பாலவிகாஸ் வகுப்பில் குழுமச்செயல்கள், மூளைக்கு வேலை தரும் புதிர்களையும், விடுகதைகளையும் உள்ளடக்கியதே. அவை, குழந்தைகள் தங்கள் சமூகத்திறன்களை- அதாவது கூட்டுறவு, தலைமைப் பண்புகள், கூட்டு முயற்சி, பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை வளர்த்திட நிறைய வாய்ப்புகள் அளிக்கின்றன.
அவை, குழந்தைகளின் பகுத்தறியும் திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்துவதோடல்லாமல், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன், மற்றும் கூர்ந்து சிந்தித்தல் ஆகியவற்றையும் வளர்க்கிறது.
மதங்கள் மற்றும் மனித மேம்பாட்டுக் குணங்கள் ஆகியவற்றை விளையாட்டின் மூலமாக எளிதாகப் புரிந்துக்கொண்டு கற்றுக்கொள்வர்.
குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் கவனத்தை மேம்படுத்தக்கூடிய, மூளைக்கு வேலை தரும் சுவாரஸ்யமான புதிர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தப் பிரிவு.
மூளைக்கு வேலை கொடுக்கும் இவ்வித விளையாட்டுக்கள், கற்பிக்கவும், அவர்களுடைய திறனை மதிப்பீடு செய்வதற்கும் ஒரு சிறந்த யுக்தியாகும். இவ்வகைப் புதிர்களை விடுவிக்கும்போது, குழந்தைகள் தாங்கள் பாலவிகாஸ் வகுப்பில் கற்றதை நினைவு படுத்திக் கொள்வது அவசியமாகிறது. பாலவிகாஸ் குருமார்கள், தங்கள் வகுப்புகளை, சுவாரசியமாக்க, இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.