தர்மம்
“இதயத்தில் நேர்மை (தர்மம்) இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
இல்லத்தில் இசைவு (நல்லிணக்கம்) இருக்கும்
இல்லத்தில் இசைவு இருந்தால்
நாட்டில் ஒழுங்கு நிலவும்
நாட்டில் ஒழுங்கு நிலவினால்
பூமியில் அமைதி தவழும்”
என்று பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா கூறுகிறார்.
எனவே மனிதனின் உள்முக இசைவு மற்றும் அமைதியை நோக்கிய பயணத்தில் நேர்மை என்னும் அடிப்படை கோட்பாடு மனிதனை வழி நடத்துகிறது. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு தர்மம் அல்லது நேர்மை ஒரு பலமான ஒழுக்கக் கட்டமைப்பாகும். “எளிமையான வாழ்க்கை உயர்வான சிந்தனை” என்பதே சுவாமி தான் பின்பற்றி நடந்து காட்டி அவருடைய மாணவர்களுக்கும் போதித்த கோட்பாடாகும்.
இந்தப் பகுதியில் இரண்டு கதைகளும் மகான்களின் எளிய வாழ்வியல்களையும் போதனைகளையும் விளக்குகின்றன.