ஜெய ஜெய ராமா
கேட்பொலி
வரிகள்
- ஜெய ஜெய ராமா ஜானகி ராமா
- ரகு குல பூஷண ராஜா ராமா (ஜெய)
- தாபஸ ரஞ்ஜன தாரக நாமா
- தானவ பஞ்ஜன கோதண்ட ராமா (ஜெய)
விளக்கவுரை
ஜனகரின் மகளான ஜானகியின் கணவரான ராமனே! ரகு வம்சத்தின் ஆபரணமான அரசன் ராமனே! தவமிருப்பவரை திருப்தி செய்பவனே! உலகப்பற்றிலிருந்து விடுவிக்கும் நாமத்தைக் கொண்டவனே! அசுரர்களை அழிக்க, கோதண்டம் என்ற வில்லை ஏந்தியவனே! உமக்கு வெற்றியானது உண்டாகட்டும் !
காணொளி
பதவுரை
ஜெய | வெற்றி |
---|---|
இராம | ராமனுக்கு (ராமன்-மகிழ்விப்பவன் ) |
ஜானகி இராம | ஜனகரின் மகள் ஜானகியின் ராமன் |
ரகு குல | ரகு வம்சத்தின் |
பூஷண | ஆபரணம் |
ராஜா ராமா | அரசன் ராமன் |
தாபச ரஞ்ஜன | தவமிருப்பவரை திருப்தி செய்பவன் |
தாரக நாமா | உலகப்பற்றிலிருந்து விடுவிக்கும் நாமத்தைக் கொண்டவன் |
தானவ | அசுரர்களை |
பஞ்ஜன | அழிப்பவன் |
கோதண்ட | கோதண்டம் என்ற வில்லை ஏந்தியவன் |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 0
The curriculum is empty