கற்பனை வளத்தை மேம்படுத்துதல்
விளையாட்டின் நோக்கம்:
குழந்தைகளின் கற்பனை வளத்தை அல்லது திறனை மேம்படுத்துதல்
கற்பிக்கப்படும் பண்புகள்:
கற்பனைத் திறம்
கேட்டறிதல்
பாராட்டுதல்
தேவையான பொருட்கள்:
- கிண்ணம்
- எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகள்
எடுத்துக்காட்டு: “நான் பூவாக இருந்தால்….”
(பிற எ.கா: இராமாயணம், மாஹாபாரதம், முனிவர்கள், பேரறிஞர்கள், மரம், பூஜை பொருட்கள், பஞ்சபூதங்கள், விலங்குகள், பறவைகள்) - இசை /பஜனை பாடல்கள்
விளையாடும் முறை:
- குருவானவர் குழந்தைகளை வட்டமாக அமர்ந்து கொள்ள சொல்லுவார்.
- அவர் விளையாட்டின் விதி முறைகளைப் பற்றி சொல்லுவார்.
- எழுதப்பட்ட எல்லா சீட்டுகளும் மடிக்கப்பட்டு கிண்ணத்தில் போடப்படும்.
- பிறகு பின்புலத்தில் பாடல் ஒலிக்க செய்யப்படும்.
- சீட்டுகள் உள்ள கிண்ணம், இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போது ஒவ்வொரு குழந்தையிடமும் கொடுக்கப்படும்.
- பின்புற இசை நிறுத்தப்பட்டவுடன் கிண்ணம் யாரிடம் இருக்கிறதோ, அந்த குழந்தை அதிலுள்ள ஒரு சீட்டை எடுத்து அதில் எழுதப்பட்டுள்ளதை வாசித்து அந்தப் பொருளை தானாக கற்பனை செய்து கொண்டு அதைப்பற்றி பேச வேண்டும்.
- எ.கா: அந்தச் சீட்டில், “பூ” என்றிருந்தால், “நான் தாமரையாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் தாமரை நம் தேசிய மலர்” என்பது போல பேசலாம்.
எ.கா 2: அந்த சீட்டில் “பூஜை பொருட்கள்” என்று இருந்தால், “நான் தீபமாக இருக்க விரும்புகிறேன் ஏனெனில் தீபம் இருட்டை விரட்டி வெளிச்சத்தை நான் தீபமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் தீபம் இருட்டை விரட்டி வெளிச்சத்தை தருகின்றது” என்பது போல் குழந்தை பேசலாம். - மேற்கண்டவாறு கிண்ணத்தில் உள்ள எல்லா சீட்டுகளும் முடிவடையும் வரை (அ) எல்லா குழந்தைகளும் இந்த விளையாட்டில் பங்கேற்கும் வரை இந்த விளையாட்டை தொடரலாம்.