அனுபவம் மூலம் கற்றல்
குருமார்களின் குறிப்பிற்கு:
- இப்பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும், Institute of SathyaSai Education,Mumbai,நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘Towards Human Excellence Sri SathyaSai Education for Schools’ Book 7,“Experiential Learning” என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.
- இந்த புத்தகத்தில் உள்ள அனைத்து அத்யாயங்களையும் படித்து புரிந்து கொண்டு, குருமார்கள் தங்கள் வகுப்புகளில் செயல்படுத்த வேண்டும்.
- பாலவிகாஸ் குரூப் 1 பாடத்திட்டத்தின்படி நான்காவது நிலை வரை மட்டுமே,அதாவது “வார்த்தைகளை வகைப்படுத்துதல் & ஒருங்கிணைப்புப் படம்” வரை செயல்படுத்தினால் போதுமானது.
- ஆனாலும், குருமார்கள் இந்த பாடத்திட்டத்தினை நன்கு புரிந்து செயல் படுத்த ஏதுவாக ஏழு நிலைகளும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
- இப்பாடத்திட்டத்தின் விளக்கப்பகுதிகள்,குருமார்கள் புரிதலுக்கு மட்டுமே ஆகும்.குழந்தைகளுக்கு நடத்தத் தேவையில்லை. குழுச்செயல்பாட்டினை மட்டும் வகுப்பில் நடத்தினால் போதுமானது.
- “மாதிரி குழுச்செயல்பாடு” பாடத்திட்டத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.