சித்திர மர்மம்
விளையாட்டின் நோக்கம்:
இது குழந்தைகளின் கலைப் பக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு. ஒரு குழந்தையால் வரையப்பட்ட படத்தில் குறிப்பிடப்படும் வார்த்தை/சொற்றொடர்/ யோசனையை மற்ற ஆட்டக்காரர்கள் யூகிக்க வேண்டும்.
கற்பிக்கப்படும் குணங்கள்:
- கற்பனை
- படைப்பாற்றல்
- ஆர்வம்
- விசாரணை செய்தல்
- காட்சிப்படுத்தல்
தேவையான பொருட்கள்:
- வெள்ளை பலகை மற்றும் பேனாக்கள்
- காகிதம் & பென்சில்கள்
- வார்த்தைகள் மற்றும் சீட்டுகளின் பட்டியல்
குருவிற்கான ஆயத்த வேலைகள்:
- குரு பாடம் சார்ந்த கருத்துகளின் பட்டியலைத் தயாரிக்கிறார். பட்டியலில் பின்வரும் பிரிவுகளும் இருக்கலாம்:
- ஆன்மீகம்: கிருஷ்ணர், விஷ்ணு, சிவன், சுப்பிரமணியர், கணேஷ், புத்தர், இயேசு, ஜோராஸ்டர்
- ஆளுமைகள்: காந்திஜி, சாச்சா நேரு, கவிஞர் பாரதியார், விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி, மீராபாய்
- மதிப்புகள் மற்றும் துணை மதிப்புகள்: மகிழ்ச்சி, அன்பு, பகிர்வு, அக்கறை, ஒற்றுமை, அமைதி, நீதி, நட்பு, பாதுகாப்பு, ஆற்றல், தேசபக்தி, கவனம், அமைதி, தூய்மை, தியாகம்
- உணர்வுகள்:ஒலி, தொடுதல், சுவை, பார்வை, வாசனை
- சாய் மேற்கோள்கள்:
- பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை
- ஹீரோக்களாக இருங்கள், பூஜ்ஜியங்களாக அல்ல
- அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்
- காட்டில் தலை, சமுதாயத்தில் கை
- மௌனம் சாய்-லென்ஸ்
- பணம் வரும், போகும்; ஆனால் ஒழுக்கம் வந்து வளரும்
- நேரத்தை வீணடிப்பதால் வாழ்க்கை வீணாகும்
- நல்லதே பார்க்கவும், நல்லதே கேட்கவும், நல்லதே செய்யவும்
- நிலையாக இருக்க படிக்க வேண்டும்
- வாழ்க்கை ஒரு விளையாட்டு, விளையாடு
அடுத்து, ஒவ்வொன்றிலும் ஒரு வார்த்தையை (பட்டியலிலிருந்து) எழுதி சீட்டுகளைத் தயார் செய்கிறார்.
விளையாட்டு:
- ஒரு குழந்தைக்கு வார்த்தை/சொற்றொடர் எழுதப்பட்ட ஒரு சீட்டு கொடுக்கப்படுகிறது. (உதாரணம்: அன்பு)
- குரு பின்னர் அக்குழந்தையை அவ்வார்த்தையை (அன்பைக்) குறிக்கும் ஒரு படமோ, உருவமோ பலகையில் வரையச் சொல்கிறார்.
- குரு அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களைச் சுட்டிக் காட்டவோ அல்லது வாய்மொழியாகவோ பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.
- வரையப்பட்ட படத்திலிருந்து (எடுத்துக்காட்டு: ❤), அவரது சீட்டில் எழுதப்பட்ட வார்த்தை ‘அன்பு’ என்று மற்ற வகுப்பினர் யூகிக்க வேண்டும்.
- வரையப்பட்டதை மற்ற வகுப்பினர் சரியாக ஊகிக்கவில்லை என்றால், புதிய திசையில் முயற்சி செய்யலாம், எடுத்துக்காட்டாக, மேலும் தொடர்புடைய படங்களை வரைந்து, அப்புதிய தடயங்களையும் ஒன்றாகச் சேர்த்து, சரியான பதிலைத் தூண்டும் வரை அவர் மேலும் முயற்சிக்கலாம்..
- அவர்கள் வார்த்தையை யூகிக்க முடிந்தவுடன், வரைவதற்கு அடுத்த வாய்ப்பு மற்றொரு குழந்தைக்கு செல்கிறது.
- ஆனால், பலமுறை முயற்சித்தாலும், அந்தக் குழந்தை அந்த வார்த்தையைச் சரியாகக் குறிப்பிடத் தவறினால், மற்றொரு குழந்தைக்கு அதே சீட்டை வழங்கலாம்.
- பிரிவில் உள்ள அனைத்து வார்த்தைகளும் (உதாரணம்: சாய் மேற்கோள்கள்) தீர்ந்து, ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு கிடைக்கும் வரை விளையாட்டு இந்த முறையில் தொடரும்.
இந்த வேடிக்கை நிறைந்த விளையாட்டு கலை மற்றும் ஆக்கப்பூர்வமான காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் கலவையாகும்!!!