வந்தே தேவம்
கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- வந்தே தேவம் உமாபதிம் சுரகுரும் வந்தே ஜகத் காரணம்
- வந்தே பன்னக பூஷணம் ம்ருகதரம் வந்தே பஶூனாம் பதிம்
- வந்தே சூர்ய ஶஶாங்க வஹ்னி நயனம் வந்தே முகுந்த ப்ரியம்
- வந்தே பக்த ஜனாஶ்ரயம் ச வரதம் வந்தே ஶிவம் ஶங்கரம்
விளக்கவுரை
உமாபதியும் தெய்வ குருவுமாக இருப்பவரை வணங்குகிறேன். இப்பிரபஞ்சத்திற்குக் காரணமானவரை நான் தாழ்மையுடன் வணங்குகிறேன். நாகங்களை பூஷணமாக அணிந்துள்ளவரை வணங்குகிறேன். புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளவரை, உயிரினங்களுக்கெல்லாம் அதிபதியுமானவரை நான் தாழ்மையுடன் வணங்குகிறேன். சூரியன், சந்திரன், அக்னி இவற்றைக் கண்களாகக் கொண்டு இருப்பவரை வணங்குகிறேன். விஷ்ணுவிற்குப் பிரியமானவரை நான் தாழ்மையுடன் வணங்குகிறேன். பக்தர்கள் எல்லோருக்கும் அடைக்கலமளிப்பவரும், வரமளிப்பவருமான, சிவசங்கரரை நான் தாழ்மையுடன் வணங்குகிறேன்.
காணொளி
பதவுரை
தேவம் | கடவுளை |
---|---|
வந்தே | வணங்குகிறேன் |
உமாபதிம் | உமையவளின் கணவரை |
சுரகுரும் | தேவர்களுக்கு குருவாய் இருப்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
ஜகத்காரணம் | பிரபஞ்சத்திற்குக் காரணமாய் இருப்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
பன்னக பூஷணம் | நாகங்களை ஆபரணமாய் அணிந்திருப்பவரை |
ம்ருகதரம் | புலித் தோலை தரித்திருப்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
பஶூனாம் பதிம் | பசுக்களுக்குத் தலைவராய் இருப்பவரை |
சூர்ய ஶஶாங்க வஹ்னி நயனம் | சூரியன்,சந்திரன்,அக்னி ஆகியவற்றைக் கண்களாக உடையவரை |
வந்தே | வணங்குகிறேன் |
முகுந்த ப்ரியம் | விஷ்ணுவுக்குப் பிரியமானவரை |
வந்தே | வணங்குகிறேன் |
பக்த ஜனாஶ்ரயம் | பக்தர்களுக்கு அடைக்கலமாக இருப்பவரை |
வரதம் | வரங்களைக் கொடுப்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
ஶிவம் ஶங்கரம் | மங்களகரமானவரை, ஆனந்தத்தை அருள்பவரை |
வந்தே | வணங்குகிறேன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 2
-
செயற்பாடு
-
மேலும் படிக்க