இந்து புராணங்களில் எப்பொழுதுமே பாம்புகளை மதிப்புடன் வணங்கி போற்றுவர். சிவபெருமான் தன் கழுத்தில் வாசுகி என்ற பாம்பை அணிகலனாக அணிந்துள்ளார். பாம்புகளுக்கு எல்லாம் அரசனான ஆதிசேஷன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்டுள்ளார். பாற்கடலைக் கடையும்போது வாசுகி என்ற பாம்பைக் கயிறாக உபயோகப்படுத்தினர்.
சிரவண மாதத்தின் முதல் நாள் நாக பஞ்சமி பண்டிகை இந்துக்களாலும், புத்த மதத்தினராளும், சமண மதத்தினராளும் கொண்டாடப்படுகிறது. பாம்புகளின் பாரம்பரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது இந்த பண்டிகை. பாம்புகள், முக்கியமாக நாக பாம்புகளுக்கு இந்நாளில் பால், இனிப்பு மற்றும் பூக்களை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர். கோவில்களில் கற்களின் மீதும் சுவர்களின் மீதும் பாம்புகளின் உருவங்கள் செதுக்கப்பட்டு இருப்பதை நாம் பொதுவாக காணலாம். இந்நாளில் இந்த சிலைகளை வழிபாடு செய்வர். சிலர் விரதமும் மேற்கொள்வர்.
இந்தப் பகுதியிலுள்ள இவ்விழாவின் தோற்றம், இந்து புராணங்களில் உள்ள கதைகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்; வகுப்பில் சத்தமாகப் படித்தும் காட்டலாம்.