ஹே மாதவா – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஹே மாதவா – மேலும் படிக்க
  1. மனமோஹனா
  2. மதுசூதனா
  3. முரளீதரா
  4. யது நந்தனா
  5. பவபயபஞ்சன
மனமோஹனா

மனமோஹனா: மோஹனா என்றால் வசிகரித்து கொள்ளை கொள்ளுபவன். தன் அளப்பரிய அழகாலும்,அன்பாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளுபவன் ஆதலால் கிருஷ்ணனுக்கு மனமோஹன என்று பெயர்

மதுசூதனா

மதுசூதனா: இது கிருஷ்ணனின் மற்றொரு காரணப்பெயர் ஏன் எனில் அவர் கொடிய அரக்கனான மதுவை அழித்தார். மது என்னும் சொல், வேதாந்தத்திலும் தத்துவங்களிலும் ஒரு செயலின் பலன் என்று அறியப்படுகிறது தன்னை தியானிப்பவர்களின் கர்ம பலனை அழிப்பவர் ஆதலால் மதுசூதனன் என்று அழைக்கப்படுகிறார். பகவான் மேலும் கூறுகிறார், மது என்றால், தேனினும் இனியது என்று பொருள்; மக்களுக்கு தேனினும் இனியது எது? அவர்கள் அகம்பாவம்தான். நமது அகம்பாவத்தை முற்றிலும் ஒழிப்பவராகிய இறைவன் தான் மதுசூதனன். ஆக, இந்த விதத்தில், நம் செயல்களுக்கெல்லாம் தலைவராகவும், மிக அழகானவராகவும், மிக அதிசயத்தக்கவராகவும் நம்மிடையேயுள்ள, நமக்கெல்லாம் முக்திபேறு அளிக்கவல்லவரான சத்யசாயியை இவ்விதம் புகழ்வோமாக.

முரளீதரா

முரளீதரா: முரளி என்றால் புல்லாங்குழல். தர என்றால் முரளியை கையில் பிடித்திருப் பவன். முரளி என்பது கிருஷ்ணன் இசைக்கும் புல்லாங்குழல் ஆகும். முரளி எனப்படும் இந்திய புல்லாங்குழல், மூங்கில் குச்சியில் செய்யப்பட்டுள்ளத. அதை, கிருஷ்ணன் உதடுகளில் வைத்து இசைக்கும்போது வெளிப்படும் தேவகானம், கோபாலர்கள், கோபிகைகள் பசுக்கள், மரங்கள், செடிகள் மற்றும் படைப்புகள் அனைத்தையும் வசியப்படுத்தும். அந்த புல்லாங்குழல் இறைவனின் உதடுகளில் அமர்ந்துகொண்டு, இப்படிப்பட்ட ஒரு ஆத்மார்த்தமான இசையை வெளிப்படுத்த வேண்டுமென்றால், அதற்கான தகுதியும், அது பெற்ற,ஆசிகளும் தான் என்னே? பாபா கூறுகிறார், புல்லாங்குழல் எளிமையாக, நேராக,மற்றும் காலியாக உள்ளது.

காலியாக என்றால் ஆணவம் இன்றி, நேராக என்றால், குறுக்குபுத்தி இன்றி, எளிமையாக என்றால் கொஞ்சம்கூட ஆடம்பரம் இன்றி. முரளிதரா என்று நாம் பாடும்போது,என்னை ஆணவம் இன்றி, எளிமையாக, இலகுவாக புல்லாங்குழல்போல் மாற்று என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த முயற்சியுமின்றி, நமது ஆணவத்தை வேரறுத்துக் களையக்கூடிய பகவான் நாம் கூப்பிட்டவுடன், நம்மை அவனது அழகான கருவியாக்க ஊக்குவித்து, நமது ஆணவத்தை அழித்து, அவனது இசையையும், அன்பையும் எடுத்துச்சென்று பரப்பும் கருவியாக்கிக்கொள்கிறார்

யது நந்தனா

யது நந்தனா: யது நந்தனா யது என்பது யாதவகுலத்தின் மூதாதையரான யதுவைக் குறிக்கும். நந்தனா என்றால் மகன். கிருஷ்ணன்,யாதவகுல அரசனான க்ஷத்ரியன் வாசுதேவனின் மகன். தீனாவனா- தீன என்றால் நலிந்த, துயருற்றோர். தீனாவனா என்றால் அவர்களைக்காப்பவன் கிருஷ்ணன் தன் பக்தர்கள் துயருற்றபோது அவர்களை காக்கிறான்

பவபயபஞ்சன

பவபயபஞ்சன: குறையில்லாத, புலப்படாத கிருஷ்ணர் நமது பிறப்பு இறப்பு சக்கரத்தை அழிக்கும் வல்லமை படைத்தவர். சம்சார பயத்தை போக்குபவர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: