்டுகின்றன. அவர் தனது போதனைகளின்படியெல்லாம் வாழ்ந்து காட்டி, ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்று அறிவித்தார்.
பாலவிகாஸ் குருமார்கள், கொடுக்கப்பட்ட தொகுப்பிலிருந்து தமது மாணவர்களின் வயதிற்கு ஏற்ப சம்பவங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவையனைத்தும் பகவானின் வாழ்க்கைக் கதைகள் மட்டுமல்ல. அவை மனித வாழ்வின் விழுமியங்களை நமக்கு அக்கறையுடன் கற்பிப்பவை என்பதுதான் இக்கதைகளின் தனிச்சிறப்பு. குருமார்கள், கதைகளில் உள்ள விலை மதிக்க இயலா விழுமியங்களை முன்னிலைப்படுத்தி, முக்கியத்துவம் அளித்துக் கற்பிக்க வேண்டும்.