ஜோதி தியானம்
தியானத்தின் நுணுக்கத்தைப் பொருத்த அளவில், பல ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் பலவகையான அறிவுரைகளைத் தருகிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு மிகவும் பரவலான மற்றும் மிகப் பலன் தரும் வகையினைத் தருகிறேன். ஆன்மீக ஒழுங்கில் இதுவே முதல்படி. தினசரி சில நிமிடங்களை இதற்கென ஒதுக்கிவிடுங்கள். பின்னர் நீங்கள் பெறுகின்ற பேரானந்தத்திற்கு ஏற்றவாறு காலஅளவை நீட்டி விடுங்கள். அது, சூரிய உதயத்திற்கு முந்தைய காலகட்டமாக இருக்கட்டும். இதுவே சிறந்தது. ஏனெனில், உடலானது உறக்கத்திற் குப்பின்னர் புத்துணர்வுடன் உள்ளது. நாள் முழுவதும் நீங்கள் மேற்கொண்டுள்ள பணியின் தாக்கம் உங்களைப் பாதிக்காது.
பத்மாசனத்திலோ (தாமரை வடிவம்) அல்லது வேறு வசதியான அமைப்பிலோ எரியும் விளக்கு (அ) மெழுவர்த்தியின் முன்பு அமருங்கள். அந்த சுடரையே சீராக சிறிது நேரம் உற்று நோக்குங்கள். பின் உங்களது கண்களை மெல்ல மூடி, எரியும் சுடரை உங்களது இரு புருவங்களுக்கு இடையே காண முயலுங்கள். அது உங்களது இதயம் எனும் தாமரையினுள். பாதையினை ஒளியூட்டியப்படி சென்று இறங்கட்டும். இதயத்துள் நுழைந்தபின் தாமரையின் இதழ்கள் ஒன்று ஒன்றாக மெல்லத்திறக்குமாறு கற்பனை செய்திடுங்கள். ஒளியில் ஒவ்வொரு எண்ணமும், உணர்வும், சிந்தனையும் நீராடட்டும். அவற்றில் உள்ள இருள் முழுவதும் அகலட்டும். இருள் மறைவதற்கான இடமே இல்லை. சுடரின் பிரகாசம் பரந்தும், மேலும் பிரகாசம் கொண்டும் விரிகிறது. அது உங்களது உறுப்புக்களை வியாபிக்கட்டும். இப்பொழுது அந்த உறுப்புக்கள், என்றும் இருளில், சந்தேகம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய செயல்களில் ஈடுபடாது. ஏனெனில், ஒளி மற்றும் அன்பின் உபகரணங்களாக அவை மாறிவிட்டன. ஒளி நாவினைச் சென்று அடையும் பொழுது. அதிலிருந்து பொய்யானது மறைந்து விடுகிறது. அது கண்கள் மற்றும் காதுகளுக்கு உயரட்டும். அவற்றைத்தாக்கிடும் இருள் அனைத்தையும் அழிக்கட்டும் உங்களை வக்கிரமான காட்சிகள் மற்றும் அற்பமான பேச்சுக்களிலிருந்து திருப்பி. உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும்.
உங்களது தலை ஒளியால் உயிரூட்டப்படும். அதிலிருந்து, அனைத்து வஞ்சக எண்ணங்களும் பறந்தோடிவிடும். உங்களின் உள் இருக்கும் ஒளி மேன்மேலும் ஆழமாவதாக உணருங்கள். அது உங்களை சுற்றி எங்கும் ஒளி பெற்று பரவட்டும். ஒவ்வொரு பரவுகின்ற வட்டங்களிலும், உங்களது நெருக்கமான நபர்களை, உற்றார், உறவினரை, உங்களது நண்பர் மற்றும் சகாக்களை, உங்களது எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வேற்று மனிதர்களை, உயிர்வாழ் இனம் , உலகம் முழுவதனையும் வியாபிக்கட்டும்.
ஒளியானது, புலன்கள் அனைத்தையும் தினசரி ஒளியூட்டுவதனால், ஆழமாக மிகக்கிரமமாக இது நிகழ்ந்து வருவதனால் உங்களால் இனி இருள் மற்றும் தீய காட்சிகளைக் கண்டு மகிழும் நிலையே இல்லாத காலம் வந்துவிடலாம். இருளான, பாபம் நிரம்பிய கதைகளுக்குத்தாபம் கொள்ளுதல், அடிப்படைக்கான தாகம், ஆபத்து நிரம்பிய உணவு, பானம் ஆகியவற்றிற்கான தாகம். மோசமான அற்பமான தன்மைகளை மேற்கொள்ளுதல். தீய புகழ் மற்றும் காயம் அடையும் இடங்களை அணுகுதல் அல்லது எவரையேனும், ஏதேனும் ஒருவகையில் எக்காலத்திலும் தீய வகையில் வடிவமைப்பது போன்ற தன்மைகள் விலகிவிடும். எல்லா இடங்களிலும் பரவியுள்ள ஒளியினைக் காணும் பரவசநிலையில் நின்றபடி இருங்கள். இப்பொழுது, நீங்கள் இறைவனை ஏதேனும் ஒருவகையில் போற்றித்துதித்தால், எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள ஒளியில் அந்த வடிவினைக் காண முயலுங்கள். ஏனெனில் ஒளியே இறைவன்: இறைவனே ஒளி.
நான் அறிவுறுத்தியபடி முறையாக, தினசரி தியானத்தைப் பயிலுங்கள் மற்ற நேரங்களில் இறைவனது நாமத்தை ஜபித்திடுங்கள் (அவரது சிறப்புக்களுடன் பல நறுமணம் கமழும் ஒரு பெயரையும்), அவரது வலிமை, கருணை மற்றும் உதாரகுணத்தினை கருத்துடன் நினைவில் கொண்டபடி, இதனைப் புரிந்திடுங்கள்.
[Source: Sri Sathya Sai Baba Sathya Sai Speaks, Volume X, Page 348-350, Shivarathri, 1979]