சமநிலை
விளையாட்டின் நோக்கம்:
நாம் எதையும் எதிர்கொள்ளும் மனச் சமநிலை மற்றும் பிற சமநிலைகளை வலியுறுத்துவது.
கற்பிக்கப்படும் பண்புகள்:
கவனம்
அமைதி
உறுதி
தேவையான பொருட்கள்:
ஒரே எடை மற்றும் அளவு உள்ள இரண்டு (2) புத்தகங்கள்.
விளையாடும் முறை:
- குருவானவர் குழுவை இரண்டாக பிரித்து கொண்டு ஒவ்வொரு குழுவிடமும் உள்ள ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் கொடுப்பார்.
- குரு ஒரு குழுவில் உள்ள (Team A) ஒரு குழந்தையின் தலையில் இந்த ஒரு புத்தகத்தை வைப்பார். அந்த புத்தகத்தை அந்தக்குழந்தை தொடாமல், நடந்து எடுத்துச் சென்று இறுதி புள்ளியை தொட வேண்டும்.
- இதேபோல அடுத்த குழுவில் (Team B) உள்ள குழந்தைக்கும் செய்யப்படும்.
- மேற்குறிப்பிட்ட இரு குழந்தைகளும் புத்தகம் கீழே விழாமல், இறுதி புள்ளியை தொட்டால் அவர்களுக்கு தகுந்த மதிப்பெண் வழங்கப்படும்.
- இதேபோல குழுவில் உள்ள மற்ற குழந்தைகளும் செய்ய வேண்டும்.
- அதிக மதிப்பெண் பெறும் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
குருவுக்கான ஆலோசனை:
குருவானவர் இந்த செயல்பாட்டை கீழ்க்கண்டவற்றுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்:
- நாரதர் தன் தலையில் எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகை வலம் வந்த நிகழ்வு
- பேரறிஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் கவனமுடனும், சமநிலையுடன், உறுதியாகவும் இருந்து வெற்றி பெற்றதை உணர்த்தும் நிகழ்வுகள்