சத்தியம் & தர்மம்
இரண்டு மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் கதைகள் தனித்தனியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன, மனித வாழ்க்கையின் கோட்பாடு சத்தியம் என்பதை உணருங்கள். சத்தியத்திலிருந்து தர்மம் வெளிப்படுகிறது. தர்மத்தின் முதல் குழந்தை அமைதி. இரண்டாவ்து குழந்தை அன்பு(பிரேமை). அனைத்தும் சத்தியத்திலிருந்தே தோன்றுகின்றன.
சத்தியத்திலிருந்து அனைத்து படைப்புகளும் வெளிப்படுகின்றன. அனைத்தும் சத்தியத்திலேயே கரைகின்றன. சத்தியம் வியாபித்து இல்லாத இடமே இல்லை, களங்கமற்ற ஆதிமூலமான சத்தியம்.(தெலுங்குகவிதை)
தோற்றுவிப்பது, காத்துப்பேணுவது, அழிப்பது அனைத்தும் சத்தியமே. சத்தியத்தை அடிப்படையாக் கொண்டு தர்மத்தை கடைபிடியுங்கள். அப்போதுதான் அன்பும் அமைதியும் உள்ளிருந்து வெளிப்படும்.
26,செப்டம்பர் 2000
சத்தியத்தை நடைமுறை படுத்தும்போது அது தர்மமாகின்றது. சத்தியம் வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. தர்மமோ செயலில் வெளிப்படுகின்றது. எனவே தர்மம் சத்தியத்தைப் பொறுத்தே இருக்கின்றது. சத்தியமின்றி தர்மம் இல்லை. சத்தியம் என்ற அடித்தளமின்றி தர்மம் என்னும் மாளிகை கட்டமுடியாது.
“Nothing is Useless”– (“பயனற்றது என்று எதுவும் இல்லை”) என்னும் கதை நேர்மை(சத்தியம்), நன்னடத்தையை(தர்மம்) விசாரணைக்கு ஆட்படுத்தி அதன் குணங்களை வெளிப்படுத்துகிறது.
[ஆதாரம்- ஸ்ரீசத்யசாய் பாலவிகாஸ் அமைப்பிற்கான வழிகாட்டுதல் மற்றும் கையேடு]