ப்ரஹ்மார்ப்பணம்

கேட்பொலி
ஸ்துதி வரிகள்
- ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்ம
- ஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா
- ஹுதம் ப்ரஹ்மைவ தேன
- கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதினா
விளக்கவுரை
அர்ப்பணம் செய்தல் பிரம்மம். அர்ப்பணம் செய்யப்படும் ஹவிஸ் (நெய், போன்ற பொருட்கள்) பிரம்மம். பிரம்மமாகிய அக்னியில், பிரம்மத்தால் கொடுக்கப்படுகிறது. பிரம்மத்தினிடம் தன் மனதை முழுவதும் லயிக்க வைத்து, தன் காரியங்கள் அனைத்தும் செய்பவன், பிரம்மத்தை அடைகிறான்.

பதவுரை
| அர்ப்பணம் | அர்ப்பணம் செய்தல் |
|---|---|
| ப்ரஹ்ம | பிரம்மம் |
| ஹவி: | ஹவிஸ் (நெய் போன்றவை) |
| ப்ரஹ்ம | பிரம்மம் |
| ப்ரஹ்மாக்னௌ | பிரம்மமாகிய அக்னியில் |
| ப்ரஹ்மணா | பிரம்மத்தால் |
| ஹுதம் | கொடுக்கப்படுகிறது |
| ப்ரஹ்ம கர்ம | பிரம்மமாகிய கர்மத்தில் |
| ஸமாதினா | மனம் ஒருமித்துள்ள |
| தேன | அவனால் |
| ப்ரஹ்ம ஏவ | பிரம்மமே |
| கந்தவ்யம் | அடையப்படுகிறது |
Overview
- Be the first student
- Language: English
- Duration: 10 weeks
- Skill level: Any level
- Lectures: 1
-
மேலும் படிக்க





















