சேமிப்பது உயர்வாழ்வுக்கு ஒரு சாதனமாகும்
சிறு சிறுதுளிகள் ஒரு கடலையே உருவாக்கவல்லவை.
சிறு சிறு சேமிப்புகள் ஒரு செல்வத்தையே உருவாக்கவல்லவை
சிறு சிறு நடைகள் இறைவனிடமே நம்மை இட்டுச்செல்லவல்லவை
மிகச்சிறுவயதிலேயே நாம் ஒவ்வொருவரும் சேமிக்கும்பழக்கத்தை உருவாக்கி அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அது, நமது ஆளுமைத்தன்மை நமது நோக்குகள் இவற்றின்அமைப்பை மிகுந்த அளவில் பாதிக்கவல்லது; வாழ்க்கையின்திசையினையே திருப்பவல்லதுங்கூட. சேமிப்பினை மூன்றுநிலைகளில் பயிலவேண்டும். 1) உடல்நிலையில் 2) மனோநிலையில் 3) ஆன்மீக நிலையில்.
உடல்நிலையில், இரு கூறுகள் உண்டு. ஒன்றுபுறப்பொருட்களைப்பற்றியது. மற்றது தனது உடல் அல்லதுசொந்த நிலையைப்பற்றியது. புறஉலகைப் பொருத்த அளவில்,உணவுப்பொருட்கள், பணம், தண்ணீர் போன்ற இயற்கைவளங்கள், நவீன விஞ்ஞானம் அளித்துள்ள மின்சக்தி போன்றஇவற்றைச்சேமிப்பது அவசியம். உடலளவில், உடல் சக்தியைபயனற்ற வழிகளில் செலவழிக்காமல், காப்பாற்ற வேண்டும்.அதனைப்பயனுள்ள, நேரான அறவழிகளில் பயன்படுத்தவேண்டும். சரியான உடற்பயிற்சியின்மை, தவறான உண்ணும்பழக்கங்கள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை இவையெல்லாம்உடற்சக்தியை வீணாக்குகின்றன.
மனத்தளவில், நமதுமனோசக்தியைப்போற்றிபாதுகாப்பதும், நமது விவேகம், சங்கற்ப பலம் ஏகாக்கிர (ஒருமுனைப்புச்) சக்திபோன்ற அறிவுப்புலன்களை வளப்படுத்தி, வலுப்படுத்துவதும் அவசியமாகின்றன.பகவத்கீதையில்கூறியவாறு, ஒருமனிதனின் மனமே அவனுக்கு எதிரியாகும்,அவனுக்குநண்பனுமாகும்.அவனைக்கீழேதள்ளிப்பாழ்படுத்துவதும் அதுவே. அவனைத் தெய்வநிலைக்குஉயர்த்துவதும் அதுவே. வாழ்க்கைத் திசையினைச் சீராக்கி, வழிநடத்திச்செல்லும் கடிவாளங்கள் மனத்திற்குள் தான் உள்ளன. பயம், பேராசை, பொறாமை, சினம், கவலை, அகந்தை ஆகியவை மனதின் அமைதியையும், உறுதியையும் குலைக்கின்றன. பணிவு, பொறுமை, நட்புறவு, கருணை, அன்பு இவையே மனோசக்தியினைப் போற்றிப் பாதுகாத்து நமக்கு கலங்காத மனோபாவத்தை அளிக்க உதவுகின்றன.
ஆன்மீகநிலையை நோக்கினால்,அங்குஒவ்வொருவரிடமும் இனம்தெரியாத ஏக்கம் உண்டு. அதனைஅழுத்தவோ, வளரச்செய்யவோ கூடாது. அதனைக்கடமை, பக்தி, ஒழுக்கம் இவை மூலம் செழிப்பாக வளர்த்து, அதன்மூலம் ஜீவன்ஒளிபெறவும், ஞானத்தினைப்பெறவும் செய்ய வேண்டும். ஏனெனில், அத்தகைய ஏக்கமானது உண்மையான ஏக்கமன்று.அதுஇறைநாட்டமாகும்.
மனிதப்பிறவியென்பது, கடவுள் நமக்களித்துள்ள மிகவும்உயர்ந்த மதிப்புள்ள வரப்பிரசாதமாகும். இவ்வுடல் தான், ஜீவனைஆன்மீகப்பரிபூரணத்துக்கும், சாக்ஷாத்காரத்துக்கும்இட்டுச்செல்வதாகும். ஆகவே, கொடுக்கப்பட்டஇவ்வாழ்க்கையைவீணடிக்கலாகாது. அதை மிக உயர்ந்தமுறையில் எல்லா அம்சங்களிலும், பயன்படுத்த வேண்டும்.
இந்த மூன்று நிலைகளிலும் சேமிப்புப்பழக்கத்தைப்பண்படுத்தி வளர்க்க இயலும் என்பதைக் காண்போம். முதலில்உடல்நிலையிலும், புறப்பொருள் நிலையிலும் ஆராய்வோம்.
உடல்நிலையும், புறப்பொருள்நிலையும்
உணவின் அவசியத்தைநாம் எல்லோரும் உணர்வோம்.ஒருநாள் ஒருபொழுது கூட நமது உணவை நம்மால் இழக்கஇயலாது (ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்) நமக்கு வாழ்வளிப்பது அதுவே. அதுநமது உடல் மட்டுமல்ல, எண்ணும் திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது. நம்மில் சிலர் பசிஎன்பது என்ன என்பதையும் அதன் கொடுமை எத்தகையதுஎன்பதையும்அறியோம். கடவுள் நம்மில்பலரிடம் மிகவும் பரிவாகஉள்ளார். நாம் கூர்ந்து கவனித்தால், கணக்கற்ற, மக்கள்பட்டினியால் வாடுவதையும், குழந்தைகளுக்குக் கூட உணவளிக்கமுடியாமல், துன்பப்படுவதையும் காணலாம். நமது வீடுகளில்அளவுக்கும் அதிகமாகவே உணவு இருக்கின்றது. சாப்பிட்டுமுடிந்தபின்னரும், நமதுதட்டுகளில் உணவுப்பதார்த்தங்கள்மிஞ்சுகின்றன. அவற்றைக் குப்பைத்தொட்டியில் கொட்டுகிறோம்.உணவு கடவுளுக்குச் சமம். என்பதை நாம் உணர்வதில்லை.அன்னம் பிரம்மா – உணவே இறைவன் என்று மறைநூல்கள்கூறுகின்றன. அளவுக்கு மிஞ்சிய உணவு தட்டுகளில் இடப்படுகிறது.தாய்மார்களும் குழந்தைகளுக்கு மிகவும் செல்லமளித்து, அவர்கள்உண்ணும் அளவுக்கு மேல், அவர்கள் தட்டில் பரிமாறுகிறார்கள்,உணவின் மதிப்பை நாம் இன்னும் உணரவில்லை. தெருவில்பட்டினிகிடக்கும்ஓரிரு சிறுவர்களுக்குப் போதுமான உணவுஇவ்வாறு வீணாகலாம்.
தவிர குழந்தைகள் தமக்கே உரிய பிடிவாதங்களைவளர்த்துக்கொண்டுள்ளனர். வீட்டில் 3,4 குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டஉணவுப்பழக்கங்கள்இருக்கின்றன. தாயார், உடல்நோக ஒவ்வொரு குழந்தைக்கும்தகுந்தவாறு வகை வகையாக உணவு தயாரித்துப்பரிமாறுகிறார். இவற்றிலும் பெரும்பகுதி வீணாகிறது. உணவைச் சேமித்துபிளாட்பாரங்களிலும் சேரிகளிலும் உள்ள மக்களுக்கு நாம்வழங்கினால் அது சமூக நெறிக்கும், அறநெறிக்கும் ஆன்மீகநெறிக்கும் உகந்ததாகும். உணவை வீணாக்குதல் பெரும்பாவம்என்றும், கடவுளுக்கு எதிராகச் செய்யும் துரோகம் என்றும், உணவுகடவுளை நினைவுபடுத்தும் சின்னம் என்றும் உணரவேண்டும்.உணவு உற்பத்திக்குறைவால் பற்றாக்குறை ஏற்படவில்லை. வீண்செய்வதாலும், சேமிப்புக்கிடங்குகள் சரியாக இல்லாததாலும்,இவைபோன்ற காரணங்களாலும்தான் உணவுப்பற்றாக்குறை,ஏற்படுகிறது. ஒவ்வொருவராலும் உணவை வீணாக்காமல் இருக்கமுடியும். இது நாம் சமூகத்துக்குத் திருப்பிச்செய்ய வேண்டியமுதற்கடனும், நமது சொந்தக்கடமையுமாகும்.
துணிகளைப் பொருத்தவரையிலுங்கூட நாம் நாகரீகப்பாணிகளுக்கு அதிகம் இடமளிக்கலாகாது. ஆடம்பரமில்லாததுணிகளும், அடக்கமான உடையுமே ஒருவருடைய ஆளுமைக்குஉண்மையான வசீகரத்தை அளிக்கின்றன. நமக்குத் தேவையானதுணிகளும், ஆடைகளும். வாங்கலாம். ஆனால் கணக்கற்றஆடைகள் பீரோக்களில் அணிய வாய்ப்பில்லாது தூங்கலாகாது.
இதேபோல் உணவைப் போன்றே, தண்ணீர் மின்சக்திஇவற்றை வீணாக்கும் பழக்கம் நம்மிடம்மலிந்துள்ளது. நம்மில்சிலர் துணிகளைத் துவைத்தபிறகு. குழாய்களை மூடுவதற்கு கவனம்கொள்வதில்லை. ஒரு குழாய் திறந்திருந்து தண்ணீர் வெளியேசெல்வதை நாம் பார்த்தாலும், நாம் அதை மூடுவதற்கு முயற்சிசெய்வதில்லை. அது நமது பொறுப்பன்று என்று நினைக்கிறோம்.மின்விசிறிகள் சுற்றிக்கொண்டே இருக்கின்றன; அறையில் யாரும்இருப்பதில்லை. அதேசமயத்தில் குடிசைகளிலும் சேரிகளிலும்வாழும் குடிமக்கள் நீராடத் தண்ணீரும், படிப்பதற்கு மின் சக்தியும்இல்லாமல் திண்டாடுகிறார்கள். நாம் சேமிப்பதனைத்தும் முடிவில், நாட்டின் நலனுக்கே சென்றடைகின்றது.நம்முடைய எளிய சிறியவழியில் தண்ணீர், மின்னாற்றல் இவற்றை நம்மால் சேமிக்கமுடியும்.
மனோநிலையிலும், ஆன்மீகநிலையிலும்
மன ஆன்மீக நிலைகளில் அதிகாலையிலும் மாலைநேரத்திலும் சிறிதுநேரம் தியானம் செய்வது ஒருவருடையமனதையும், உடலையும் சீர்படுத்தும் (Relax)அமைதியாகஉட்கார்ந்துக் கொண்டு, தன் சமயத்துக்கு ஏற்ற கடவுளை மட்டும்நினைத்துக்கொண்டு, மனத்திலுள்ள மற்ற எல்லாஎண்ணங்களையும்அமைதிப்படுத்த வேண்டும். மனம் ஜோதியில் ஒருமுகப்படுத்தப்படவேண்டும், இந்தப்பழக்கமானது மனத்திற்குப்புத்துணர்வுஅளிக்கும். நினைவாற்றல் கூர்மையாகின்றது. ஒருமுகப்படுத்தும்சக்தி பலமடங்குகளாக அதிகரிக்கின்றது. நாம் எந்த வேலையினைஎடுத்துக் கொண்டாலும், வேலைத்திறமை அதிகரிக்கின்றது.
இந்தப்பயிற்சியுடன் இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதும்(அதிகாலையில் கண்விழித்ததும் உணவு உண்ணுவதற்கு முன்னும்,படுக்கைக்குச் செல்லுவதற்குமுன்னும்) இறைவனைப்பிரார்த்தனை செய்வதும் மிகவும் பயனுள்ளதாகும். கீழ்த்தரமானநூல்களைப்படிப்பதாலும் மனம்கூசும் திரைப்படங்களைப்பார்ப்பதாலும் இவை போன்ற செயல்களாலும் மனோ சக்திவீணாகிறது. நாம் எதைப்படிக்கிறோம். எதைப்பார்க்கிறோம். எதைநினைக்கிறோம் என்பதனைக் கூர்ந்து தெளிய வேண்டும். பத்ரம்பச்யந்து, பத்ரம் ச்ருன்வந்து, பத்ரம் குர்வந்து… (நாம் நல்லதையேபார்ப்போமாக, நாம் நல்லதையே கேட்போமாக, நாம் நல்லதையேசெய்வோமாக). உயர்ந்த எண்ணங்கள் எல்லா இடங்களிலிருந்தும்நமக்கு வரட்டும்என்கின்றன. வேதப்பாடல்கள்.மனதைச்சிதறடிக்கும், கீழ்மைப்படுத்தும் எல்லா விதச்சக்திகளும்எங்கும் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில் இந்தவேதப்பாடல்களின்பொருளைப்புரிந்து கொண்டு அதன்படி செயற்படுதல் மிகவும்அவசியமாகிறது.
பணத்தைச் சேமிப்பதுபற்றி;
நடைமுறை இலட்சியங்கள் அனைத்திற்கும் பொருட்செல்வம் உலகில் மிகவும் அவசியமானதொன்று. தனமூலம் இதம் ஜகத் (உலகவாழ்வுக்கு பொருட்செல்வமே வேராகும்) என்றுகூறப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்குஉறுதிப்பொருள்களில் பொருளானது (அர்த்தம்) (அதாவதுபொருளாதார வசதி) முக்கியமான இடம் வகிக்கின்றது. ஆனால்இந்நான்கையும் உற்று நோக்குகையில், பொருளைச் சேர்ப்பதும்,தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதும் அறத்தின்(தருமத்தின்) வழியிலேதான் இருக்க வேண்டும் என்பதும்,இவையனைத்தும் வீட்டினை (மோட்சத்தை) அடையும் இலட்சியநோக்கினைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகும்.
இல்லறநிலை அல்லது இல்லறவாழ்க்கைதான்இந்தியவாழ்க்கைமுறையின்சமூகஅமைப்பிலும், சமூகவாழ்க்கையிலும், மையமும்அச்சும்ஆகும். இல்லறத்தான் ஆற்ற வேண்டியபொருளாதாரக் கடமைகள் பல உண்டு. முதலில் அவன், தனதுமக்களுக்கும் குடும்பத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டியகடமைகள் உண்டு. அவர்களது பொருளாதாரப் பாதுகாப்பிற்கும்பொறுப்பேற்க வேண்டும். அவைதவிர, சமூகத்துக்கு அவன் ஆற்றவேண்டிய நன்றிக்கடன்கள் பலவுண்டு.பகவத்கீதையில்,எவனொருவன் தனதுஉணவையாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் தானே தனியாக உண்கின்றானோ, அவன்திருடனாவான் என்று கீதைகூறுகிறது. தேவையுள்ளவர்களுக்கும்,சக மக்களுக்கும் உதவி செய்ய வேண்டுவது ஒவ்வொருவரின்கடமையுமாகும் என்பதையே இது தெரிவிக்கிறது. அதேசமயம்,தனக்கே அடிப்படைத்தேவைகள் இருக்கும்போது, தனக்கேஉணவில்லாதபோது, அவன்எவ்வாறு மற்றவர்களுக்குஉணவளிக்க முடியும்? விவேகானந்தர், காலிவயிறு மதவிரோதிஎன்று கூறுகிறார். நமது அடிப்படைத் தேவைகளை நாம் முதலில்நிறைவு செய்து கொள்ள வேண்டும். உபநிடதங்கள், “வேலைசெய், சம்பாதி பகிர்ந்து கொள், வளமுற்றிரு, நூறாண்டு வாழ்” என்றுவாழ்த்துகிறது. ஆகவே பொருளாதார நலம் – பொருள்-(அர்த்தம்)வாழ்வின் மதிப்பீடுகளில் அதற்குரிய முக்கியத்துவத்தைப்பெற்றுள்ளது. ஆனால் ஒர் நிபந்தனையுண்டு. நாம் பொருளீட்டுவதுஅறத்தின் (தருமத்தின்) அடிப்படையில் அமைய வேண்டும்.அதற்குச்சமூக இலட்சியமும் உண்டு. மக்களுக்குச் சேவைபுரிவதற்காகப் பொருள் ஈட்டல் வேண்டும். எவ்வாறு நூறாண்டுகள்நாம்மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்? கடுமையான உழைப்பு,பொருளீட்டல், பாதுகாத்தல், சேமித்தல், துன்பம் நேர்கையில்பயன்பெறஒதுக்கிவைத்தல் இவையெல்லாம்சாத்தியக் கூறுகளேயாகும். முன்யோசனை, சிக்கனவாழ்வு, சேமிப்பு, இவையேஇதன்முக்கியகூறுபாடுகள்.
இயற்கைகூட நமக்குச் சேமிப்பின் அவசியத்தைவலியுறுத்துகிறது. எறும்புகூடநமக்குமுன்னுதாரணமாகவிளங்குகிறது. எவ்வளவு கவனத்துடன் மழைக்காலத்திற்கெனஉணவைச்சேமிக்கிறது? அறிவிற்சிறந்த சாலமோன் என்ற அரசர்கூறுவார்: “எறும்பினிடம் சென்று அதன் வழிகளைக் கற்றுக்கொள்”. பருவகால விவசாய அறுவடையினைக்கொண்டு நாம் எவ்வாறுசமாளிக்கிறோம்? ஆண்டு முழுவதும் நமது வாழ்வுக்குதேவையான தானியங்களை நாம் சேகரித்து வைப்பதில்லையா? வயது முதிர்ந்தகாலத்தில் கூட விவசாயி மரங்கள் நடுவதை நாம்பார்ப்பதில்லையா? மரங்கள் இப்போது நடுவது, பின்னால்மற்றவருக்குப் பயன்படுவதற்காக என்ற அவனது நம்பிக்கைபுலப்படவில்லையா?
சூழ்நிலை கட்டாயப்படுத்துவதாலும், சேமிப்புஅவசியமாகிறது. நோய்வாய்ப்படுதல், வேலை இழத்தல்,விபத்துகள் போன்றவை சம்பாதிக்கும் திறமையைக் குறைக்கலாம்.தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்படலாம். முதுமை காரணமாகசம்பாதிக்க இயலாமல் ஆகலாம்.காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்ள வேண்டும். திறமையுள்ளபோதே சம்பாதித்து சேமிக்க வேண்டும். பாபா கூறுவது “முன்னதாகத் தொடங்கு, மெதுவாகச்செல், பத்திரமாக இடத்தைச் சேர்” என்பது ஆன்மீகவாழ்வுக்கும், உலக வாழ்வுக்கும் பொருத்தமானது.
சிறு துளிகளே, கடலை உருவாக்குகின்றன. சேமிப்பும்அவ்வாறே, துவக்கத்தில் எவ்வளவு சிறிதாக இருந்தாலும்காலப்போக்கில் அவை மிகுந்த அளவினைக்கொண்டுவரும்சேமிப்பு, தனி மனிதனுக்கான சொத்து (Asset)மட்டுமல்லஅவைநாட்டினுக்கும் பயன்படுகின்றன. வங்கிகளில் அவற்றைப்போடும்போது, அவற்றின் உரிமையாளருக்குத் தகுந்தவட்டிகிடைப்பதுடன்கூட,உபரிச்செல்வத்தைநாட்டுக்குஉருவாக்கித்தந்துஅவற்றைக் கொண்டு தொழில் வளர்ச்சிக்கும், வியாபாரவளர்ச்சிக்கும் முதலீடு செய்வதற்குப் பயன்படுகின்றன. வங்கிகள்,ஆயுட்காப்பீட்டுக் கழகங்கள் மற்றும் பலநிதி நிறுவனங்கள் இவையெல்லாம், முதலீடு செய்பவர்களைஈர்க்கும்வகையில்பற்பல சேமிப்புத்திட்டங்களைஉருவாக்கியுள்ளனர். இவற்றின் மூலம் சிறிய அளவிலாயினும்பெரிய அளவிலாயினும் கிடைக்கக்கூடிய பொருளனைத்தையும்ஒன்றுசேர்த்து நாட்டுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களில்செலவிட வழிவகை பிறக்கிறது. இதுபலருக்கு வேலைவாய்ப்புவசதிகளைத் தருகிறது. மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைஅளிக்கிறது. இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்துக்குச் சேமிப்புஉதவுகிறது. மக்களுக்குப் பெருவாரியான அளவில் இவ்வாறுஉதவுகிறது.
ஆனால் பொருட்செல்வம் மட்டும் போதாது என்பதைநினைவில் கொள்ள வேண்டும். ‘மனிதன் ரொட்டியினால் மட்டும்வாழ்வதில்லை. உலகத்தின் பொருட்செல்வம் போன்று,ஆன்மீகச்செல்வம் மிக முக்கியமானது. அதை நாம் மறந்துசேமிக்கும் பழக்கமானதுபொருட்செல்வத்தைப் போலவே அறநெறித்துறையிலும்,ஆன்மீகத்துறையிலும் முக்கியமானதாகிறது.செல்வத்தைச் சேகரிக்காவிடில், வாழ்க்கை முடிவில் வீணானதாகிவிடும். “தனது சீவநலத்தினை இழந்த ஒருவன் உலகமுழுவதையும்வெற்றி கொள்வதனால் என்ன பயன் ” என்று கூறுவதுண்டல்லவா?
ஸ்ரீ சத்தியசாயிபாபா பல்லாண்டுகளுக்கு முன் பிரசாந்திநிலையத்தில்இந்தியநாட்டுவங்கியின் கிளையினைத்திறக்கும்போது, அவர் இவ்வுலக வங்கியினையும், அவ்வுலக வங்கியினையும் குறிப்பிட்டார். ” வங்கியில் சேமிக்கும்பணம்தேவையானகாலத்தில்உதவுகிறதுஎன்பதுஉண்மையேயாகும். அது ஒருவகையான சொத்து. ஆயினும்,வாழ்க்கைப்போன்றுஇவையெல்லாம்மறையக்கூடியஉடைமைகளாகும். நாம், கடவுளின்சேவைக்காகஅர்ப்பணிக்கப்பட்ட நன்னெறி வாழ்க்கையில் உருவாகின்ற ஆன்மீகஉடைமைகளையே தேட வேண்டும்.ஆத்திகனுடைய(ஆத்மசாக்ஷாத்காரத்தில் நம்பிக்கையுள்ளவன்) இந்த உடைமைகள்உயிரூட்டுபவையும், அழியாதவையுமாகும். பொருளுடைமைகள்,தேய்ந்துபோவன, உளுத்துப்போவன, கைமாறக்கூடியவை.ஆனால் ஆன்மீக உடைமைகளுக்கு இத்தகைய சேதமில்லை. ஆகவே ஒவ்வொருவரும் தெய்வீக அருளை முதலீடு செய்து, அதன்சேமிப்பை அதிகரித்தல் வேண்டும். அதுவே மனிதனைஅழிவிலிருந்து காப்பாற்றி, அமரத்துவத்தையும் நிரந்தரப்பாதுகாப்பினையும் அளிக்க வல்லது”. ஆகவே பொருள்செல்வம்சேமிப்பதிலும், ஆன்மீகச் செல்வம் சேமிப்பதிலும் நமதுமுயற்சியைத் தகுந்த அளவில் பங்கிட வேண்டும். ஆயினும்பணத்தைச் சேமிப்பதன் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை.உலக வாழ்க்கையில் பணம் மிகவும் தேவைப்படுகிறது; அதன்மூலந்தான் ஒருவன் தனக்கும், தன் குடும்பத்துக்கும், சமூகத்துக்கும்ஆற்ற வேண்டிய கடமைகளைப் பொறுப்புடன் ஆற்றமுடியும்.
சிறுவர்களும் இளைஞர்களும் முக்கியமாகக் கவனிக்கவேண்டியகுறிப்புகள்
இளைஞர்களையும், மாணவர்களையும் பொருத்தவரையில்அவர்கள் சேமிக்க இயலாமல் இருக்கலாம்.ஆனால்தமதுசெலவுகளைஅவர்கள்கட்டுப்படுத்தவேண்டும். பணத்தேவைகளைப் பெற்றோரிடமிருந்து கண்டித்துப்பெறுதலைத்தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் எவ்வளவு துன்பங்களைஅனுபவித்துக்கொண்டு தம் மக்களின் செலவினங்களைச்சமாளிக்கிறார்கள் என்பதையும், தற்காலத்திலுள்ள கடினமானசூழ்நிலையில் அவர்களை வளர்ப்பது எத்தனை கடினமானதுஎன்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.உணவைவீணடிப்பதைப்போன்று, பணத்தை வீண்செலவு செய்வதும் ஒருசமூகக்குற்றமாகும். சிக்கனமான பழக்கங்கள் முக்கியமானவை;சேமிப்பைவிட அவை மிகவும் முக்கியமானவை. சிக்கனமானபழக்கங்களில்லாது, சேமிப்பு என்பது பகற்கனவாகலாம்.
முடிவாக, நாம் நினைவில் கொள்ள வேண்டிய கருத்து:
“வீணாக்காதீர்கள், சேமியுங்கள்”வாழ்க்கையின்மேம்பாடுகளைக் கடைபிடியுங்கள். அவற்றில் சில கீழ்வருமாறு:
- உணவைச் சேமித்து, ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்
- வீண் செலவுகளைக்குறைத்துச் சேமித்த பணத்தைக் கொண்டுதேவையானவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும்.
- எல்லாரிடமும் அன்பைத்தெரிவிக்கும் வகையில் இதமாகப்பேசவேண்டும்.
- பயனுள்ள வேலையிலும் மற்றவருக்குச் சேவை செய்வதிலும்நேரத்தைச் செலவிட வேண்டும்.
- கடவுளின் நாமத்தை அடிக்கடி தினமும் உச்சரிக்க வேண்டும்.தினமும் தியானம் செய்ய வேண்டும். இவையே உடல், மனம்,ஆன்மாவிற்குப்புத்துணர்ச்சியளிக்கும்.
தமது சொந்த ஆசைகளுக்கு உச்சவரம்பு வைத்துக்கொள்ளுதலே உண்மையான சேமிக்கும் பழக்கமாகும்.
காலம் வீணாக்கப்பட்டால் வாழ்க்கை வீணாகிறது. -ஸ்ரீ சத்யசாயிபாபா