தியானம்
இறைவனது சாரத்தை அவருடைய மிக உயரிய நிலையில் பெறுவதற்கு ஒருவர் தனது சாரத்தினுள் மிகவும் ஆழ்ந்து செல்லுதல் வேண்டும். ஏனெனில், தன்னை அறியாதவன் இறைவனை அறிய இயலாது.
வசதியான மற்றும் நிலையான வகையில் ஒருவர் அமர்ந்த பின்னர், சுவாசத்தை சீராக்கி, பிரத்யாஹாரமும் (புலப் பொருட்களில் இருந்து புலன்களை விடுவித்தல்), அங்க நியாசனமும் (உடலின் அனைத்து உறுப்புகளின் தூய்மை) செய்திட வேண்டும். ஒளியே மிகச்சிறந்த தூய்மை அளித்திடும் சாதனம். ஏனெனில், அது இருள் அனைத்தையும் விரட்டுகிறது. ஒளியானது உடல் முழுவதும் பயணிக்கச் செய்யப்படுகிறது. அனைத்து உறுப்புகளையும், புலன்களையும் தூய்மையாக்கி, இதயமெனும் தாமரையை நிலைத்திட செய்து அதில், தியானத்திற்கும் (மனக் குவிப்பு மற்றும் ஆழ்சிந்தனை), முடிவில் சமாதிக்கும் (பேரானந்தத்தின் மிக உயரிய உணர்வு நிலை) இட்டுச்செல்லும். தாரணம் (மனக் குவிப்பு) எனும் இலக்கிற்காக இறைவனது வடிவத்தை அதில் பவச்சித்திரமாக (மனதில் கொள்ளப்படும் சித்திரத்தின் எண்ணம்) திகழச் செய்திட வேண்டும்.முதலில், நீங்கள் தியானத்திற்கு அமர்கின்ற பொழுது, இறைவனது புகழ் குறித்த சில ஸ்லோகங்களை ஜபித்திடுங்கள். அதன் வாயிலாகப் பதற்றம் நிரம்பிய மனம் சற்று அமைதி பெரும். பின் மெல்ல மெல்ல, ஜபம் செய்கின்ற பொழுது, மனக் கண் முன்பு அந்தப் பெயர் பிரதிபலிக்கும் வடிவத்தினைக் கொண்டு வாருங்கள். பெயரை ஜபிப்பதில் இருந்து மனம் அலைகின்ற பொழுது, மனத்தை அந்தச் சித்திரத்தின் மீது திருப்புங்கள். அதே போல் மனம் சித்திரத்தில் இருந்து விலகிச் செல்லும் பொழுது, வடிவத்தின் பெயருக்கு திருப்புங்கள். மனம் இந்த இரண்டில் எதிலாவது நிலைத்து இருக்கட்டும். அவ்வாறு பழக்கப்படுத்துகின்ற பொழுது, மனதை எளிதில் அடக்கிட இயலும். நீங்கள் வரைந்துள்ள கற்பனைச் சித்திரமானது, பவசித்திரமாக இதயத்திற்கு பிடித்தமானதாக நினைவில் நிறுத்தப்படும் வகையில் மாற்றம் பெற்றிடும். மெல்லமெல்ல, அது சாட்சாத்கார் சித்திரமாக (உண்மையான வடிவின் காட்சி) மாற்றம் கொள்ளும். உங்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக இறைவன் அந்த வடிவினை ஏற்கும் போது இது நிகழும். இந்த சாதனை, ஜபஸஹித தியானம் (தியானம் – நாமத்தை ஜபித்தல்) என அழைக்கப்படுகிறது. அதனை நீங்கள் மேற்கொள்ளுமாறு உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். ஏனெனில், தொடங்குபவர்களுக்கு இந்த வகை தியானமே சிறந்ததாகும்.
மனித உடலானது, பல பிறவிகளில் பெற்ற நற்செயல்களின் வாயிலாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. சம்சாரம் எனும் கடலை கடக்க உதவிடும் படகாக அதனை மதிக்கும் நிலையில், அதனை நன்றி நிரம்பிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.பகவத்கீதை உடலை ‘ஷேத்திரம்’ என அழைக்கிறது. இதன் பொருள் ‘களம்’. ஒருவர் அதில் புனிதம் அல்லது பாவத்தினை விதைத்து, குறிப்பிட்ட தன்மையான விளைச்சலை அறுவடை செய்திடலாம். விதையை விதைக்கும் முன்பு, உங்களுக்குத் தேவைப்படும் பயிரைத் தேர்வு செய்திடுங்கள். ஷேத்திரம் என்றால் ‘பூமி முழுவதும்’ என்றும் பொருளாகிறது. இந்தப் பதத்தின் மற்றொரு அர்த்தமுள்ள பொருள் ‘புனிதமான இடம்’. நாம் ‘காசி – ஷேத்திரம்’ ‘பிரயாகை – ஷேத்திரம்’ எனக் கூறுகிறோம். அந்த இடங்கள் புனிதமானவை என்பதனையே இவை குறிக்கின்றன. இந்த உடலும் கூட ஒரு ஷேத்திரமே. ஏனெனில் அதில் கடவுள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் வாயிலாக வழிபாடு செய்யப்படும் கோவில் ஆகும். இந்த கோவிலானது தூய்மைப் படுத்தப்பட்டு, ஆரோக்கியமுடனும் தூயதாகவும் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு புலன் உறுப்பினையும் அவற்றின் எல்லைகளுடன் பயன்படுத்துங்கள்
தூய்மையை பாதுகாத்து வளர்க்க பல முறை நீராடுவதோ அல்லது ‘தொடக்கூடாதவர்’ என பழிக்கப்படுபவர் உடனான தொடர்பினை தவிர்ப்பதோ அல்ல. ‘தொடாதீர்கள்’ எனும் மேலோட்டமான அடையாளத்தை அனுசரிப்ப தால் நீங்கள் தூய்மை பெற மாட்டீர்கள். உடலானது நீரால் சுத்தம் செய்யப்பட்டால், தூய்மையாகும்; பேச்சானது, உண்மையால் நிரம்பும் பொழுது தூய்மை அடைகிறது; வாழ்க்கையானது தவத்தால் (ஆன்மீக அனுசரிப்பு) புனிதமாகும் பொழுது, தூய்மை அடைகிறது. புத்தியானது ஞானத்தின் வாயிலாக களங்கம் இன்றி தெளிவாகிறது (ஆன்மீக ஞானம்) அனைத்திற்கும் மேலாக, நீங்கள் உடல் அல்ல, இந்த உடலில் வசிப்பவர் மட்டுமே எனும் தீர்மானம், உங்களின் உள் வளர வேண்டும். நீங்கள் உங்களுடன் எடுத்துச் செல்லும் உடலுடன் உங்களை அடையாளம் கொண்டால், பின் நீங்கள் துன்பத்தினை வரவேற்றுத் துயரம் அடைகிறீர்கள். மாறாக, இன்பமும், அமைதியும் உங்களை வாழ்த்திடக் காத்துக்கொண்டு இருக்கின்றன.
இப்பொழுது இந்திரியங்கள் பற்றி (புலன்கள்)அவை மாத்ரங்கள் என அறியப்படுகின்றன. அதன் பொருள் ‘அளவுகள்’. ஏனெனில் ஒவ்வொரு புலனும், அனுபவத்தின் குறிப்பிட்ட அளவினை உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றுள்ளன. ‘தால்’ எனும் பதார்த்தம் (பருப்பு) அதனை ருசியாக்க உப்பினை சேர்க்கவேண்டும். நாவானது, அதில் இடப்பட்டுள்ள உப்பு அதிகமா, குறைவா அல்லது சரியாக உள்ளதா என்று மதிப்பீடு செய்கிறது. “இந்த முகம் அழகாக உள்ளது ஆனால் மூக்கு சந்து சற்று கோணலாக உள்ளது” என கண்கள் அறிவிக்கின்றன. “பாடல் இனிமையாக உள்ளது; ஆனால் அது கொடுமையாக இருந்தது” என காது அறிவிக்கிறது. மாத்ரா என்றால் எல்லை எனவும் பொருளாகிறது.
ஒவ்வொரு புலன் உறுப்பும் அது கொண்டுள்ள எல்லைகள் உணரப்பட்டு, பயன்படுத்தப்பட வேண்டும். எல்லைக்கு அப்பால் அது தவறாக பயன்படுத்துதலும், இறைவன் அளித்த உபகரணத்தை இழிவுபடச் செய்தலும் ஆகும். எடுத்துக்காட்டாக, மூக்கு என்பது சுவாசிப்பதற்கும், நறுமணத்தை நுகரவும், எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் பலர் அதில் மூக்குப்பொடியால் அடைத்து, தரம் தாழ்த்துகின்றனர். நாவானது ராஜச மற்றும் தாமச வகை உணவுப் பண்டங்களை (ஆசையைத் தூண்டும் மற்றும் செயலற்று இருப்பதனை ஊக்கப்படுத்தும்) உண்பதன் வாயிலாக மாசு படுத்தப்பட்டு, ஆபத்தான சாதனங்களை விழுங்கி மனிதனை தரம் தாழ்த்துகின்றது. அனைத்து புலன் உறுப்புகளும் இவ்வகையில் மனிதனால் முறையற்ற, ஒவ்வாத அல்லது நேரான வழி அல்லாத வகையில் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக சீர் அழிக்கப்படுகின்றன. இதன் விளைவாக மனிதன் மனநோய் மற்றும் உடல் நோய்களால் தாக்கப்படுகிறான்.உடலானது அசையாத பொருட்களின் தொகுப்பு. ஆனால் அது வளர்ந்து, பின் மெலிந்து, அழிகிறது. இவை அனைத்தும் உள்ளிருந்து இயக்கும் உணர்வு நிலையினால் நடக்கிறது. இல்லையெனில், அசையாத பொருளின் குவியல் மாற்றங்களுக்கு உட்படுவது என்பது புற அம்சங்களின் வாயிலாகக் கூட்டுவது அல்லது குறைப்பது ஆகியவற்றால் மட்டுமே.
குருமார்கள் தினசரி குறைந்த பட்சமாக ஒரு முறையேனும் தியானம் செய்திட வேண்டும்
அடுத்தது மனம். மனனம் மனா -“மனமே நினைவில் கொண்டு, மீண்டும் நினைவு கூர்ந்து, பிரகாசிக்கிறது”. இந்த மன செயல்பாடானது, தீர்மானங்களை உருவாக்குவதிலோ அல்லது அவற்றைக் கலைப்பதிலோ விளைகின்றது – சங்கல்பம் அல்லது விகல்பம். மனமானது நேர் மற்றும் குறுக்கு இழையாகும். வலியுறுத்துதல் மற்றும் மறுத்தல், செய்வன, செய்யக்கூடாதன, சங்கல்பம் மற்றும் விகல்பம். இவற்றை தவிர அதில் வேறு எதுவும் இல்லை. உறக்கம் அதன் செயல்பாட்டினை நிறுத்தும் வரையில், மனம் அவற்றில் ஈடுபட்டுள்ளபடி உள்ளது. சில நேரங்களில், அந்த தீர்மானம் அல்லது அந்தத் தீர்மானத்திற்கு பின் உள்ள உறுதி மிகவும் வலுவாகத் திகழும் பொழுது, மனம் அதன் எல்லைகளைக் கடந்து, மனிதனைப் பித்தனாக மாற்றிவிட்டது.
மனதை அமைதிப்படுத்தி, மாற்றிவிட்டது. நிலையில் நிறுத்துவதற்காக தியானம், சாதனையாக அறிவுறுத்தப்படுகிறது. மனிதனின் நேர் மற்றும் எதிர் தன்மைகள் ஒழுங்குபடுத்தப்படும் செயல்பாடே தியானம் ஆகும். மனிதன் எல்லையற்ற பேரானந்தத்தை, நிர்விகல்ப சமாதி எனும் நிலையினை அடையும் பொழுது மட்டுமே பெறுகிறான். (மிக உயரிய உணர்வு நிலையின் உச்சக்கட்ட நிலையாகியப் பேரானந்த நிலை). இதன் மிக நுண்ணிய அளவு மனிதனுக்கு, அவனது ஆழ் உறக்க, கனவற்ற உறக்க நிலையில் வழங்கப்படுகிறது. அப்பொழுது, எந்த ஆசையோ அல்லது விருப்பமோ, அல்லது மறுப்போ அவனை பாதிக்காது. தியானத்தின் வாயிலாக நிர்விகல்ப சமாதியினை நாம் அடையும் பொழுது, அப்பேரானந்தம் எத்தகு நிறைவினைத் தந்திடும். அப்பொழுது நம்மை நிரப்புகின்றன ஆனந்தமானது (பேரானந்தம்) பவதீதம், திரிகுண ரஹிதம் என “கற்பனைக்கு அப்பாற்பட்டு, குணாதிசயத்தின் மூன்று வகைகளில் எவ்விதத் தடயமும் இன்றி” சித்தரிக்கப்படுகிறது.”
குழந்தைகளை ஒளியினை நோக்கி இட்டுச் செல்வதற்காக உங்களையே அர்ப்பணித்துக் கொண்டுள்ள குருமார்களாகிய நீங்கள், தியானம் எனும் ஒழுங்கினை தினம் ஒரு முறையாவது பயிற்சி செய்து, இந்தப்பேரானந்தத்தையும், சமத்துவத்தையும் பெற்றிடுங்கள். ஆனந்தம் எனும் பரிசினைப் பெற்றுக் கொண்டவர்கள். மற்றவர்கள் மீது ஆனந்தத்தை வழங்கி விடலாம். ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரனை எங்ஙனம் ஆதரித்திட இயலும்? எந்த ஒரு வறியவனும் மற்றொரு வறியவனை செல்வந்தன் ஆக்கிட இயலாது. ஆனந்தத்தால் செல்வந்தனாக உள்ள மனிதன் தன்னை சுற்றியுள்ளவரிடம் ஆனந்தத்தினையேப் பகிர்ந்து கொள்வான். ஆகவே, குருமார்களாகிய உங்களுடைய முதல் கடமை பெறுவதும், இரண்டாவதாக ஆனந்தத்தினை வழங்குவதும் ஆகும். சாதனை நிரம்பிய வாழ்க்கை, ஒவ்வொரு குருவிற்கும் அவசியமாகும்.
இறைவனது சாரத்தை அவருடைய மிக உயரிய நிலையில் பெறுவதற்கு ஒருவர் தனது சாரத்தினுல் மிகவும் ஆழ்ந்து செல்லுதல் வேண்டும். ஏனெனில், தன்னை அறியாதவன் இறைவனை அறிய இயலாது.
வசதியான மற்றும் நிலையான வகையில் ஒருவர் அமர்ந்த பின்னர், சுவாசத்தை சீராக்கி, பிரத்யாஹாரம் (புலப் பொருட்களில் இருந்து புலன்களை விடுவித்தல்), அங்க நியாசனமும் (உடலின் அனைத்து உறுப்புகளின் தூய்மை) செய்திடவேண்டும். ஒளியே மிகச்சிறந்த தூய்மை அளித்திடும் சாதனம். ஏனெனில் அது இருள் அனைத்தையும் விரட்டுகிறது. ஒளியானது உடல் முழுவதும் பயணிக்கச் செய்யப்படுகிறது. அனைத்து உறுப்புகளையும், புலன்களையும் தூய்மையாக்கி, இதயமெனும் தாமரையை நிலைத்திட செய்து அதில், தியானத்திற்கும் (மனக் குவிப்பு மற்றும் ஆழ்சிந்தனை), முடிவில் சமாதிக்கும் (பேரானந்தத்தின் மிக உயரிய உணர்வுநிலை) இட்டுச்செல்லும். தாரணம் (மனக் குவிப்பு) எனும் இலக்கிற்காக இறைவனது வடிவத்தை அதில் பவச்சித்திரமாக (மனதில் கொள்ளப்படும் சித்திரத்தின் எண்ணம்) திகழச் செய்திட வேண்டும்.
முதலில், நீங்கள் தியானத்திற்கு அமர்கின்ற பொழுது, இறைவனது புகழ் குறித்த சில ஸ்லோகங்களை ஜபித்திடுங்கள். அதன் வாயிலாகப் பதற்றம் நிரம்பிய மனம் சற்று அமைதி பெரும். பின் மெல்ல மெல்ல, ஜபம் செய்கின்ற பொழுது, மனக்கண் முன்பு அந்தப் பெயர் பிரதிபலிக்கும் வடிவத்தினைக் கொண்டு வாருங்கள். பெயரை ஜபிப்பதில் இருந்து மனம் அலைகின்ற பொழுது, மனத்தை அந்தச் சித்திரத்தின் மீது திருப்புங்கள். அதே போல் மனம் சித்திரத்தில் இருந்து விலகிச் செல்லும் பொழுது, வடிவத்தின் பெயருக்கு திருப்பங்கள். மனம் இந்த இரண்டில் எதிலாவது நிலைத்து இருக்கட்டும் அவ்வாறு பழக்கப்படுத்துகின்ற பொழுது, மனதை எளிதில் அடக்கிட இயலும். நீங்கள் வரைந்துள்ள கற்பனைச் சித்திரமானது, பவசித்திரமாக இதயத்திற்கு பிடித்தமானதாக நினைவில் நிறுத்தப்படும் வகையில் மாற்றம் பெற்றிடும். மெல்லமெல்ல, அது சாட்சாத்கார் சித்திரமாக (உண்மையான வடிவின் காட்சி) மாற்றம் கொள்ளும். உங்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக இறைவன் அந்த வடிவினை ஏற்கும் போது இது நிகழும். இந்த சாதனை, ஜபஸ ஹித தியானம் (தியானம் – நாமத்தை ஜபித்தல்) என அழைக்கப்படுகிறது. அதனை நீங்கள் மேற்கொள்ளுமாறு உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். ஏனெனில், தொடங்குபவர்களுக்கு இந்த வகை தியானமே சிறந்ததாகும்.
இறைவனை பிரதிஷ்டை செய்திடும் கோவிலே உடல்
சில நாட்களில் நீங்கள் இவ்வித பயிற்சிக்கு பழகி விடுவீர்கள். தியானத்தின் ஆனந்தத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆரம்ப நிலைகளில் இந்த தியானம் 10 அல்லது 15 நிமிடங்கள் முடிந்த பின்னரும் அதிக நேரம் நீடிக்கும். அதற்குப் பின்னர் தியானம் செய்யும்போது மனத்தை சாந்தியின் மீதும் சௌக்கியத்தின் மீதும் இருக்குமாறு செலுத்துங்கள்.
இது உங்களது தன்னம்பிக்கைக்கும், நடுநிலைக் கும் உதவும். திடீரென எழுந்து நடமாடாதீர்கள். உங்களது பணிகளை செய்யத் துவங்காதீர்கள். உறுப்புகளை தளர் வாக்கி, மெல்ல, மெல்ல உங்களது கடமைகளைத் துவக்கிடுங்கள்
ஆரம்பத்தில் அதிக காலம் உங்களால் மனதினைக் குவிக்க இயலவில்லை என வருத்தம் அடையாதீர்கள். நீங்கள் மிதி வண்டி ஓட்டக் கற்கும் பொழுது உடனடியாக அதனை சமாளிக்கும் திறனை நீங்கள் கற்பதில்லை. அந்த மிதிவண்டியைத் திறந்த வெளிக்கு எடுத்துச் சென்று பின் குதித்து, முயன்று, ஒரு பக்கமாக மிதிக்க முயன்று, பின் வண்டியுடன் பலமுறை முயன்று முடியாது வீழ்ந்து, பின் மிகுந்த திறனுடன் அதனை ஓட்டக் கற்கிறீர்கள். பின் விழுந்து விடும் என்ற கவலை யினை நீங்கள் கொள்வதே இல்லை. பின் தானாகவே வண்டி விழாது செல்வதற்கான அவசியமான நுணுக்கங்களை கற்றுக் கொள்கிறீர்கள்.
அவ்வாறு நீங்கள் திறன் பெற்ற பின்னர், நீங்கள் சந்து பொந்துகளிலும், குறுகிய வீதிகளிலும் சென்று விடலாம். திறந்த வெளிக்குச் செல்ல வேண்டியது இல்லை. உங்களது மிதிவண்டியை நீங்கள் மிக நெரிசலான இடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம். அதேபோன்று பயிற்சியும் உங்களுக்கு கவனக்குவிப்பு அளித்திடும். அது மிகவும் கஷ்டமான மற்றும் மிகவும் கடினமான சூழல்களிலும் கூட உங்களுக்கு மன குவிப்பினை எளிதில் அளித்திடும்.
தியானத்தின் நுணுக்கத்தைப் பொருத்த அளவில், பல ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் பலவகையான அறிவுரைகளை தருகிறார்கள். ஆனால் நான் உங்களுக்கு மிகவும் பரவலான மற்றும் மிக பலன் தரும் வகையினைத் தருகிறேன். ஆன்மீக ஒழுங்கில் இதுவே முதல் படி. தினசரி சில நிமிடங்களை இதற்கென ஒதுக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் பெறுகின்ற பேரானந்தத்திற்கு ஏற்றவாறு கால அளவை நீட்டி விடுங்கள். அது சூரிய உதயத்திற்கு முந்தைய காலகட்டமாக இருக்கட்டும். இதுவே சிறந்தது. ஏனெனில், உடலானது உறக்கத்திற்குப் பின்னர் புத்துணர்வுடன் உள்ளது. நாள் முழுவதும் நீங்கள் மேற்கொண்டுள்ள பணியின் தாக்கம் உங்களைப் பாதிக்காது.
பத்மாசனத்திலோ (தாமரை வடிவம்) அல்லது வேறு வசதியான அமைப்பிலோ எரியும் விளக்கு அல்லது மெழுகுவர்த்தியின் முன்பு அமருங்கள். அந்த சுடரையே சீராக சிறிது நேரம் உற்று நோக்குங்கள். பின் உங்களது கண்களை மெல்ல மூடி எரியும் சுடரை, உங்களது இரு புருவங்களுக்கு இடையே காண முயலுங்கள். அது உங்களது இதயமெனும் தாமரையினுள், பாதையினை ஒளியூட்டியபடி சென்று இறங்கட்டும். இதயத்துள் நுழைந்தபின் தாமரையின் இதழ்கள் ஒன்று ஒன்றாக மெல்லத் திறக்குமாறு கற்பனை செய்திடுங்கள். ஒளியில் ஒவ்வொரு எண்ணமும், உணர்வும், சிந்தனையும் நீராடட்டும். அவற்றில் உள்ள இருள் முழுவதும் அகலட்டும். இருள் மறைவதற்கான இடமே இல்லை. சுடரின் பிரகாசம் பரந்தும் மேலும் பிரகாசம் கொண்டும் விரிகிறது. அது உங்களது உறுப்புக்களை வியாபிக்கட்டும். இப்போது அந்த உறுப்புக்கள் என்றும் இருளில், சந்தேகம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய செயல்களில் ஈடுபடாது. ஏனெனில் ஒளி மற்றும் அன்பின் உபகரணங்களாக அவை மாறிவிட்டன. ஒளி நாவினைச் சென்று அடையும் பொழுது, அதிலிருந்து பொய்யானது மறைந்துவிடுகிறது. அது கண்கள் மற்றும் காதுகளுக்கு உயரட்டும். அவற்றைத் தாக்கிடும் இருள் அனைத்தையும் அழிக்கட்டும். உங்களை வக்கிரமான காட்சிகள் மற்றும் அற்பமான பேச்சுக்களில் இருந்து திருப்பி, உயர்நிலைக்குஅழைத்துச் செல்லும்.
அனைத்து இடங்களிலும் பரவியுள்ள ஒளியில் இறைவனை காணுங்கள்
உங்களது தலை ஒளியால் உயிர் ஊட்டப்படும். அதிலிருந்து அனைத்து வஞ்சக எண்ணங்களும் பறந்தோடிவிடும். உங்களின் உள் இருக்கும் ஒளி மேன்மேலும் ஆழ மாவதாக உணருங்கள். அது உங்களை சுற்றி எங்கும் ஒளிப் பெற்று பரவட்டும். ஒவ்வொரு பரவுகின்ற வட்டங்களிலும், உங்களது நெருக்கமான நபர்களை, உற்றார், உறவினரை, உங்களது நண்பர் மற்றும் சகாக்களை, உங்களது எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வேற்று மனிதர்களை, உயிர்வாழ் இனம் அனைத்தையும், உலகம் முழுவதையும் வியாபிக் கட்டும்.
நண்பர் மற்றும் சகாக்களை, உங்களது எதிரிகள் மற்றும் போட்டியாளர்களை வேற்று மனிதர்களை, உயிர்வாழ் இனம் அனைத்தையும், உலகம் முழுவதையும் வியாபிக் கட்டும்.
ஒளியானது, புலன்கள் அனைத்தையும் தினசரி ஒளியூட்டுவதனால், ஆழமாக மிகக் கிரமமாக இது நிகழ்ந்து வருவதனால் உங்களால் இனி இருள் மற்றும் தீய காட்சிகளைக் கண்டு மகிழும் நிலையே இல்லாத காலம் வந்துவிடலாம். இருளான, பாபம் நிரம்பிய கதைகளுக்கு தாபம் கொள்ளுதல், அடிப்படைக்கான தாகம், ஆபத்து நிரம்பிய உணவு, பானம் ஆகியவற்றிற்கான தாகம், மோசமான, அற்பமான தன்மைகளை மேற்கொள்ளுதல். தீய புகழ் மற்றும் காயம் அடையும் இடங்களை அணுகுதல் அல்லது எவரையேனும், ஏதேனும் ஒருவகையில், எக்காலத்திலும் தீயவகையில் வடிவமைப்பது போன்ற தன்மைகள் விலகிவிடும். எல்லா இடங்களிலும் பரவியுள்ள ஒளியினைக் காணும் பரவச நிலையில் நின்றபடி இருங்கள். இப்பொழுது, நீங்கள் இறைவனை ஏதேனும் ஒருவகையில் போற்றித் துதித்தால், எல்லா இடங்களிலும் வியாபித்துள்ள ஒளியில் அந்த வடிவினைக் காண முயலுங்கள். ஏனெனில் ஒளியே இறைவன்; இறைவனை ஒளி.
நான் அறிவுறுத்தியபடி முறையாக, தினசரி இந்த தியானத்தை பயிலுங்கள். மற்ற நேரங்களில் இறைவனது நாமத்தை ஜபித்திடுங்கள் (அவரது பல சிறப்புகளுடன் நறுமணம் கமழும் எந்த ஒரு பெயரையும்), அவரது வலிமை, கருணை மற்றும் உதார குணத்தினை கருத்துடன் நினைவில் கொண்டபடி, இதனைப் புரிந்திடுங்கள்.
All India Bala Vikaas Gurus Conference, 21-11-1979