சாய் பாதமே துணை

Print Friendly, PDF & Email

சாய் பாதமே துணை (பாடல்)

விருத்தம்
  • சிந்தை நிறைந்ததுன் மலர்ப்பதமே மலர்ப்பதமே
  • மலர் பாதமே மலர் பாதமே
  • பந்தம் விலக்கும் விந்தை பதமே.
  • சாயி உன் பாதமே பாதமே
  • சாயி உன் பாதமே உன் பாதமே
பாடல் வரிகள்

உந்தன் திருபதமே என்றும் துணை
அது தருகின்ற நிழலுக்கு ஏது இணை (3)

உன் திருவுரு தன்னை உள்ளத்திலே பதித்து உன் அன்பர் மனம் எல்லாம் உருகிடுதே (2)
கருணையால் நீ செய்த லீலைகளை நினைந்து கண்களில் நீராறாய்ப் பெருகிடுதே (உந்தன்)

  • அன்பே கடவுள் என்றாய்
  • அனைத்துயிர் சேவையே உண்மையில் வழிபாடென்றுரைத்தாய்

அன்பே கடவுள் என்றாய் அனைத்துயிர் சேவையே உண்மையில் வழிபாடென்றுரைத்தாய் (3)

நீ சொன்ன வழிமுறையும் காட்டிய நெறிமுறையும் உள்ளத்தில் ஜோதியாய் ஒளிர்ந்திடுதே
அதை நித்தமும் கடைப்பிடித்து நிர்மலமானதொரு உத்தம வாழ்வுக்கு வழி கண்டதே (உந்தன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: