ப்ரேமை & தர்மம்
நம்முடைய செயல்கள் அனைத்தும் அன்பினால் நிரப்பப்பட்டிருந்தால் நம் அனைத்தும் செயல்களும் தர்மத்தையே வெளிப்படுத்தும் என்று பகவான் கூறுகிறார் வாழ்வின் தொடக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் தாயின் அன்பின் மூலமே அன்பை அனுபவிக்கின்றது. குழந்தைகள் தங்கள் மூத்தவர்களை பின்பற்றத் தொடங்கும்போது உள்ளிருக்கும் அன்பு ஊற்று பரிமளிக்கின்றது.
நட்பும், உண்மையாயிருத்தலும் குழந்தைகள் தங்கள் சிறு வயதிலிருந்தே வளர்த்துக்கொள்ளும் துணை விழுமியங்களாகும் “நல்ல செயல்” (“Good Deed”) மற்றும் “நட்பு & தியாகம்” (“Friendship & Sacrifice”) ஆகிய கதைகள், எவ்வாறு ஒருவர் எண்ணம், செயல் ,உணர்வு மற்றும் புரிதல் ஆகியவற்றில் அன்பை கொண்டு நிரப்ப முடியும் என்பதை விளக்குகிறது. தாவரங்களையும், விலங்குகளையும் அன்பைக் கொண்டு உயர்ந்த உணர்வு நிலை நோக்கி நகர்த்த முடிகின்றபோது மனிதர்களின் மீதான தாக்கவிளைவை எவ்வாறு புறக்கணிக்க முடியும்? “ஒரு கனிவான வார்த்தை அல்லது செயல் மூன்று குளிர்மாதங்களை வெம்மையேற்றும்” (சூடேற்றும்) என்று ஒரு ஜப்பானிய பழமொழி கூறுகிறது.
[ஆதாரம் : Towards Human Excellence – Book2 –
Sri Sathya Sai EHV Trust, Mumbai – நூலிலிருந்து]



![அஷ்டோத்திரம்[1-27]](https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/ashtothram-tiles.png)
















